• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /8 பந்தில் 10 ரன்கள்.. சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்! 2வது டி20ல் இடம் கிடைக்குமா?

8 பந்தில் 10 ரன்கள்.. சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்! 2வது டி20ல் இடம் கிடைக்குமா?

சஞ்சு சாம்சனுக்கு அடுத்த டி20 போட்டி வாழ்வா, சாவா போட்டியாக மாறியுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

Written ByR Balaji
Published: Sep 14, 2026, 01:10 PM IST|Updated: Sep 14, 2026, 01:15 PM IST
joinshare
8 பந்தில் 10 ரன்கள்.. சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்! 2வது டி20ல் இடம் கிடைக்குமா?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பாகவே இந்திய அணியின் பிளேயிங் 11 தொடர்பாக மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக, அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா அல்லது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்படுவாரா என்பதே ரசிகர்களின் முக்கிய கேள்வியாக இருந்தது.

இறுதியில் சஞ்சு சாம்சனுக்கே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் வழங்கப்பட்டது. ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

சாம்சனுக்கு தொடரும் சருக்கல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பு சஞ்சு சாம்சனின் சமீபத்திய பேட்டிங் செயல்பாடு கவலை அளிக்கும் வகையிலேயே இருந்தது. அயர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் 5 ரன்கள் மற்றும் டக் அவுட் ஆன அவர், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டங்களில் 1 மற்றும் 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி சாம்சனுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த போட்டியிலும் பெரிய ஸ்கோரை பதிவு செய்யத் தவறினால், அடுத்தடுத்த போட்டிகளில் அவரது இடம் கேள்விக்குறியாகலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், சாம்சன் இந்த முறையும் ஏமாற்றமளித்தார். 8 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அபிஷேக், இஷான் கொடுத்த அழுத்தம்

மறுபுறம், இந்திய அணியின் மற்ற பேட்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இஷான் கிஷனும் 33 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து தனது பங்களிப்பை வழங்கினார். இதனால், இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது வைபவ் சூர்யவன்ஷி அணிக்குள் கொண்டு வரப்படுவாரா என்ற விவாதம் தற்போது அதிகரித்துள்ளது.

கம்பீரின் முடிவு என்ன?

இந்த நிலையில், சஞ்சு சாம்சனின் வாய்ப்பு தொடர்பாக தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏற்கனவே ஒரு திட்டத்தை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, முதல் டி20 போட்டியில் சாம்சன் அதிரடியாக விளையாடி கணிசமான ரன்களை எடுத்தால் மட்டுமே, அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படிருந்ததாக கூறப்படுகிறது.

மாறாக, முதல் போட்டியில் சாம்சன் மீண்டும் சொதப்பினால், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற திட்டமும் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை பார்க்கும்போது, பவர் பிளே ஓவர்களில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அணியிடம் விளையாடி பெரிய ஸ்கோரை பதிவு செய்ய சாம்சனுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து 8 பந்துகளில் 10 ரன்களுடன் வெளியேறினார்.

இதன் காரணமாக, அடுத்த இரண்டு போட்டிகளிலும் தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரப்சிம்ரன் சிங்குக்கும் வாய்ப்பு?

மேலும், ஆப்கானிஸ்தான் தொடருக்கு பிறகு இந்திய டி20 அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக பிரப்சிம்ரன் சிங்கை அணிக்குள் கொண்டு வருவது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், இஷான் கிஷனை பிரதான விக்கெட் கீப்பராக வைத்து, அவருக்கு மாற்று வீரராக பிரப்சிம்ரன் சிங்கை பயன்படுத்தும் திட்டமும் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூர்யகுமார் யாதவ் நிலை சாம்சனுக்கும்?

இந்திய டி20 அணியில் இடம்பெறுவது மட்டுமின்றி, முன்னணி வீரர்களின் இடமும் தற்போது பாதுகாப்பானதாக இல்லை என்ற சூழலே காணப்படுகிறது. 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவுக்கே பின்னர் அணியில் இடம் தொடர்பாக கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டன. அதேபோன்ற சூழ்நிலை தற்போது சஞ்சு சாம்சனுக்கும் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் சஞ்சு சாம்சன்

ஒருவேளை இரண்டாவது டி20 போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், இந்த முறை அவர் அதை மிகச் சிறப்பாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். குறைந்தபட்சம் 60க்கு ரன்கள் அல்லது அதிரடியான பெரிய இன்னிங்ஸ் ஒன்றை விளையாடினால் மட்டுமே, அணியில் தனது இடத்தை மீண்டும் உறுதி செய்ய முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.

மீண்டும் குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தால், இந்திய டி20 அணியில் சாம்சனின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அதே வேளையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு, உருவாக்கும் முயற்சியும் தொடங்கலாம். எனவே அடுத்த போட்டி சஞ்சு சாம்சனுக்கு வெறும் மற்றொரு டி20 போட்டி அல்ல; இந்திய டி20 அணியில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான போட்டியாக மாறி உள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket