• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /Aavin பால் பொருட்களின் விலை உயர்வு ஏன்? ஆவின் நிர்வாகம் விளக்கம்!

Aavin பால் பொருட்களின் விலை உயர்வு ஏன்? ஆவின் நிர்வாகம் விளக்கம்!

Aavin Milk Products Price Hike: தமிழகத்தில் ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. நெய், வெண்ணெய், தயிர், இனிப்பு மற்றும் கார வகைகளின் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நாளை (அக்டோபர் 28) முதல் அமலுக்கு வரும் நிலையில், இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 27, 2026, 01:46 PM IST|Updated: Oct 27, 2026, 02:04 PM IST
joinshare
Aavin பால் பொருட்களின் விலை உயர்வு ஏன்? ஆவின் நிர்வாகம் விளக்கம்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

அன்பில் மகேஷ் மனைவியும் கைதா? விசாரணையில் ஏற்பட்ட திருப்பம்!

2

இஸ்ரேல் தேர்தல் 2026: நெதன்யாகுவை வீழ்த்த களம் இறங்கிய நபர்! யார் இந்த கடி ஐசன்கோட்? -Explained

3

இந்திய ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் வேலை: டிகிரி பொதும்.... எப்படி விண்ணப்பிப்பது?

4

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா சைபர் க்ரைமில் புகார்! தாெடர் சர்ச்சையால் திடீர் முடிவு

5

Aavin பால் பொருட்களின் விலை உயர்வு ஏன்? ஆவின் நிர்வாகம் விளக்கம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Aavin Milk Products Price Hike: தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் கூட்டுறவு நிறுவனமான ஆவின் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் குறைவான விலையில் மக்களுக்கு பால் விற்பனை செய்து வருகிறது. பால் மட்டுமின்றி, நெய், பால்கோவா, வெண்ணெய், யோகர்ட், குல்பி, ஐஸ்கிரீம், கார வகைகளை விற்பனை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆவின் கடைகள் செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், ஆவின் பொருட்களின் விலையை அந்நிர்வாகம் உயர்த்தி உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில், ஆவின் நிர்வாகம் பால் பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளது. இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆவின் நிர்வாகம் விளக்கம்

இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதிலும், நுகர்வோருக்கு தரமான பால் மற்றும் பால் உபபொருட்களை நியாயமான விலையில் வழங்குவதிலும் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய வருமானம் கிடைப்பதை உறுதி செய்வதுடன், நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதும் ஆவினின் முக்கிய நோக்கமாகும்.

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலனுக்கு உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கிராமப்புறங்களில் வாழும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாக பால் உற்பத்தி விளங்குகிறது. எனவே, பால் உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் உற்பத்திக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.

மேலும் படிக்க: Aavin: ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள் விலை அதிரடி உயர்வு.. புதிய விலை பட்டியல் இங்கே!

அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள்

தற்போதைய சந்தைச் சூழலில், தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பிற மாநிலக் கூட்டுறவு பால் நிறுவனங்களின் ஒத்த வகைப் பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு. ஆவின் பால் உபபொருட்களின் விலைகளில் குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விலை உயர்விற்குப் பின்னரும், பிற கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களின் பொருட்களுடன் ஒப்பிடுகையில், ஆவின் உபபொருட்களின் விலை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இந்த நடவடிக்கை எவ்வித லாப நோக்கம் இன்றி. உற்பத்திச் செலவுகளை ஈடுசெய்வதற்கும், சந்தையில் ஆவின் பொருட்களின் போட்டித்தன்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கும். பால் உப பொருட்களின் குறைந்த அளவு விலை திருத்தம் அவசியமானதாகும்.

மேலும், இந்த விலை திருத்தம் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொகை பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக வழங்கப்படும். இதன் மூலம் அவர்களின் வருமானத்தை மேம்படுத்துவதுடன், கூட்டுறவு பால் கொள்முதல் கட்டமைப்பினையும் வலுப்படுத்த முடியும்.

ஆவின் மேற்கொண்டுள்ள இந்த விலைத் திருத்தம், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும், நுகர்வோருக்கு தரமான பால் உபபொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்குவதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விஜய் vs தனுஷ்: தேவர் குருபூஜையில் திண்டுக்கல் சீனிவாசன் ஓபன் டாக்!

விலை உயர்வு விவரம்

ஆவினில் 67 பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், இதில் முக்கியமான சில பொருட்களின் விலை உயர்வு குறித்த பட்டியலை பார்ப்போம்.

  • நெய் (GHEE PET JAR) - 50 மி.லிட்டர் - ரூ.55, 100 மி.லிட்டர் - ரூ.95, 200 மி.லிட்டர் - ரூ.180, 500 மி.லிட்டர் - ரூ.400, 1000 மி.லிட்டர் - ரூ.780, 5 லிட்டர் - ரூ.4000, 16.5 லிட்டர் Tin - ரூ.13,000க்கு விற்பனை
  • வெண்ணெய் (BUTTER) - 100 கிராம் - ரூ.70, 500 கிராம் - ரூ.320/325
  • கோவா (KHOVA) - 100 கிராம் - ரூ.60, 250 கிராம் - ரூ.150, 500 கிராம் - ரூ.280,  1 கிலோ - ரூ.650
  • இனிப்புகள் - Dates Khoa 100 கிராம் - ரூ.65, 250 கிராம் - ரூ.155, Premium Milk Cake 250 கிராம் - ரூ.140,  மைசூர்பாக் 250 கிராம் - ரூ.160, 500 கிராம் - ரூ.310, நெய் அல்வா 250 கிராம் - ரூ.125,  நட்ஸ் அல்வா- ரூ.200, காஜூ கட்லி 250 கிராம் - ரூ.280, காஜூ பிஸ்டா ரோல் 250 கிராம் - ரூ.340க்கு விற்பனை
  • தயிர், மோர் -  தயிர் 1 கிலோ - ரூ.70, ப்ரீமியம் தயிர் 1 கிலோ - ரூ.130, தயிர் 50 கிராம் - ரூ.7, Butter பால் 200 மி.லிட்டர் - ரூ.10, லசி 200 மி.லிட்டர் - ரூ.23க்கு விற்பனை
  • குக்கீஸ் - Butter, Custard, Coconut, Chocochips, Salt, Oats 80g - ரூ.40க்கு விற்பனை

மேலும் படிக்க: திருப்பதி கோவிலுக்கு காசுமாலை அணிந்து வந்த விவகாரம்..அமைச்சர் கீர்த்தனா அதிரடி பதில்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu