Mayor Priya News: சென்னையின் மேயராக பிரியா ராஜன் இருக்கிறார். நேற்றைய தினம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வர் விஜய்யை விமர்சித்து அவர் பேசியிருந்தார். குறிப்பாக, சட்டமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் வகையில், முதல்வர் விஜய் நடந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்தார். இதற்கிடையில், நேற்றைய தினம் மாமன்ற கூட்டத்திற்கு மேயர் பிரியா புதிய லுக்கில் வந்திருந்தார். பெரும்பாலும் பாரம்பரிய சேலை அணிந்த தோற்றத்திலேயே பொது மேடைகளிலும், மாமன்ற கூட்டத்திலும் அவர் வலம் வருவார்.
ஆனால், நேற்று வழக்கமான தோற்றத்திலிருந்து சற்று வித்தியாசமாக, புதிய ஹேர்ஸ்டைலில், முடியை ஷார்ட்டாகவும் ஸ்டைலாகவும் வைத்தபடி மேயர் பிரியா வந்திருந்தார். மேயர் பிரியா புதிய லுக்கில் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், மேயர் பிரியா கேமராவை பார்த்து சிரித்தபடியே மாமன்றத்துக்கு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
மாமன்றத்துக்குள் நுழைந்த அவர், சிறிது நேரத்தில், மேயருக்குரிய கருப்பு அங்கியை அணிந்தபடி மாமன்றக் கூட்டத்தை நடத்தினார். பிரியாவின் புதிய ஹேர்ஸ்டைல் மற்றும் வித்தியாசமான லுக், சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றது. மேலும், பிரியாவில் புதிய ஹேர்ஸ்டைலை பலரும் கிண்டலடித்து வீடியோ வெளியிட்டனர்.
வீடியோ மட்டுமின்றி, மேயரின் ஹேர்ஸ்டைலை மீம் போட்டு சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். இது தொர்பாக தற்போது மேயர் பிரியா ஆதங்கமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Pottu Mama nu oru CHIEF MINISTER ah Capital City oda MAYOR board pudikumbodu ,unna elam adikradhula thappey ila ..... pic.twitter.com/uMyHlfT7lI
— ~R~D~𝕷𝖊𝖔 ѕнєℓву (@RogRebel) September 26, 2026
தனது எக்ஸ் தளத்தில் பிரியா கூறியிருப்பதாவது, "ஏன் எப்போது நான் மட்டுமே? நான் என்ன செய்தாலும் அது சர்ச்சையாகிவிடுகிறது. முதல் நாள் முதல் இப்போது வரை சிறுசிறு விஷயங்கள் பிரச்னையாக மாற்றப்படுகின்றன. நான் பர்க்கர் சாப்பிட்டாலும் அது பிரச்னையாகிறது. தலைமுடியை வெட்டினாலும் பிரச்னையாகிறது.
நான் எடுக்கும் தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு, விமர்சனத்திற்கு உள்ளாகிறது. சில சமயங்களில் நான் யோசிப்பேன். நான் ஒரு பெண் என்பதாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதலோ தான் இப்படி தனக்கு நடக்கிறதோ என நினைக்கிறேன்.
Why is it always me?
Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.
Sometimes I…— Priya (@PriyarajanDMK) September 26, 2026
என்னைப் பொறுத்தவரை, பெண்ணியவாதிகளும் பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்லிக்கொள்பவர்களும் எங்கே மறைந்துவிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது மரியாதைக்கு தகுதியற்றவர்கள் கிடையாது.
பொதுவாழ்வில் ஒரு பெண்ணாக இருப்பதாலேயே, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட தேர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரை மதிப்பிடுவதற்கான உரிமை யாருக்கும் இல்லை.
ஒவ்வொரு பெண்ணுக்கும் அதற்கே உரிய கண்ணியம், சுயமரியாதை மற்றும் தனது வாழ்க்கையைத் தன் விருப்பப்படி அமைத்துக்கொள்ளும் உரிமை உள்ளன. மேயர் என்ற பதவியையும் கடந்து, அந்தப் பெண்ணை மதிக்க நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறினார். மேயர் பிரியாவின் இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.