திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படியும், தொழிலாளர் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொழிவாளர் ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் கடந்த இரண்டு மாதங்களில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழித்தலில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து அரசாணை எண்.35, கொத்தடிமைத் தொழிலாளர் நிலையான இயக்க நடைமுறையின் SOP (Standard operating procedure)-ன்படி மாவட்ட கண்காணிப்புகுழு (District Viglance Committee) மற்றும் மாவட்ட தடுப்புபடை (District Task Force) உறுப்பினர்கள் மற்றும் பிறதுறை அலுவலர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தைத் தொழிவாளர்களை பணிக்கு அமர்த்துவது தடை செய்வது குறித்து முன்னேற்பாடுகள் தொடர்பாக திருத்தணி, பள்ளிப்பட்டு, பொன்னேரி போன்ற பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருமதி.சு.பா.சாந்தி அவர்களின் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர். தொழிலாளர்துறை அலுவலர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட கோழி பண்ணையில் சிறப்பு கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் எவரும் பணிபுரியவில்லை என்று கண்டறியப்பட்டது. மேலும், கோழிப்பண்ணை உரிமையாளரிடம் அதற்கான சான்றுகளும் பெறப்பட்டது.
அதுமட்டுமின்றி, கோழிப்பண்ணையில் குழந்தை தொழிலாளர்களையும், கொத்தடிமை தொழிலாளர்களையும் பணியில் ஈடுபடுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியும் பெறப்பட்டது. அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் இதுபோன்ற உறுதிமொழி பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருமதி.சு.பா.சாந்தி அவர்களின் தலைமையில் வருவாய் மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்கள், மாவட்ட சமூக நல அலுவவர், தொழிலாளர்துறை அலுவலர்கள் மற்றும் சிங்கப்பெண் அதிரடிப்படையினர், மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவவர்களுடன் தெருவோரம் யாசகம் கேட்கும் குழந்தைகள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர்.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு நிறுவனங்கள் சிற்றுண்டி, சாவைகள், மக்கடைகள், தெருவோரம் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள். தொழிற்சாலைகள், கட்டுமானபணிகள், கோழிப்பண்ணைகள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள், கோயில்கள். சாலைகள் சுற்றுதிரியும் மற்றும் பிளாட்பாரங்களில் யாசகம் கேட்பது உட்பட எவ்விதமான தொழில்களிலும் பணிக்கு அமர்த்தப்படக்கூடாது என கோட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர். தொழிலக பாதுகாப்பு அமர்த்துவது சட்டப்படி குற்றம் வீட்டுவேலை, கடைகள் மற்றும் நிறுவனங்கள் உணவு ஆய்வின்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைத் தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தும் நேர்வில் குழந்தை தொழிலாளர் சட்டம் 1985 மற்றும் திருத்த சட்டம் 2015-ன்படி உரிமையாளர்கள் மீது அபராதம் ரூ.50,000/- வரை விதிக்கப்படும் என்றும் குறைந்தபட்ச சிறைதண்டனையாக மூன்று மாதமும், அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் என்றும் அல்லது அபராதம் மற்றும் சிறைதண்டனை இரண்டும் விதிக்கப்படும் என்றும் நிறுவன உரிமையாளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய விழிப்புணர்வின் மூவம் கடந்த இரண்டு மாதங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்துவது தவிர்க்கப்பட்டு வருகிறது.
மேலும் 2026 ஜனவரி முதல் தற்போது வரை மீட்கப்பட்ட 175 கொத்தடிமை தொழிலாளர்களுக்கும் உடனடி மறுவாழ்வு நிவாரணத் தொகை தலா ரூ.30,000/-வீதம் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறப்பட்டு தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மூலம் ரூ.52,80,000/- மீட்கப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் சட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனத்திடமிருந்து அபராதத் தொகை 1,40,000/-வரை 2025-ம்ஆண்டு தற்போது வரை மாவட்ட ஆட்சியரின் முன்மொழிவு பெறப்பட்டு தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மூலம் அபராதத்தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், 16.9.2026 அன்று பொன்னேரி பகுதியில் உள்ள செங்கல் சூலையில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு அங்கு குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் எவரும் பணிபுரியவில்லை என்று கண்டறியப்பட்டது. அங்கு பணிபுரிந்த 9 தொழிலாளர்கள் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் இல்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லை என அடையாளம் கண்டறியப்பட்டு.
பொன்னேரி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் அவர்களால் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்கீழ் தொகை கணக்கீடு செய்யப்பட்டு 9 பேருக்கும் ரூ.1,33,135/- வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் உடனடியாக உரிய நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டு அன்றைய தினமே வழங்கப்பட்டு 9 தொழிலாளர்களும் தங்கள் சொந்த மாநிலமான ஓடிசாவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அனைத்து நிறுவனங்களிலும் கூட்டாய்வு மேற்கொள்ளப்படும். திருவள்ளூர் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கான அனைத்து தொழில் நிறுவனங்கள் பணியமர்த்தாத சூழ்நிலை ஏற்படுத்துமாறும், இது குறித்த விவரங்களை பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்குமாறும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.