SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆகாஷ் தீப் தலையில் காயம்... ஆனாலும் சிராஜை இறக்காத கம்பீர்... கலாய்த்த அஸ்வின்

IND vs NZ 2nd Test: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் பேட்டிங்கின் போது, ஹெல்மட்டில் பந்து தாக்கியதால் ஆகாஷ் தீப் Concussion காரணமாக போட்டியில் இருந்து பாதியில் விலகினார். அவருக்கு பதில் பிரசித் கிருஷ்ணா மாற்று வீரராக களமிறங்கி உள்ளார்.

Written By Sudharsan G
Published: Nov 29, 2026, 09:35 IST | Updated: Nov 29, 2026, 09:42 IST
Image Credit: Akash Deep, Mohammed Siraj, Ravichandran Ashwin | Image Source: X
Join

IND vs NZ 2nd Test: இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடர்ந்தது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 116 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்திருந்தது. நேற்றைய நாளின் கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்க |  இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

துருவ் ஜூரேல் 7 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தார். அன்சுல் கம்போஜ் அவருடன் களம் புகுந்தார். ஆனால் அன்சுல் கம்போஜ் டக்அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதை தொடர்ந்து ஆகாஷ் தீப் களம் புகுந்தார். துருவ் ஜுரேல் - ஆகாஷ் தீப் ஜோடி 46 ரன்களை சேர்த்தது. அதில் ஆகாஷ் தீப் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தலையில் தாக்கிய பந்து... ஆகாஷ் தீப் விலகல்...

முன்னதாக ஆகாஷ் தீப் பேட்டிங்கின் போது இரண்டு முறை பந்து அவரது ஹெல்மட்டை பதம் பார்த்தது. இன்றைய ஆட்டத்தின் முதல் செஷனில் கைல் ஜேமீசன் வீசிய ஒரே ஓவரில் இரண்டு பவுன்சர்கள் வீசப்பட்டது. அப்போது அவருக்கு ஒன்றும் பாதிப்பில்லை, தொடர்ந்து விளையாடினார்.

ஆனால் அடுத்தடுத்து அவருக்கு தலையில் பந்து தாக்கியதை தொடர்ந்து அவரை மருத்துவக் குழு பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. அதைத் தொடர்ந்து அவர் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார். ஆகாஷ் தீப் பேட்டிங்கில் 29 ரன்களை குவித்தது ஒருபுறம் என்றால் பந்துவீச்சில் 5 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Concussion விதி என்ன?

தலையில் காயம் ஏற்பட்டு வீரர் ஒருவர், போட்டியில் இருந்து பாதியில் விலகினால் அவருக்கு ஈடான ஒரு மாற்று வீரரை களமிறக்கலாம் என்பது விதி. அதாவது ஒரு பேட்டருக்கு காயம் ஏற்பட்டால் மாற்று பேட்டரை களமிறக்கலாம், ஒரு பௌலருக்கு காயம் ஏற்பட்டால் பௌலரை களமிறக்கலாம்.

மாற்று வீரர் பிரசித் கிருஷ்ணா

அந்த வகையில், வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தலையில் பந்து தாக்கியதால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகியதை தொடர்ந்து மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான பிரசித் கிருஷ்ணா மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க |  கண்ணீர்விட்ட சிராஜ்? ஓரங்கட்டிய கில் - கம்பீர்... 2வது போட்டியிலும் சேர்க்கவில்லை!

மாற்று வீரராக முகமது சிராஜ் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் சிராஜ் புறக்கணிக்கப்பட்டுள்ளார். பிரசித் கிருஷ்ணா ஏற்கெனவே முதல் போட்டியில் விளையாடியிருந்தார். 2 இன்னிங்ஸ்களிலும் 45 ஓவர்கள் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

அஸ்வினின் கிண்டல் பதிவு

2வது போட்டியில் அவருக்கு பதில் குர்னூர் பிரர் சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது மாற்று வீரராக மீண்டும் அவர் கொண்டு வரப்பட்டுள்ளார். மீண்டும் சிராஜ் புறக்கணிக்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளானது. குறிப்பாக, இந்திய மூத்த வீரர் ரவிசந்திரன் அஸ்வின் இதுகுறித்து கிண்டலாக ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், "Concussion மாற்று வீரரைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்போது, ஏற்கெனவே தொடரில் விளையாடிய ஒரு வீரரைக் களமிறக்குவது எப்போதும் ஒரு நல்ல யோசனையாகும். சிராஜ் களமிறங்கிய உடனேயே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்" என குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே கம்பீர் - கில் ஆகியோர் சிராஜை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்காததற்கு அஸ்வின் கடுமையாக விமர்சித்திருந்தார்.

110 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து

2வது டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்களை எடுத்திருந்த நிலையில், இந்திய அணி 246 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி உள்ளது. நியூசிலாந்து அணி 110 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் படிக்க |  சூர்யவன்சிக்கு இதுதான் உண்மையான சவால்.. இங்கிலாந்து முன்னாள் வீரர் எச்சரிக்கை!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES