• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /Explainer: மொஹ்சின் நக்வியின் ACC தலைவர் பதவிக்கு சிக்கல் ஏன்? அடுத்த தலைவர் தமிம் இக்பாலா?

Explainer: மொஹ்சின் நக்வியின் ACC தலைவர் பதவிக்கு சிக்கல் ஏன்? அடுத்த தலைவர் தமிம் இக்பாலா?

மொஹ்சின் நக்வியின் ACC தலைவர் பதவிக்காலம் 2027 ஏப்ரலில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த வாய்ப்பு வங்கதேசத்துக்கு இருப்பதால் அவருக்கு Extension கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written ByR Balaji
Published: Sep 29, 2026, 08:05 PM IST|Updated: Sep 29, 2026, 08:10 PM IST
joinshare
Explainer: மொஹ்சின் நக்வியின் ACC தலைவர் பதவிக்கு சிக்கல் ஏன்? அடுத்த தலைவர் தமிம் இக்பாலா?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவர் மீண்டும் அந்த பொறுப்பில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபகாலமாக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவி வந்தாலும், தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், ACC தலைவர் பதவி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அந்த பதவி ஆசியாவின் ஐந்து முழு உறுப்பினர் நாடுகளிடையே சுழற்சி முறையில் வழங்கப்படுவதுதான்.

நக்வியின் பதவிக்காலம் எப்போது முடிகிறது?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருக்கும் மொஹ்சின் நக்வி, தற்போது ACC தலைவராக உள்ளார். அவரது பதவிக்காலம் 2027 ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பொதுவாக ACC தலைவரின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாக இருக்கும். இந்த பொறுப்பு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து முழு உறுப்பினர் நாடுகளிடையே சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், நக்வியின் பதவிக்காலத்துக்கு பிறகு அடுத்த முறை வங்கதேசத்துக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளது.

அடுத்த ACC தலைவர் யார்?

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தமிம் இக்பால், ACC தலைவர் பொறுப்பை ஏற்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தனது விருப்பத்தை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பதவிக்காலம் முடிந்த பிறகு தமிம் இக்பால் ACC தலைவராக பொறுப்பேற்கும் வாய்ப்பு தொடர்பாக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Extension பெற என்ன தேவை?

நக்வி தனது பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க விரும்பினால், ACC Executive Board-ன் ஆதரவு தேவைப்படும். இந்த Executive Board-ல் ஆசியாவின் ஐந்து முழு உறுப்பினர் நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சில சமயங்களில் ACC தலைவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு உறுப்பினர் நாடுகளிடையே ஒருமித்த கருத்து இருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில் நக்விக்கு Extension வழங்குவது தொடர்பாக அந்த ஒருமித்த ஆதரவு இல்லை என ACC வட்டாரங்களை மேற்கொள் காட்டி தகவல்கள் வெளியாகி உள்ளன. குறைந்தது மூன்று அல்லது நான்கு முழு உறுப்பினர் நாடுகள் அவரது பதவிக்கால நீட்டிப்பை எதிர்க்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

AGM காரணமாக பதவி நீட்டிக்க முடியுமா?

நக்வியின் பதவிக்காலம் முடியும் நேரத்துக்கும் ACC Annual General Meeting எனப்படும் AGM நடைபெறும் காலத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறி, தனது பதவியை AGM வரை நீட்டிக்க வேண்டும் என்ற வாதத்தை அவர் முன்வைக்கலாம் என்ற ஒரு நிலைப்பாடும் உள்ளது.

ACC-யின் AGM பொதுவாக ஆண்டின் கடைசி காலாண்டில் நடைபெறும். ஆனால் ACC உறுப்பினர்கள் கூறும் தகவலின்படி, ACC தலைவரின் பதவிக்காலத்துக்கும் AGM-க்கும் நேரடி தொடர்பு இல்லை. அதாவது AGM எப்போது நடைபெறுகிறது என்பதை அடிப்படையாக வைத்து தலைவரின் இரண்டு ஆண்டு பதவிக்காலத்தை மாற்ற முடியாது. வழக்கமாக தலைவரின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகவே இருக்கும்.

ஜெய் ஷாவுக்கு மட்டும் Extension எப்படி கிடைத்தது.

ACC வரலாற்றில் பதவிக்கால நீட்டிப்பு என்பது முற்றிலும் புதிதான விஷயம் கிடையாது. 2024ம் ஆண்டு ஜெய் ஷா ACC தலைவராக மூன்றாவது ஆண்டும் தொடர்ந்தார். ஆனால் அந்த சமயத்தில் உறுப்பினர் நாடுகளிடையே முழுமையான ஒருமித்த கருத்து இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அடுத்ததாக ACC தலைவர் பதவியை ஏற்க வேண்டிய இலங்கை கிரிக்கெட் வாரியமும் தனது வாய்ப்பை ஜெய் ஷாவுக்காக விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டது. இதனால், அந்த சூழலும் தற்போதைய நக்வி விவகாரமும் ஒன்றாக பார்க்க முடியாது என ACC வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நக்வி பதவியில் தொடர வாய்ப்பு ஏன் குறைவு?

மொஹ்சின் நக்வியின் பதவிக்காலம் 2027 ஏப்ரலில் முடிவடைகிறது. அதன்பிறகு வங்கதேசத்துக்கு தலைவர் பதவி செல்ல வேண்டிய முறை உள்ளது. மேலும், தமிம் இக்பால் அந்த பொறுப்பை ஏற்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நக்விக்கு Extension வழங்குவதற்கு தேவையான ஒருமித்த ஆதரவு தற்போதைய ACC Executive Board-ல் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சமீபத்தில் பரவி வரும் Extension குறித்த ஊகங்கள் இருந்தாலும், தற்போதைய நிலவரப்படி நக்வி தொடர்ந்து ACC தலைவராக இருப்பது சிக்கலானதாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியா - நக்வி இடையே மீண்டும் Trophy விவகாரம்?

நக்வியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு இன்னொரு முக்கியமான சம்பவம் நடைபெற வாய்ப்புள்ளது. வரும் டிசம்பரில் வங்கதேசத்தில் Asian Under-19 Women's Championship தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி நடப்பு இரண்டு முறை சாம்பியனாக உள்ளது.

இந்தத் தொடரில் இந்தியா மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றால், பரிசளிப்பு நிகழ்ச்சியில் நக்வி கோப்பையை வழங்கும் சூழல் உருவாகலாம். சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆண்கள் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிகளில் இந்திய அணிகள் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ள மறுத்த சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.

எனவே, அடுத்த Under-19 மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், கோப்பை வழங்கும் நிகழ்வும் மீண்டும் கவனம் பெறலாம்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket