SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

துரைமுருகன் பதவி விலகணும்... திமுகவை காப்பாற்ற எழுத்தாளர் சொன்ன முக்கிய பாயிண்ட்

பல முக்கிய தலைவர்கள் பொறுப்பு வகித்த திமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் மனிதக் குரங்கை குந்த வைத்தது போல ஆகிவிட்டது என்றும்; திமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் விலக வேண்டும் என்றும் திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க. திருநாவுக்கரசு வலியுறுத்தி உள்ளார்.

Written By Sudharsan G
Published: Nov 03, 2026, 08:03 PM IST | Updated: Nov 03, 2026, 08:18 PM IST
Join

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகள் செந்தாமரைக்கும், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் கடந்த நவம்பர் 1ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது.

வழக்கமாக திமுக சுயமரியாதை திருமணங்களை சமூகத்தில் முன்வைக்கும் கட்சியாகும். அப்படியிருக், திமுகவின் தலைமை பதவியில் இருப்பவரின் குடும்ப நிகழ்வுகள், சுயமரியாதை திருமணங்களுக்கு மாறப்பட்ட புரோகிதர்கள் மூலமான சமஸ்கிரத வேத மந்திரங்கள் ஓத வைதீக முறையில் திருமண சடங்குகள் நடத்தப்பட்டன.

மேலும் படிக்க | சமஸ்கிருத மந்திரங்களுடன் திருமணமா... துரைமுருகனை கிழித்தெடுத்த வீரமணி.. திமுகவில் சலசலப்பு

துரைமுருகனுக்கு குவியும் எதிர்ப்பு

இதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்கப் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன், திமுகவின் முன்னாள் மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் உள்ளிட்ட கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதுகுறித்த திமுக தலைவரும், திமுகவும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடரா வண்ணம் கவனத்துடன் பார்ப்பது தடுப்பது மிகவும் அவசியம், அவசரம் என கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையில் நடக்கவில்லை...

இந்நிலையில், வைதீக முறையில் திருமணம் நடத்தியதை தொடர்ந்து திமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் விலக வேண்டும் என திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "திமுகவின் பொதுச்செயலாளர் வீட்டுத் திருமணம் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றிருக்க வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்ததாக செய்திகள் வந்தன. இது ஏதோ ஒப்புக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், புரோகிதர்கள் மந்திரம் ஓதி இருக்கிறார்கள். சடங்குகள் வேறு நடைபெற்று இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தாலியும் அப்போது கட்டப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுத்து, மணமகன் அணிவித்ததாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட இவர், திமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் தொடரலாமா...?" என திமுகவை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க | சொத்து குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் இப்படி செய்யலாமா?

மேலும் அதில், "தந்தையும் மகனும் திருமண வீட்டுக்காரர்கள், திமுககாரர்கள்... பெரும் பொறுப்பில் இருப்பவர்கள். இந்த லட்சணத்தில் துரைமுருகன் திமுகவின் பொதுச் செயலாளர். அப்பொறுப்பு அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் வகித்த பொறுப்பு.

அங்கே மனிதக் குரங்கை குந்த வைத்தது போல ஆகிவிட்டது. திமுகவின் தலைவர்களில் ஒருவராக இருந்து கொண்டு, துரைமுருகன் கட்சி மற்றும் இயக்க நடவடிக்கைகளுக்கு மாறாக அவர் வீட்டுத் திருமணத்தை நடத்தி இருக்கிறார். முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் எதிராக நடந்து கொண்டிருக்கிறார்" என துரைமுருகனை கடுமையாக சாடி உள்ளார்.

அன்றே சொன்ன அண்ணா

இதுபோல் நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சர். ஏ. இராமசாமி முதலியார் வீட்டு திருமணம் வைதீக முறைப்படி நடைபெற்றதற்கு அறிஞர் அண்ணா கடுமையாக கண்டித்துள்ளார். இதை சுட்டிக்காட்டிய திருநாவுக்கரசு, "1940-களில் சர் ஏ.இராமசாமி முதலியார் தம் வீட்டுத் திருமணம் ஒன்றை இப்படி நடத்தியதற்கு அறிஞர் அண்ணா திராவிட நாடு ஏட்டில் கண்டனம் தெரிவித்து எழுதினார். முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் இப்படி நடக்கலாமா? என்று கேட்டார்.

அதைத்தான் நானும் துரைமுருகனைக் கேட்கிறேன். எனவே அவர் திமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி, கட்சியையும் இயக்கத்தையும் அவர் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

திராவிட இயக்க ஆய்வாளரான திருநாவுக்கரசு எழுத்தாளரும் ஆவார். இவர் திமுக வரலாறு, நீதிக்கட்சி வரலாறு, சுயமரியாதை இயக்க வரலாறு ஆகியவற்றை தொகுத்து பல்வேறு புத்தகங்களை எழுதியவர். திராவிட இயக்கங்கள் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்தும் புத்தகங்களை எழுதியவர் ஆவார்.

மேலும் படிக்க | பாட்டிலுக்கு ரூ.10 வசூல்.. டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டமும், பின்னணியும்? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES