ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா தோனி...? அவரே சொன்ன முக்கிய தகவல்
வரும் 2027 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு, முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி அளித்த பதிலை இங்கு காணலாம்.
MS Dhoni, IPL 2027: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி, வரும் 2027 ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து நீண்ட நாளுக்கு பின் மௌனம் கலைத்துள்ளார்.
பெங்களூருவில் நடந்த ஹெல்த்கேர் சார்ந்த நிகழ்வில் பங்கேற்ற தோனியிடம், அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஐபிஎல் 2027 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவீர்களா என மருத்துவர் ஒருவர் மேடையில் இந்த கேள்வியை எழுப்பினார்.
தோனியின் நகைச்சுவை பதில்
அதற்கு தோனி அவரது பாணியிலேயே நகைச்சுவையாக, "டாக்டர் நான் அந்த பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். நீங்கள் எனக்கு அந்த பரிசோதனை அறிக்கையை தர வேண்டும். அதன் பிறகு, டிசம்பருக்கு முன்பாக, இன்னும் ஒரு சீசன் விளையாடுவதற்கு நான் எவ்வளவு வலிமையாக இருக்கிறேன் என்பதை பார்க்க வேண்டும்.
ஒருவேளை நான் அப்படி இல்லையென்றால், நீங்கள் என்னிடம் எல்லாவற்றையும் சரியாகச் செய்து, இந்தப் பழைய வாகனம் சாலையில் நன்றாக ஓடுவதையும் உறுதி செய்ய வேண்டும். அதனால் எல்லா அழுத்தமும் அவர்களின் (மருத்துவர்கள்)மீதுதான்..." என்றார்.
தோனி விளையாடுவது ஏறத்தாழ உறுதி
இதன்மூலம், உடற்தகுதி இருக்கும்பட்சத்தில் தோனி மீண்டும் ஒரு சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தோனியின் பதிலை கேட்டு சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.
மேலும் படிக்க | சிஎஸ்கே குறிவைக்கும் இளம் வீரர்.. போட்டிபோடும் SRH, KKR! முழு விவரம்
தோனி விளையாடுவாரா என சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதனிடம் முன்னர் கேள்வி எழுப்பியபோது, இப்போதும் தோனி அணியின் வீரர்தான் என்பதால் ஓய்வு முடிவு அவரது கையில்தான் இருப்பதாகவும், தோனி விளையாடவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
மொத்தமாக மாறிய சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டில் இருந்து சிஎஸ்கே அணியுடன் பயணித்து வரும் ஸ்டீபன் பிளமிங், 2009ஆம் ஆண்டில் இருந்து தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில், 2027 ஐபிஎல் சீசனுக்கு முன்னர் அவர் அப்பொறுப்பில் இருந்து விலகினார். மேலும், பேட்டிங் பயிற்சியாளராக இருந்த மைக்கெல் ஹசி, பந்துவீச்சு ஆலோசகராக இருந்த எரிக் சைமன்ஸ், பீல்டிங் பயிற்சியாளராக இருந்த ஜேம்ஸ் ஃபாஸ்டர் ஆகியோரும் அவரவர் பொறுப்பில் இருந்து விலகினர்.
தற்போது தலைமை பயிற்சியாளராக ஜாகிர் கான் நியமிக்கப்பட்டார். பந்துவீச்சு பயிற்சியாளராக மோகித் சர்மாவை நியமிக்க ஜாகிர் கான் முடிவெடுத்துள்ளார். இன்னும் பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வரவில்லை. வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணிகளும் தாங்கள் மினி ஏலத்திற்கு விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை சமர்பிக்க வேண்டும். இதனால் தற்போது முதல் 10 அணிகளும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு தயாராகி வருகின்றனர்.
மேலும் படிக்க | மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் பொல்லார்ட்... JSK அணிக்கு ஆப்பு...?