சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல உணவக நிறுவனம் அடையார் ஆனந்த பவன் (A2B). இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையாபங்குகளை வாங்க Bodhi Tree Systems நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
சுமார் 180 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த முதலீடு இந்திய உணவகத் துறையில் முக்கியமான ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.1,600 கோடி முதல் ரூ.1,700 கோடி வரை இருக்கும்.
அந்த வகையில், A2B நிறுவனத்தை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பெற ஒப்பந்தம் செய்திருக்கும் Bodhi Tree நிறுவனத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? A2B நிறுவனத்தின் உரிமையாளர் கட்டமைப்பில் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது? என்பதை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.