SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழகத்தில் வாக்காளர் பெயர்கள் நீக்கம்? ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன்? திமுக காட்டம்!!

Tamil Nadu: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் மௌனம் காக்கிறார் என எதிர்க்கட்சியான திமுக கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தி மீது திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 07, 2026, 12:35 PM IST | Updated: Oct 07, 2026, 12:44 PM IST
Join

சென்னை: நாடு முழுதும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பான போராட்டங்கள் நடந்துவருகின்றன. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என கோரி நாடு முழுவதும் பல கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் மௌனம் காக்கிறார் என எதிர்க்கட்சியான திமுக கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தி மீது திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

தமிழகத்தில் SIR முறைகேடு: ராகுல் காந்தியின் நிலைப்பாடு என்ன?

அக்டோபர் 6 அன்று 'எக்ஸ்' (X) தளத்தில் பதிவிட்ட திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, தமிழ்நாட்டில் 'சிறப்பு தீவிர திருத்த' (SIR) செயல்முறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பெயர் நீக்கங்கள் குறித்த ராகுல் காந்தியின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பினார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டிய அண்ணாதுரை, தேர்தல் ஆணையத்திற்கு எதிரான பரந்த அளவிலான பிரச்சாரத்திற்கு அளிக்கப்பட்ட அதே கவனம், தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகளுக்கு ஏன் அளிக்கப்படவில்லை என்றும் வினவினார்.

'சிறப்பு தீவிர திருத்த' (SIR) செயல்முறை விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட 'இந்தியா' (INDIA) கூட்டணித் தலைவர்கள் டெல்லியில் நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணி நடத்தினர். அதற்கு அடுத்த நாளே திமுக ராகுல் காந்தியை நோக்கி தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க | தலைதூக்கும் அரிவாள் வெட்டு.. ஷூட்டிங் Mode-ல் CM விஜய்.. காட்டமாக விமர்சித்த ஸ்டாலின்

தமிழகத்தில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டனவா?

தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையின் போது தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலிலிருந்து லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரில் வெளியான ஒரு அறிக்கையை ராகுல் காந்தி ஏன் பகிரங்கமாக ஆதரிக்கவில்லை என்பது குறித்தும் திமுக செய்தித் தொடர்பாளர் விளக்கம் கோரினார்.

SIR நடவடிக்கைக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் கலைக்கப்பட வேண்டும் என்று கார்கே கூறியதாகத் தெரிகிறது. "SIR-க்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநில அரசுகளும் கலைக்கப்பட வேண்டும் என்ற கார்கேவின் கருத்தை அவர் ஏன் ஆதரிக்கவில்லை?" என்று சரவணம் அண்ணாதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க | Tamil News LIVE : மாதவரத்தில் CM விஜய் ஆய்வு, ரெப்போ விகிதம் உயர்வு, இன்றைய முக்கிய அப்டேட்ஸ்

மேலும், தமிழக முதல்வர் விஜய் மேலுள்ள அச்சத்தால் அவர் இந்த விவகாரம் குறித்துப் பேசாமல் இருக்கிறாரா என்றும் அவர் கெள்வி எழுப்பியுள்ளார். தனது 'எக்ஸ்' பதிவில் ராகுல் காந்தியை "இரட்டை வேடம் போடுபவர்" என்று குறிப்பிட்ட அண்ணாதுரை, "ஒருமுறை துரோகம் செய்பவர் எப்போதும் துரோகிதான் (Once a skunk, always a skunk)" என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் உதவியது. அதன் பின் பல தசாப்தங்களாக நீடித்த திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிந்தது. நீண்ட கால கூட்டாளியான திமுகவுடனான உறவை முறித்துக்கொண்டு, முதல்வர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) ஆட்சி அமைப்பதை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு செய்ததால், இரு கட்சிகளுக்கும் இடையே கசப்பான மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் நீடித்து வந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி முடிவுக்கு வந்தது ஒரு பெரிய அரசியல் திருப்பமாகவே பார்க்கப்படுகின்றது. காங்கிரசுடன் இனி இணைய வாய்ப்பே இல்லை என திமுக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

மேலும் படிக்க | அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி..விமர்சித்த திமுகவை வெளுத்துக்கட்டிய தவெக!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES