"ரீல்ஸ் வெளியிடுவதால் போதையை ஒழிக்க முடியாது" - தவெக அரசை விளாசிய டிடிவி தினகரன்
TTV Dhinakaran News: சென்னை மாதவரத்தில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புப் படையின் செயல்பாடுகள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து, போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மீது முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
TTV Dhinakaran News: சென்னை மாதவரத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவினர் 140 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கடந்த அக்டோபர் மாதம் நாகப்பட்டினத்தில் தவேக நிர்வாகி வீட்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையிலும் போதைப்பொருள் சிக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
264 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட மாநில அரசின் போதைப்பொருள் தடுப்புப் படை என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்களைச் சமூக வலைதளங்களில் விமர்சிக்கக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பேரணிகள் மற்றும் ரீல்ஸ் வெளியிடுவதை நிறுத்திவிட்டு, போதைப்பொருள் கடத்தலை ஒடுக்க முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை மாதவரத்தில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்
சென்னை மாதவரம் பகுதியில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான கொடிய வகை ஹெராயின் போதைப்பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் (டிஆர்ஐ) பறிமுதல் செய்து, அது தொடர்பாக இருவரைக் கைது செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தலைநகர் சென்னையிலேயே பெரிய தொகையிலான போதைப்பொருட்கள் சிக்கியிருப்பது தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என்று காட்டுவதாக டிடிவி தினகரன் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் படிக்க - தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க தடை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
நாகப்பட்டினம் முதல் சென்னை வரை தொடரும் போதைப்பொருள் பதுக்கல்
கடந்த அக்டோபர் மாதம் நாகப்பட்டினத்தில் உள்ள தவேக நிர்வாகி ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருட்களை இதே வருவாய் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர்.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது சென்னையில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் புழக்கம் எந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை அவர் வெட்டவெளிச்சமாக்கியுள்ளார்.
போதைப்பொருள் தடுப்புப் படையின் செயல்பாடு குறித்த கேள்விகள்
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்றபோது கையெழுத்திட்ட திட்டத்தின்படி, அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்பட்டன.
இதற்காக 264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, 54 கோடி ரூபாய் செலவில் தலைமை அலுவலகம், 65 காவல் ஆய்வாளர்கள், 130 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 325 காவலர்கள் எனப் பெரும் படையே உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நாகப்பட்டினம் தொடங்கி சென்னை வரை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினரே போதைப்பொருட்களைக் கண்காணித்துப் பறிமுதல் செய்கிறார்கள், மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட இந்தத் தனிப்பிரிவின் செயல்பாடுதான் என்ன என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலமும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலும்
போதை மாத்திரைகள், ஊசிகள், சாக்லெட்டுகள் எனப் பல்வேறு வடிவங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி பட்டதாரி இளைஞர்கள் பலரது எதிர்காலத்தையும் இந்தப் போதைப்பொருட்கள் கேள்விக்குறியாக்கியுள்ளன.
இதனைக் கட்டுப்படுத்துவதில் தவேக அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள டிடிவி தினகரன், அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கட்சி நிர்வாகிகளின் தவறுகளையும் சுட்டிக்காட்டி கட்டுரைகள் எழுதும் ஆசிரியர் செய்திகள், 'Virtual Warriors' என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக விமர்சிப்பது கேவலமான செயல் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விளம்பரங்களைத் தாண்டி இரும்புக்கரம் கொண்ட நடவடிக்கை அவசியம்
போதை ஒழிப்புப் பேரணிகள் நடத்துவது, சாலையெங்கும் விழிப்புணர்வுப் பதாகைகளை வைப்பது மற்றும் விளம்பர வெறியில் ரீல்ஸ் வெளியிடுவது போன்ற வெறும் வாயில் வடை சுடும் நடவடிக்கைகளால் போதைப்பொருட்களை ஒருபோதும் ஒழித்துவிட முடியாது என்று டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வைச் சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும், கடத்தலையும், பதுக்கலையும் வேரோடு ஒழிக்க, கடத்தல் கும்பல்கள் மீது பாரபட்சமின்றி இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க - தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தவெக அமைச்சர்கள் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்