• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க தடை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க தடை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Tamil Nadu: தமிழ்நாட்டில் ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ள நிலையில், புதிய மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Written BySripriya Sambathkumar
Published: Nov 19, 2026, 10:00 IST|Updated: Nov 19, 2026, 10:05 IST
joinshare
தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகள் திறக்க தடை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Image Credit: Ban on new TASMAC Shops in Tamil Nadu

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மதுரை: தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. இது மது பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான டாஸ்மாக் மதுக்கடைகள் (TASMAC Shops) உள்ள நிலையில், புதிய மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. திடீரென உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க காரணம் என்ன?

புதிய டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், நல்லம்பிள்ளை கிராமத்தில் உள்ள நவாக்கினத்துப்பட்டியில் புதிய டாஸ்மாக் கடையைத் திறக்க அரசு எடுத்த முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

நவக்கிணத்துப்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தங்கள் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"திருச்சி மாவட்டம் நல்லம்பிள்ளை கிராமம் நவகிணத்துப்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நல்லம்பிள்ளை மற்றும் அமயபுரம் கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் கரட்டுப்பட்டியில் உள்ள அரசுப் பள்ளிக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் ஒரே முக்கிய பாதையில் இந்தக் கடை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அந்த கிராமத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தும், அதிகாரிகள் தங்கள் திட்டத்தைக் கைவிடவில்லை. ஆகையால், கிராமத்தின் நலன் கருதி இங்கு புதிதாக டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்."

மேலும் படிக்க | Tamil News LIVE: அக்வான் புயல் எச்சரிக்கை.. IND vs NZ டெஸ்ட் போட்டி! ஆளுநர் அர்லேகர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ்நாட்டில் ஏன் புதிய டாஸ்மாக் கடைகள்? உயர் நீதிமன்றம் கேள்வி

நல்லம்பிள்ளை பகுதியில் ஏற்கனவே மதுக்கடை இல்லாததாலேயே அங்கு புதிய கடையைத் திறக்கத் திட்டமிடப்பட்டதாக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். அப்போது நீதிபதிகள், "ஏற்கனவே உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, ஏன் புதிய கடைகளைத் திறக்கிறீர்கள்?" என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான டாஸ்மாக் கடைகள் இருப்பதால், புதிய கடைகளின் தேவை இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுவை அனுமதித்து, தமிழ்நாடு முழுவதும் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

அரசின் வருமானம் குறைந்துள்ளதா?

  • முன்னதாக, இந்த ஆண்டு மே மாதம், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் அமைந்திருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. 
  • இதன் மூலம், மதுக்கடைகளின் எண்ணிக்கை 4,765-லிருந்து 4,048-ஆகக் குறைந்தது. 
  • இருப்பினும், மது விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் கலால் வரி மற்றும் மதிப்புக்கூட்டு வரி (VAT) வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
  • ஒட்டுமொத்த வருவாய் 2023-24-ல் ரூ. 45,855.70 கோடியிலிருந்து 2024-25-ல் ரூ. 48,381.01 கோடியாகவும், தொடர்ந்து 2025-26-ல் ரூ. 50,845.84 கோடியாகவும் அதிகரித்தது. 
  • இக்காலகட்டத்தில், கலால் வரி வருவாய் ரூ. 10,774.28 கோடியிலிருந்து ரூ. 11,835.82 கோடியாக உயர்ந்தது.
  • அதேவேளையில், மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) வசூல் ரூ. 35,081.42 கோடியிலிருந்து ரூ. 39,010.02 கோடியாக அதிகரித்தது.

மேலும் படிக்க | TN Rain Alert: அக்வான் புயல்; இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

ஒரு கிராமது மக்கள், தங்கள் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக எழுப்பிய குரலும், டாஸ்மாக் கடைக்கு எதிராக எழுப்பிய எதிர்ப்பும் தமிழகம் முழுவதும் புதிய மதுக்கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கும் முக்கிய நீதிமன்ற உத்தரவாக உருவெடுத்துள்ளது.

இப்போது உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா?

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வந்தது முதல், இது குறித்து பொதுமக்களிடையே பல கேள்விகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, ஏற்கனவே உள்ள கடைகள் மூடப்படுமா என்பது முக்கிய கேல்வியாக உள்ளது. எனினும், நீதிமன்றத்தின் உத்தரவு புதிதாக கடைகளைத் திறப்பது பற்றியது மட்டுமே ஆகும். ஏற்கனவே உள்ள கடைகளைப் பற்றி உத்தரவில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழக அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுமா?

தமிழக அரசு புதிய டாஸ்மாக் கடைகளுக்கான திட்டங்களைக் கொண்டிருக்கும் பட்சத்தில், இந்த உத்தரவால் நிச்சயம் பாதிப்பு இருக்கும். ஏனெனில் தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் கணிசமான வருமானம் கிடைக்கிறது. புதிய கடைகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். ஆகையால், தற்போது வந்துள்ள நீதிமன்ற உத்தரவு நிச்சயம் வருமான இழப்புக்கு வழிவகுக்கும்.

மேலும் படிக்க | தவெகவை விமர்சித்தால் இப்படியா... இது பாசிசமா? பாயாசமா? - CM விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu