சூர்யகுமார் யாதவையும் கழட்டிவிடும் மும்பை... டிரேட் செய்யும் அணி எது தெரியுமா?
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் டிரேட் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யகுமார் யாதவை எந்த அணி டிரேட் செய்ய விரும்புகிறது...? அதன் பின்னணி என்ன? ஆகியவற்றை இங்கு காணலாம்.
ஐபிஎல் டிரேட் பேச்சுவார்த்தையில் பல அணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஐபிஎல் 2026 சீசன் நிறைவடைந்த ஒரு மாதத்திற்கு பின் ஐபிஎல் டிரேட் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. மினி ஏலத்திற்கு ஒரு வாரம் முன்புவரை (டிசம்பர் 9) வீரர்கள் டிரேட் செய்யப்படுவார்கள்.
அதேபோல், ஐபிஎல் மினி ஏலத்திற்கு அடுத்து ஒரு வாரத்தில் இருந்து ஐபிஎல் 2027 சீசன் தொடங்கும் ஒரு மாதத்திற்கு முன் வரை டிரேட் நடைபெறும். எனவே, ஐபிஎல் டிரேட்டை ஆண்டு முழுவதும் ரசிகர்கள் பின்தொடர்வார்கள்.
டிரேட் செய்யப்பட்ட வீரர்கள்
ரிஷப் பண்ட் லக்னோ அணியில் இருந்து டெல்லி அணிக்கும் (ரூ.15 கோடி), குல்தீப் யாதவ் டெல்லி அணியில் இருந்து லக்னோ அணிக்கும் (ரூ.13.50) டிரேட் செய்யப்பட்டனர்.
அதேபோல், டி.நடராஜன் டெல்லி அணியில் இருந்து ஹைதராபாத் அணிக்கும் (ரூ.5 கோடி), ஷீஷன் அன்சாரி ஹைதராபாத் அணியில் இருந்து டெல்லி அணிக்கும் டிரேட் செய்யப்பட்டார்.
ஹர்திக் பாண்டியா டிரேட்
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனான ஹர்திக் பாண்டியாவை அந்த அணி டிரேட் செய்ய இருக்கிறது. தற்சமயம், பஞ்சாப் கிங்ஸ் அணி அர்ஷ்தீப் சிங் மற்றும் விஷ்ணு வினோத்தை மும்பை இந்தியன்ஸிற்கு கொடுத்து, ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய ஆப்பர் அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த தகவலும் உறுதியாகவில்லை.
ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி தயாராக இருக்கும் வேளையில், தற்போது மற்றொரு மும்பை இந்தியன்ஸ் நட்சத்திர வீரரும் டிரேட் பேச்சுவார்த்தையில் அடிப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன. 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ்வை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
லக்னோ அணிக்கு சூர்யகுமார் யாதவ்?
SportsTak தளம் வெளியிட்ட செய்தியில், சூர்யகுமார் யாதவை டிரேட் மூலம் பெற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விருப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் டிரேடுக்கு பின்னர் லக்னோ அணிக்கு கேப்டன் வேண்டும் என்பதால் சூர்யகுமார் யாதவை எடுக்க அந்த அணி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2025 மெகா ஏலத்தில் ரூ.27 கோடி கொடுத்து ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி எடுத்து கேப்டனாக்கியது. லக்னோ அணி 2025 சீசனில் 7வது இடத்திலும், 2026 சீசனில் 10வது இடத்திலும் நிறைவு செய்து பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து லக்னோ அணி ரிஷப் பண்ட் உடனான உறவை முறித்துக்கொண்டது.
ஹர்திக் பாண்டியா கையில் டிரேட்
சூர்யகுமார் யாதவ் லக்னோ அணிக்கு போவாரா இல்லையா என்பது ஹர்திக் பாண்டியாவின் கையில்தான் இருக்கிறது. ஹர்திக் பாண்டியா வேறு அணிக்கு டிரேட் செய்யப்பட்டால் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர்வார் என கூறப்படுகிறது. ஒருவேளை ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்படாவிட்டால் சூர்யகுமாரை மும்பை அணி டிரேட் செய்ய முனைப்பு காட்டும்.
இரண்டு நட்சத்திர வீரர்களையும் ஒரே சீசனில் இழந்தால் ஸ்குவாடை கட்டமைப்பதில் சிரமம் ஏற்படலாம். ஏற்கெனவே கடந்த 6 சீசன்களாக இறுதிப்போட்டிக்கு கூட வராமல் இந்திய அணி கடுமையாக சொதப்பி வந்தது. எனவே, 2027 சீசன் மும்பை அணிக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மா பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைமை பயிற்சியாளராக கைரன் பொல்லார்ட் ஒட்டுமொத்த பயிற்சியாளர் குழுவையே மாற்றியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IPL Retentions... தேதியை தள்ளிவைத்த பிசிசிஐ - என்ன காரணம்?