• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றியதே இவர்தான்.. மும்பை இந்தியன்ஸில் நடந்தது என்ன?

ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றியதே இவர்தான்.. மும்பை இந்தியன்ஸில் நடந்தது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்த ஹர்திக் பாண்டியாவுக்கு நிர்வாகம் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் அணியிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுக்குப் பின்னணியில் முக்கிய நபர் ஒருவர் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Written ByR Balaji
Published: Nov 13, 2026, 08:02 AM IST|Updated: Nov 13, 2026, 08:04 AM IST
joinshare
ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றியதே இவர்தான்.. மும்பை இந்தியன்ஸில் நடந்தது என்ன?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்த நிலையில், அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேட் செய்துள்ளனர்.

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. இதனால், கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் அணுகுமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, களத்தில் தனது திட்டங்களுக்கு ஏற்ப மட்டுமே வீரர்கள் செயல்பட வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாக இருந்ததாகவும், அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கிடையே, ஹர்திக்கின் காதலி மேஹிகா சர்மாவின் தலையீடும் அணி நிர்வாகத்திற்குள் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் போட்டி ஒன்றுக்கு பிறகு வீரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் பேருந்தில் ஏறியபோது, மேஹிகாவுக்காக மட்டும் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக பேருந்து காத்திருந்ததாக தகவல் வெளியானது. பின்னர் அவர் வந்தபோதும் தாமதத்திற்காக மன்னிப்பு கேட்காமல் பேருந்தில் அமர்ந்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்த சம்பவத்திற்கு பிறகு வீரர்களுக்கென தனிப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், அணியின் சமையலறையிலும் தனக்கு பிடித்தமான உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஹர்திக் தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இத்தகைய தொடர் சம்பவங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் அதிருப்தியை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த ஐபிஎல் சீசனில் ஹர்திக் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தையே பிடித்தது. இதனால், அவரது கேப்டன்சி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று அப்போதைய பேட்டிங் பயிற்சியாளர் கெய்ரன் பொல்லார்ட் வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.

இந்தச் சூழலில், அணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அதிருப்தியடைந்த ஹர்திக் பாண்டியா, டிரேடிங் மூலம் வேறு அணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய அவர் ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டது. ஆனால் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டாமல் முடிவுக்கு வந்தது.

மேலும், 2027 ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்காமல், ஒரு வீரராக மட்டும் மும்பை அணியில் தொடர விரும்புவதாக ஹர்திக் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெய்ரன் பொல்லார்ட் இதற்கு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அணியின் ஒற்றுமையையும் நலனையும் பாதிக்கும் வகையில் எந்த வீரர் செயல்பட்டாலும் அவரை தொடர்ந்து அணியில் வைத்திருக்க முடியாது என்பதில் பொல்லார்ட் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஹர்திக் பாண்டியாவுக்கு டிரேடிங் மூலம் வெளியேறுவது அல்லது மினி ஏலத்தில் பங்கேற்பது என இரண்டு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, டிரேடிங் முறையில் அணியிலிருந்து வெளியேற ஹர்திக் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவரை அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஆனால் பொல்லார்ட் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக மற்ற அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மும்பை இந்தியன்ஸுக்கு சாதகமான ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணி தனது வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை டிரேடிங்கில் வழங்க முன்வந்ததாகவும், அதற்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை அந்த அணிக்கு அனுப்ப மும்பை இந்தியன்ஸ் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம், அடுத்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக மட்டுமே விளையாடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL