• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /IND vs WI ODI: இந்திய அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்? ரேஸில் CSK வீரரும் இருக்கிறாராம்!

IND vs WI ODI: இந்திய அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்? ரேஸில் CSK வீரரும் இருக்கிறாராம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் விளையாட உள்ள நிலையில், இத்தொடரில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written ByR Balaji
Published: Sep 13, 2026, 10:59 IST|Updated: Sep 13, 2026, 11:04 IST
joinshare
IND vs WI ODI: இந்திய அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்? ரேஸில் CSK வீரரும் இருக்கிறாராம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

2

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

3

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

4

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

5

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இம்மாத இறுதியில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதே நேரத்தில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் இந்திய அணி விளையாட இருப்பதால், அணி தேர்வில் வீரர்கள் தேர்வாளர்கள் குழு பிசியாக உள்ளது. அதே சமயம் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியை தயார்படுத்தும் பணிகளும் நடைபெற்றூ வரும் நிலையில், தேர்வாளர்களுக்கு வீரர்களை தேர்வு செய்வதில் பெரும் சவால் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. மறுநாளான செப்டம்பர் 28 ஆம் தேதி ஜப்பானின் ஐச்சி - நகோயாவில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி தனது காலிறுதி ஆட்டத்தில் களமிறங்க உள்ளது. தொடரின் 2வது ஒருநாள் போட்டி செப்டம்பர் 30 ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெறுகிறது. இதற்கு அடுத்த நாளான அக்டோபர் 1 ஆம் தேதி ஆசிய விளையாடுப் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

அதேபோல், அக்டோபர் 3 ஆம் தேதி நியூ சண்டிகரில் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியும் அன்றைய தினம் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியின் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிகளும் ஒரே நாளில் வர உள்ளன. ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு நேரடியாக காலிறுதியில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினால், ஒரே நேரத்தில் இரு தொடர்களிலும் இந்திய வீரர்கள் பங்கேற்க வேண்டிய நிலை உருவாக வாய்ப்புள்ளது.

மீண்டும் ஒருநாள் இந்திய அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்?

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் சில வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பெயரை தேர்வாளர்கள் பரிசீலிக்கின்றனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் இடம் பெற்றுள்ளார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது அவர் இல்லாத நிலையில், கே.எல். ராகுலுக்கு அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை சேர்ப்பது குறித்து தேர்வாளர்கள் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் ரிஷப் பண்ட் இடம் பெற்றிருந்தாலும், அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இஷான் கிஷன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், பண்டுக்கு இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பண்டுக்கு போட்டியாக துரூவ் ஜுரேல்

துருவ் ஜுரேலும் விக்கெட் கீப்பர் இடத்துக்கான மற்றொரு தேர்வாக உள்ளார். அவருக்கு அணியின் நிர்வாகத்தின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.

ருதுராஜ், ஜெய்ஸ்வால் மீதும் கவனம்

பேட்டிங் வரிசையிலும் தேர்வாளர்களுக்கு சில முக்கிய முடிவுகள் காத்திருக்கின்றன. தொன்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த 2025 டிசம்பரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பெற வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவராக உள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் மற்றொரு முக்கியமான போட்டியாளராக இருக்கிறார். சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் அணியில் இடம்பெறவில்லை என்றாலும், தனது கடைசி ஒருநாள் இன்னிங்ஸ்களில் 2 சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். இதில் அவரது சமீபத்திய ஒருநாள் போட்டியில் அடித்த சதமும் அடங்கும். மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாததும் மற்றொரு பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும்.

பந்து வீச்சிலும் மாற்றம்?

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வீரர்களின் தேர்வு காரணமாக இந்திய அணியின் பந்துவீச்சு பிரிவிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அக்‌ஷர் படேலுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது சிராஜ் மீண்டும் அணிக்கு திரும்பும் வாய்ப்புள்ளது. இளம் வேகப்பந்து வீச்சாளர்களான மயங்க் யாதவ் மற்றும் அசோக் சர்மா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருக்கலாம். பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், பிரின்ஸ் யாதவ் ஆகியோரும் தேர்வாளர்களின் விரும்ப்பங்களில் இடம்பெறக்கூடிய வீரர்களாக உள்ளனர்.

இதற்கிடையே, ஹர்திக் பாண்டியாவும் ஒரு சாத்தியமான தேர்வாக இருந்தாலும், அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியா ஏ தொடரில் அவர் பரிசீலிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித், கோலி மீண்டும் களமிறங்குவார்களா?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அனுபவ வீரர்களுக்கும் இடம் இருக்கும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய ஒருநாள் அணிக்கு மீண்டும் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்மன் கில்லும் அணியில் இடம்பெற உள்ளார். இதனால் ஒருபுறம் மூத்த வீரர்கள் இடம்பெறும் ஒருநாள் அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளும் நிலையில், மறுபுறம் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டியில் விளையாடும் சூழல் உள்ளது.

ஒரே காலகட்டத்தில் இரு வெவ்வேறு நாடுகளில் இந்தியாவின் இரண்டு கிரிக்கெட் அணிகள் விளையாடும் வாய்ப்பு இருப்பதால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த காலகட்டம் மிகவும் வித்தியாசமானதாக அமைய உள்ளது.  

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket