• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /Explained : முஸ்லிமாக மதம் மாறுவோருக்கு நோ இட ஒதுக்கீடு! இது பல குடும்பங்களை பாதிக்குமா?

Explained : முஸ்லிமாக மதம் மாறுவோருக்கு நோ இட ஒதுக்கீடு! இது பல குடும்பங்களை பாதிக்குமா?

முஸ்லிம் மதத்திற்கு மாறிய இந்துக்கள், இட ஒதுக்கீடு கோர முடியாது என, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 16, 2026, 04:41 PM IST|Updated: Oct 16, 2026, 04:55 PM IST
joinshare
Explained : முஸ்லிமாக மதம் மாறுவோருக்கு நோ இட ஒதுக்கீடு! இது பல குடும்பங்களை பாதிக்குமா?
Image Credit: Court Order About Muslims Categories | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

முஸ்லிமாக மாறிய இந்துக்களுக்கு 'பிற்படுத்தப் பட்ட முஸ்லிம்' சாதிச் சான் றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதனால், யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள், என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

வழக்கின் பின்னணி:

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர், கடந்த 2015-ம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறி, தன்னுடைய பெயரை சமீர் அகமது என மாற்றிக் கொண்டார். இதையடுத்து, தனக்கு முஸ்லிம் லெப்பை என் சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் "இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஒருவர், தனது முந்தைய சமூக அடையாளத்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் கோர முடியாது. குறிப்பிட்ட சில சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்துக்கு மாறினால், அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது" என கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து தமிழகஅரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு நீதிபதிகள் பிரசாந்தகுமார் மிஸ்ரா, ஸ்ரீசந்திரசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப் போது தமிழக அரசு சார்பில், "பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பட்டியல் சாதியினர் இஸ்லாத்துக்கு மாறும்போது, அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.

மதம் மாறிய காரணத்தால் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் இடஒதுக்கீட்டுப் பலன்களை இழந்துவிடக் கூடாது என்பதே அரசாணையின் நோக்கம். இது மத அடிப்படையிலான சலுகை அல்ல" எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், "இந்து மதத்திலிருந்து இஸ்லாம் உள்ளிட்ட இந்து அல்லாத மதங்களுக்கு மாறியவர்கள், தங்களது முந்தைய சமூக அடையாளத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு பிரிவு 16(4)ன் கீழ் பிற்படுத்தப்பட்ட சமூக நிலைக்கான இடஒதுக்கீட்டை கோர முடியாது.
மேலும், இஸ்லாத்துக்கு மாறிய பின்னர் ஏற்கெனவே வகைப்படுத்தப்பட்ட பிற்படுத் தப்பட்ட வகுப்பு என்ற அவரது முந்தைய சமூக நிலையை மீண் டும் வழங்க முடியாது.

மேலும், அரசியலமைப்பின் பட்டியல் சாதி சமூக வகைப் படுத்தலின்படி, இந்து மதம், சீக் கிய மதம், பவுத்த மதம் ஆகியவற்றைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் ஒருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருதப்பட மாட்டார். அதன் விளைவாக, அரசியலமைப்பின் பட்டியல் சாதி வகைப்பாட் டில் குறிப்பிடப்படாத ஒரு மதத் துக்கு மாறும்போது, அத்தகைய நபர் பட்டியல் சாதி அந்தஸ்தை இழக்கிறார். அதற்கான பலனையும் இழந்து விடுகிறார்.

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

அதுபோல, ஒரு நபர் இஸ்லாம், கிறிஸ்தவம் அல்லது வேறு ஏதேனும் இந்து அல் லாத சமூக அமைப்புக்கு மாறிய பிறகு, முந்தைய மதத்தின் உறுப்பினர் தகுதியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட் டோருக்கான பலனை கோர முடியாது. அதன்படி, இந்துவிலிருந்து இஸ்லாத்துக்கு மாறும் ஒரு வர், முந்தைய சாதி அந்தஸ்தை பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் (பி.சி. முஸ்லிம்) என்ற வகுப் புப் பிரிவுக்கு மாற்ற முடியாது. எனவே, மதம் மாறிய நபருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான் றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத் தின் உத்தரவையும் மற்றும் அரசாணையை ரத்து செய்த உத் தரவையும் உறுதி செய்கிறோம்" என தீர்ப்பளித்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

குடும்பங்கள் பாதிக்கப்படுமா?

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், மதம் மாறிய முஸ்லிம்களின் குழந்தைகள் இட ஒதுக்கீட்டு பலன்களை பெற முடியாத சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இதில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் மதம் மாறியதன் காரணமாக, அவர் இதற்கு முன்பு அனுபவித்த சமூகப் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுப் பயன்களைப் பெற முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு, தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும் புறக்கணிக்கும் வருத்தமளிக்கும் தீர்ப்பு” என்று குறிப்பிடுகிறார்.

இதில் இருக்கும் பிரச்சனை என்ன?

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருக்கும் பிரச்சனை குறித்து விளக்கிய அவர், “தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) மற்றும் பட்டியல் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாறிய பின்னர், உரிய நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கான (BCM) சான்றிதழைப் பெற வழிவகுக்கும் அரசாணையை 2024 மார்ச் மாதம் வெளியிட்டது. இந்த அரசாணையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.

இஸ்லாமிய மார்க்கத்தை தங்களது வாழ்வில் நெறியாக ஏற்றுக்கொண்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு பி.சி.எம். இடஒதுக்கீடு வழங்கப்படாமல் அவர்கள் இதரர் என்று வகைப்படுத்தப்பட்டனர்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “இஸ்லாமிய மார்க்கத்தை தங்களது வாழ்வில் நெறியாக ஏற்றுக்கொண்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு பி.சி.எம். இடஒதுக்கீடு வழங்கப்படாமல் அவர்கள் இதரர் என்று வகைப்படுத்தப்பட்டனர். 

இஸ்லாமிய மார்க்கத்தை தழுவியர்களுக்கு பி.சி.எம். வகுப்பு சான்றிதழ் வழங்க வேண்டியதின் அவசியம் குறித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தினேன். இதனை தொடர்ந்து 15.2.2024 அன்று ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் உரையில் எனது கோரிக்கையை குறிப்பிட்டு அதற்கு பதிலளித்த அன்றைய முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள், சட்டவல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து நான் வைத்துள்ள கோரிக்கை நிறைவேற்றப்படும் என பதிலளித்தார்கள். 
இந்த அறிவிப்பின் அடிப்படையில் கடந்த மார்ச் 9, 2024ல்  அரசாணை வெளியிடப்பட்டது. 

இந்த அரசாணையின் உதவியால் தமிழ்நாட்டில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு பி.சி.எம். வகுப்பு சான்றிதழ் கிடைக்க மு.க.ஸ்டாலின் ஆட்சி வழிவகுத்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க | TN Shutdown: தமிழகத்தில் நாளை (அக்., 17) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

அரசுக்கு வைக்கும் கோரிக்கை..!

ஜவஹருல்லா, தொடர்ந்து அரசிடம் வைத்த கோரிக்கை குறித்தும் குறிப்பிட்டிருந்தார். “இந்த நிலையில், இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு 3.5% பிசிஎம் இடஒதுக்கீட்டை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் நீதியரசர்கள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் பி.பி பாலாஜி  கடந்த ஜூன் 25, 2026 அன்று தீர்ப்பு வழங்கினார்கள்.

இந்த தீர்ப்பு தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு அளிக்கப்பட்டதாகும். இதனை தொடரந்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தான் இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொடர்ச்சியாக இப்பிரச்னைக்கு தீர்வு 2007ல் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தில் சிறிய திருத்தம் செய்யும் சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென்று சட்டமன்றத்தில் நான் கோரிக்கை வைத்தேன்.

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் சட்டத்துறை அமைச்சர் மற்றும் பொதுபணித்துறை அமைச்சரிடமும் நானும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டமைப்பின் சார்பாக நேரில் கோரிக்கை வைத்தோம். எத்தகைய திருத்தம் செய்யப்பட வேண்டுமென்ற வரைவு திருத்த சட்ட முன்வடிவும் அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சமர்பிக்கப்பட்டது.
இருப்பினும் முஸ்லிம் சமூக தலைவர்களிடம் வாக்களித்தபடி சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவில்லை.

தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ள சூழலில் உடனடியாக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி சட்டத்திருத்தம் நிறைவேற்றி சமூக நீதியை தவெக அரசு நிலைநாட்டப்பட்ட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் ஷாஜகான் சொல்வது என்ன?

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து, மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கிடு வழங்க தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் பேசியிருக்கிறார். அப்போது இந்த விவகாரத்தில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், மதம் மாறிய முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்துவதில் தமிழக அரசு மிகவும் உறுதியாக இருக்கிறது என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில், அரசு உரிய ஆலோசனாளை நடத்தவில்லை என்றோ, தீவிரமாக செயல்படவில்லை என்றோ கூறுவதில் உண்மையில்லை என்று  கூறிய அவர், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளோம் என்றும் கூறினார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய 2007ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது அல்லது 2024ஆம் ஆண்டு அரசாணையில் இருந்த குறைகளை சரிசெய்து, அதைப்போன்ற புதிய அரசணையை வெளியிடுவது ஆகிய வழிமுறைகள் குறித்தும் பரிசீலித்து வருவதாக கூறினார்.

மேலும் படிக்க | அக்., 22 வரை கொட்டித் தீர்க்கப்போகும் மழை.. சென்னைக்கும் அலர்ட்! வானிலை அப்டேட்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu