)
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு 72 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு காலமானார். அவரது உடல்நிலை குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், மறைவுச் செய்தி வெளியானதில் மர்மம் உள்ளதா என வழக்கறிஞர் திலகரசன் கேள்வி. (மேலும் படிக்க)
மறைந்த தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல் அவரது பெரம்பூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
EPF உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்குப் பயனளிக்கும் ஒரு நடவடிக்கையாக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) ஓய்வுபெறும் உறுப்பினர்களுக்காக முறைப்படுத்தப்பட்ட திரும்பப் பெறும் திட்டத்தை (SWP) அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது... (மேலும் படிக்க)
சமூக ஊடக மாயையின் பிடியில் சிக்கி மற்றொரு நபர் உயிரிழந்துள்ளார். சோஷியல் மீடியா பிரபலம் ஒருவரைச் சந்திப்பதற்காகச் சென்னையில் இருந்து டெல்லிக்குச் சென்ற நபர் ஒருவர், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் நவம்பர் 7 அன்று நிகழ்ந்துள்ளது... (மேலும் படிக்க)
புதுச்சேரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் PG மருத்துவ சேர்க்கை நடவடிக்கைகளுக்கு மதராஸ் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. MCC மற்றும் CENTAC இடையேயான அதிகார விவகாரம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 விசாரணை வரை மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மாரடைப்பு காரணமாக இன்று (நவ. 19) காலமானார். (மேலும் படிக்க)
சென்னையில் தவெக எம்எல்ஏ V.S.பாபு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. 70 நட்களாக சிகிச்சையில் இருக்கும் V.S.பாபு உடல் நிலை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. நுரையீரல் தொற்று, காய்ச்சல் காரணமாக செப்.9ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜியோ தனது Google AI Pro சலுகையை நிறுத்தி Canva Pro Lite-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ரீசார்ஜ் முடிந்தால் இன்கமிங் கால் சேவைகளிலும் பாதிப்பு ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முழு தகவலை தெரிந்து கொள்ள... (மேலும் படிக்க)
பொதுமக்களுக்கு, குறிப்பாக வியாபாரிகளுக்கு முக்கிய செய்தி உள்ளது. ரூ. 2,000-க்கு அதிகமான யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் மீதான வணிகர் தள்ளுபடி விகிதத்தை (Merchant Discount Rate - MDR) அமல்படுத்துவதில் மேலும் தாமதம் ஏற்படக்கூடும் என தொழில் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன... (மேலும் படிக்க)
சென்னையில் ரூ.140 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 264 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புப் படை என்ன செய்து கொண்டிருக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார. (மேலும் படிக்க)
கார்த்திகை தீபத் திருவிழாவிற்குத் திருவண்ணாமலை செல்லத் திட்டமிட்டுள்ளீர்களா? கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னை கடற்கரை, தாம்பரம் மற்றும் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும் சிறப்பு முன்பதிவில்லா மெமு ரயில்களின் முழு நேரப் பட்டியல்... (மேலும் படிக்க)
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள லாங்லி பகுதியில், எரியும் கார் ஒன்றிற்குள் 25 வயது இந்திய இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்து கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நபர் திட்டமிட்டே குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று கனடியக் காவல்துறை சந்தேகிக்கிறது. இருப்பினும், இந்தக்கொலைக்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை... (மேலும் படிக்க)
உத்தரப் பிரதேசம் கோரக்பூரில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேரணியில் புல்டோசர் மோதியதில் பாஜக நிர்வாகியின் 12 வயது மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (மேலும் படிக்க)
நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் EPFO CBT கூட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்தும், 'அதிக ஓய்வூதியம்' (higher pension) தொடர்பான நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது... (மேலும் படிக்க)
ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் ஆயுள் சான்றிதழ் என்பது மிக முக்கியமான ஆவணமாகும். 2026-ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி நவம்பர் 30 ஆகும். மாதாந்திர ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், தடையின்றி ஓய்வூதியத் தொகையைப் பெறுவதை உறுதிசெய்ய, மத்திய அரசிடம் இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்... (மேலும் படிக்க)
தமிழ்நாட்டில் ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ள நிலையில், புதிய மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது... (மேலும் படிக்க)
இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (நவம்பர் 19) காலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியே முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், பும்ராவின் அசத்தலான பந்துவீச்சில் 5 விக்கெட்களை இழந்தது. இந்த நிலையில், கிளென் பிலிப்ஸ் மற்றும் ஹென்றி நிகோலஸ் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகின்றனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், தற்போது சதத்தை நோக்கி விளையாடி வருகின்றனர்.
நியூசிலாந்து அணி 67 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. நிகோலஸ் 95(183), க்ளென் பிலிப்ஸ் 76(130).
வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் காரணமாக இன்று (நவம்பர் 19) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற எஞ்சியுள்ள 7 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டும் போதுமா? புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்திய அணியின் தகுதி வாய்ப்புக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மட்டுமின்றி பாகிஸ்தான், இலங்கை அணிகளின் முடிவுகளும் ஏன் முக்கியம்? என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம். (மேலும் படிக்க)
இன்று (நவம்பர் 19) வியாழக்கிழமை, கார்த்திகை 03 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். (மேலும் படிக்க)
தீவிர புயலாக மாறிய அக்வான் புயல், ஆந்திரா மற்றும் ஒடியா கடற்கரைகளை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நவம்பர் 23, 24 தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக ஆளுநர் அர்லேகர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் நியூசிலாந்து பேட்டிங் செய்து வரும் நிலையில், அந்த அணி 5 விக்கெட்களை இழந்துள்ளது.