• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /பொல்லார்ட் திடீர் விலகல்? ஹெட்மையரை தட்டித் தூக்கிய MI கேப்டவுன்.. முழு விவரம்!

பொல்லார்ட் திடீர் விலகல்? ஹெட்மையரை தட்டித் தூக்கிய MI கேப்டவுன்.. முழு விவரம்!

தென்னாப்பிரிக்க டி20 லீக் ஏலத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் வாங்கிய கெய்ரன் பொல்லார்ட் தொடரில் இருந்து விலக முடிவெடுத்ததும், எம்ஐ கேப்டவுன் ஹெட்மையரை வாங்கியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Written ByR Balaji
Published: Oct 27, 2026, 08:09 AM IST|Updated: Oct 27, 2026, 08:12 AM IST
joinshare
பொல்லார்ட் திடீர் விலகல்? ஹெட்மையரை தட்டித் தூக்கிய MI கேப்டவுன்.. முழு விவரம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Aavin: ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள் விலை அதிரடி உயர்வு.. புதிய விலை பட்டியல் இங்கே!

Aavin: ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள் விலை அதிரடி உயர்வு.. புதிய விலை பட்டியல் இங்கே!

2

8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கான ‘லீவ் என்கேஷ்மெண்ட்’ 300-லிருந்து 450 நாட்களாக அதிகரிக்க வாய்ப்பு

3

பொல்லார்ட் திடீர் விலகல்? ஹெட்மையரை தட்டித் தூக்கிய MI கேப்டவுன்.. முழு விவரம்!

4

தேனியில் பரபரப்பு.. காவலர்களை தாக்கிவிட்டு 17 விசாரணைக் கைதிகள் தப்பியோட்டம்!

5

புகார் டூ கைது வரை... அன்பில் மகேஷ் வழக்கில் இதுவரை நடந்தது என்ன? - Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரர் கெய்ரன் பொல்லார்டை சுற்றி சர்ச்சை எழுந்துள்ளது. ஏலத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட பொல்லார்ட், பின்னர் தொடரில் விளையாட முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஷிம்ரோன் ஹெட்மையரை எம்ஐ கேப்டவுன் அணி வாங்கிய விதம் குறித்தும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

SA20 ஏலத்தில் நடந்தது என்ன?

தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடருக்கான ஏலத்தில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் கெய்ரன் பொல்லார்டை எம்ஐ கேப்டவுன் அணி ஏலப்பட்டியலில் இடம்பெற செய்தது. இதையடுத்து, அவரை வாங்குவதற்கு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முன்வந்தது. அந்த அணி, பொல்லார்டை ரூ.87.2 லட்சம் என்ற அடிப்படை விலைக்கே ஏலத்தில் எடுத்தது.

ஆனால், பொல்லார்டை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள எம்ஐ கேப்டவுன் அணி ஆர்வம் காட்டவில்லை. இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவிருப்பதால், பணிச்சுமை காரணமாக தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் விளையாட முடியாது என்று பொல்லார்ட், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே தற்போது விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.

ஹெட்மையரை மையமாக கொண்ட சர்ச்சை!

இந்த விவகாரத்தில் ஷிம்ரோன் ஹெட்மையரின் ஏலமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏலத்தில் ஹெட்மையரை வாங்குவதற்கு ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த அணி ஹெட்மையரை ஏலம் எடுக்காத நிலையில், எம்ஐ கேப்டவுன் அணி அவரை ரூ.87.2 லட்சம் என்ற அடிப்படை விலைக்கே வாங்கியது.

ஹெட்மையரை வாங்குவதற்கான வாய்ப்பை ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தவறவிட்டதற்கும், பொல்லார்ட் ஏலத்தில் இடம்பெற்றதற்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வியை ரசிகர்கள் சிலர் எழுப்பியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை பொல்லார்ட் ஏற்கவிருப்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால், அவரை ஏலத்தில் இடம்பெற செய்ததன் பின்னணி என்ன என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெறுகிறது.

திட்டமிட்ட நடவடிக்கையா? ரசிகர்கள் கேள்வி

பொல்லார்டை ஏலத்தில் வாங்கிய பின்னர் அவர் விளையாட முடியாது என தெரிவித்ததாக கூறப்படும் தகவலையும், ஹெட்மையரை எம்ஐ கேப்டவுன் அணி வாங்கியதையும் இணைத்து பார்க்கும் சில ரசிகர்கள், இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிடப்பட்ட நடவடிக்கையா என கேள்வி எழுப்புகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் அணிகளின் நிர்வாகங்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும் என சிலர் வலியுறுத்துகின்றனர்.

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் புகார் அளிக்குமா?

பொல்லார்ட் உண்மையிலேயே தொடரில் இருந்து விலகினால், அவரை ஏலத்தில் எடுத்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த அணி அதிகாரப்பூர்வமாகபுகார் அளிக்குமா, லீக் நிர்வாகம் விளக்கம் கேட்குமா என்பதும் கவனிக்க வேண்டியதாக உள்ளது.

பொல்லார்ட் விலகலுக்கான காரணம் மற்றும் அவரது ஒப்பந்த குறித்த விளக்கத்தை அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே இந்த விவகாரத்தின் முழு பின்னணியை அறிந்துக்கொள்ள முடியும். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket