ருதுராஜுக்கு கேப்டன்ஸி சுமையாக இருக்கலாம்... சிஎஸ்கேவை எச்சரிக்கும் வாசிம் ஜாபர்
கேப்டன்ஸியில் சிஎஸ்கே அணியிடம் பல ஆப்ஷன்கள் உள்ளன என்றும்; சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன்ஸியை கவனிக்கக் கூடிய மற்ற வீரர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள் என்றும் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். மேலும் வாசிம் ஜாபர் சிஎஸ்கே அணிக்கு முக்கிய எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
Chennai Super Kings, IPL 2027: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணிக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த தோனி தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.
சிஎஸ்கே கடைசியாக 2023ஆம் ஆண்டில் தோனி தலைமையில் கோப்பையை வென்றது. அதன்பின் அடுத்த சீசனிலேயே தோனியின் பரிந்துரையின் பேரில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸி பொறுப்பை பெற்றார்.
2024இல் ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே அணி 5வது இடத்தில் நிறைவு செய்தது. அடுத்த 2025இல் ஆரம்பக் கட்ட போட்டிகளில் சிஎஸ்கே கேப்டன்ஸியை கவனித்துக் கொண்ட ருதுராஜ் கெய்க்வாட் பின்னர் காயம் காரணமாக முழுமையாக தொடரில் இருந்து விலகினார்.
மேலும் படிக்க | IPL 2027: கையில் ரூ. 28 கோடி.. CSK டார்கெட் செய்யும் 8 வீரர்கள்? யார் யார் பாருங்க!
சிஎஸ்கேவில் பெரிய மாற்றம்
மற்ற போட்டிகளில் தோனி கேப்டன்ஸியை கவனித்துக் கொண்டாலும் சிஎஸ்கே அந்த சீசனில் 10வது இடத்தில்தான் நிறைவு செய்தது. 2026ஆம் ஆண்டில் ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே 8வது இடத்தையே பிடித்தது. சிஎஸ்கேவின் தொடர்ச்சியான தோல்வி காரணமாக தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் உள்பட பயிற்சியாளர் குழுவில் பலரும் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது ஜாகிர் கான் தலைமையில் புதிய பயிற்சியாளர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தோனி அணியின் ஆலோசகராக செயல்பட இருக்கிறார். இந்த சீசனில் சிஎஸ்கேவுக்கு புது ரத்தம் பாய்ச்சப்படும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
கேப்டனாக தொடரும் ருதுராஜ்
எக்கச்சக்க மாற்றங்கள் இருந்தாலும், ருதுராஜ் கெய்க்வாட்தான் வரும் சீசனில் கேப்டனாக செயல்படுவார் என்பது ஜாகிர் கான் அளித்த சமீபத்திய நேர்காணலில் உறுதியாகி உள்ளது. பலரும் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கும் என எதிர்பார்த்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என தெரிகிறது.
சுட்டிக்காட்டும் வாசிம் ஜாபர்
இந்நிலையில், சிஎஸ்கேவின் கேப்டன்ஸி குறித்து மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் அவரது யூ-ட்யூப் சேனலில் விரிவாக பேசி உள்ளார். "சிஎஸ்கே அணியிடம் பல ஆப்ஷன்கள் உள்ளன. சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன்ஸியை கவனிக்கக் கூடிய மற்ற வீரர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள்.
மோசமான பேட்டிங் பார்ம்
ருதுராஜ் கெய்க்வாட் தலைமை தாங்கினாலும் அவருக்கு எதிராக ஒன்றும் இல்லை. ஆனால் கடந்த சீசனில் அவரது பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக இல்லை. அதுவும் கவலைதான். ஒருவேளை கேப்டன் பதவி அவருக்கு பெரும் சுமையாக இருக்கலாம். அவர்கள் இந்த முடிவுகளை சற்று கவனமாக எடுக்க வேண்டும்" என எச்சரித்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் தனது தலைமையில் இதுவரை உள்நாட்டு தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எந்த கோப்பையையும் வென்று கொடுத்ததில்லை. 2023ஆம் ஆண்டில் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு ருதுராஜ் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தோனி தேர்வு செய்த கேப்டன்.. ஜாகீர் கான் சொன்ன முக்கிய தகவல்