• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /மிக தீவிரப் புயலாக மாறிய அர்னாப்... கரையை கடப்பது எப்போது? சென்னையில் கடல் கொந்தளிப்பு

மிக தீவிரப் புயலாக மாறிய அர்னாப்... கரையை கடப்பது எப்போது? சென்னையில் கடல் கொந்தளிப்பு

Arnab Cyclone Latest Update: அர்னாப் அதி தீவிரப்புயலின் முன் பகுதியாக கரையை கடக்க துவங்கியது என டெல்டா வெதர்மேன் குறிப்பிட்டள்ளார். அடுத்த 10 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையை கடக்கும் என தெரிவித்துள்ளார்.

Written ByUmabarkavi K
Published: Oct 27, 2026, 09:07 PM IST|Updated: Oct 27, 2026, 09:55 PM IST
joinshare
மிக தீவிரப் புயலாக மாறிய அர்னாப்...  கரையை கடப்பது எப்போது? சென்னையில் கடல் கொந்தளிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
AI கருவி! பங்குச்சந்தை ஆய்வின் புதிய ஹீரோ... Kwala Intel-ல் என்ன ஸ்பெஷல்?

AI கருவி! பங்குச்சந்தை ஆய்வின் புதிய ஹீரோ... Kwala Intel-ல் என்ன ஸ்பெஷல்?

2

மிக தீவிரப் புயலாக மாறிய அர்னாப்... கரையை கடப்பது எப்போது? சென்னையில் கடல் கொந்தளிப்பு

3

5 மாதங்கள்.. 50 கைதிகள் தப்பி ஓட்டம்.. சட்டம் ஒழுங்கில் கோட்டை விடும் CM விஜய்! Explained

4

தினமும் 8 லிட்டர் பால்.. இலவச கறவை மாடுகள் திட்டம்.. பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

5

ஹைதராபாத்தில் வற்றிப்போன தண்ணீர்! எமர்ஜென்சி நிலை அறிவிப்பு..8 மாசத்திற்கு கஷ்டம்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Arnab Cyclone Latest Update: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அர்னாப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்றது. நேற்று மாலை 5.30 மணியளில் தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியதாக வானிலை யைமம் தெரிவித்தது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, அளவில் மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் நிலவியது. இந்த நிலையில், இந்த புயல் கரையை கடக்க துவங்கி இருப்பதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

கரையை கடக்க துவங்கிய அர்னாப்

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள டெல்டா வெதர்மேன், "அர்னாப் அதி தீவிரப்புயலின் முன் பகுதி கரையை கடக்க துவங்கியது. அர்னாப் அதி திவீரப்புயல் ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்தின் அமலாபுரம் அருகே கரையை கடக்க துவங்கியது. அடுத்த  10 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையை கடக்கும். புயல் கரையை கடக்க துவங்கியதால் அமாலாபுரம் பகுதிகளில் 130 கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன், அதித கனமழை பெய்து வருகிறது. புயலின் கண் பகுதி கடந்து, பின் பகுதி கரையை கடக்கும் போது சூறைக்காற்றின் வேகம் 180 கிமீ வேகத்தை எட்டக்கூடும்” என குறிப்பிட்டு  இருந்தார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், அர்னாப் புயலின் காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ-ஐ நெருங்குகிறது.  இது கரையை அடையும் நேரத்தில் காற்றின் வேகம் எவ்வளவு இருக்கும் என்று பார்ப்போம். 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி விசாகப்பட்டினத்திற்கு அருகில் கரையை கடந்த 'ஹுத்ஹுத்' (Hudhud) சூறாவளியின் போது, ​​அது கரையை அடைந்த சமயத்தில் ஒரு நிமிட சராசரி காற்றின் வேகம் மணிக்கு 181.6 கி.மீ எனப் பதிவாகியிருந்தது” எனக் கூறினார்.

மேலும் படிக்க: ஒன்பது நாட்களாக பெய்யும் மழை: சென்னை நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கணிசமாக அதிகரிப்பு

மேலும், அக்டோபர் 28ஆம் தேதி காலை 6 மணியளவில் அர்னாப் புயல் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே, யானத்திற்குத் தெற்கே ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரைப் பகுதிகளைக் கடக்கக்கூடும். அப்போது இது மிகத் தீவிர சூறாவளி புயலாக இருக்கும். இதன் போது காற்றின் வேகம் மணிக்கு 125-135 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 150 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என வானிலை யைமம் கூறியிருக்கிறது.

எண்ணூர், திருவொற்றியூரில் கடல் சீற்றம்

அர்னாப் புயல் கரையை கடக்க தொடங்கிய நிலையில், எண்ணூர், திருவொற்றியூரில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. புயல் கரையை நெருங்கி வருவதால் ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரையோர பகுதிகளிலும் கடும் கடல் சீற்றமாக உள்ளது. சென்னை எண்ணூரில் பாதுகாப்புத் தடுப்பை தாண்டி குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது.  மேலும், திருவொற்றியூரிலும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலை வரை தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

#CycloneArnab #bigbreaking அர்னாப் அதி தீவிரப்புயல் ஆந்திர மாநிலம் அமலாபுரத்திற்கு கிழக்கே 20 கிமீ தொலைவில் மையம்.. புயல் கரையை நெருங்கி வருவதால் ஒட்டுமொத்த கிழக்கு கடற்கரையோர பகுதிகளிலும் கடும் கடல் சீற்றம். தற்போது எண்ணூர் பாரதிநகர் பகுதிகளில் ஏற்பட்ட கடும் கடல் சீற்றம். பொதுமக்கள், மீனவர்களை இதன் காரணமாகவே கடலில் இறங்க வேண்டாம் என நாம் தொடர்ந்து அறிவுறுத்திருந்தோம்.

— Weatherman Hemachander (@Deltarains) October 27, 2026

மழை அலர்ட்

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அக்டோபர் 28ஆம் தேதியான நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.  அக்டோபர் 29,30ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அன்பில் மகேஷ் கைது... ரூ.100 கோடி லஞ்ச வழக்கில் போலீசார் அதிரடி

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather