• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்! தமிழ்நாடு அரசின் புதிய அப்டேட்

12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்! தமிழ்நாடு அரசின் புதிய அப்டேட்

12th Class Mark Sheet Correction: மேல்நிலைக் கல்வி மதிப்பெண் சான்றிதழில் பெயர், பிறந்த தேதி திருத்தம் உள்ளிட்ட மாணவர்களுக்கான முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 16, 2026, 13:30 IST|Updated: Nov 16, 2026, 13:34 IST
joinshare
12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் திருத்தம்! தமிழ்நாடு அரசின் புதிய அப்டேட்
Image Credit: 12th Class Mark Sheet Correction

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

12th Class Mark Sheet Correction: மேல்நிலைக் கல்வி (பிளஸ் 2) மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள பெயர், தலைப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சான்றிதழ்களில் பிழைகள் இருப்பின், மாணவர்கள் அவற்றைச் சரிசெய்வதற்குப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | ராணிப்பேட்டை : இலவச கறவை மாடு, ஆடுகள் பெற விண்ணப்பிக்கலாம்! - முழு விவரம்

பத்தாம் வகுப்பு அசல் சான்றிதழ் இணைப்பது கட்டாயம்

மேல்நிலைக் கல்வி அசல் மதிப்பெண் சான்றிதழில் பெயர், தலைப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், தங்களது பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழைக் கட்டாயம் இணைத்து அனுப்ப வேண்டும். பத்தாம் வகுப்பு சான்றிதழில் உள்ள விவரங்களின் அடிப்படையிலேயே மேல்நிலைச் சான்றிதழில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.  

சிபிஎஸ்இ மற்றும் பிற மாநில மாணவர்களுக்கான விதிமுறைகள்

பத்தாம் வகுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அல்லது பிற மாநிலக் கல்வி வாரியங்களில் பயின்று, மேல்நிலைக் கல்வியை மட்டும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்குத் தனியான வழிமுறை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் Bonafide Certificate பெற வேண்டும். அந்தச் சான்றிதழில் தேர்வரின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதனைத் திருத்தம் கோரும் மேல்நிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழுடன் இணைத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  

அரசிதழ் (TN Gazette) பெயர் மாற்றத்திற்கான முக்கிய நிபந்தனை

அரசிதழ் மூலம் பெயர் மற்றும் தலைப்பெழுத்து மாற்றம் செய்பவர்களுக்கான காலக்கெடு குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மேல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தமிழ்நாடு அரசிதழில் (TN Gazette) பெயர் மாற்றம் செய்திருந்தால் மட்டுமே, மேல்நிலைக் கல்வி மதிப்பெண் சான்றிதழில் பெயர் மற்றும் தலைப்பெழுத்து தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.  

மாறாக, மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெற்ற பிறகு, அரசிதழில் பெயர் அல்லது தலைப்பெழுத்து மாற்றம் செய்யப்பட்டால், அதன் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து வழங்க இயலாது என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சான்றிதழ்களில் திருத்தம் கோரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கவனத்தில் கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu