• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /உழவர் அடையாள எண் : விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

உழவர் அடையாள எண் : விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

Salem district collector farmers announcement : தமிழ்நாடு அரசின் உரங்களை மானிய விலையில் பெறுவதற்கு உழவர் அடையாள எண் பெற விண்ணப்பிக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 06, 2026, 09:02 AM IST|Updated: Nov 06, 2026, 09:03 AM IST
joinshare
உழவர் அடையாள எண் : விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
Image Credit: Salem district collector farmers announcement

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explainer: டெல்லி நகரை வாட்டும் காற்று மாசுபாடு, திணறும் மக்கள்: 470-ஐத் தாண்டும் AQI

Explainer: டெல்லி நகரை வாட்டும் காற்று மாசுபாடு, திணறும் மக்கள்: 470-ஐத் தாண்டும் AQI

2

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. விடாமல் கொட்டப்போகுது மழை.. தீபாவளிக்கு எப்படி?

3

இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்: முழு விவரம்

4

‘சீன்’ ட்விட்டர் ரிவ்யூ! 3வது ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தாரா சூர்யா? ரசிகர்களின் விமர்சனம்..

5

8வது ஊதியக் குழு: அமலாக்கம், ஊதிய திருத்தம், அரியர்... அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Salem district collector farmers announcement : விவசாயிகள் மானிய விலையில் உரங்களைப் பெறுவதற்கு 'Agri Stack' உழவர் அடையாள எண் (விவசாய பதிவு எண்) பதிவு செய்வதை மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன. சேலம் மாவட்டத்தில் இப்புதிய வழிகாட்டுதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், உழவர் அடையாள எண் அடிப்படையில் மட்டுமே இனி மானிய உரங்கள் வழங்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | நன்செய் நிலத்தை மனையாக மாற்ற கிடுக்கிப்பிடி: தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

பழைய நடைமுறை இனி இல்லை :

இதுநாள் வரை, உர விற்பனை நிலையங்களில் விவசாயிகள் தங்களின் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு, "விற்பனை முனை கருவியில்" (PoS – Point of Sale) கைரேகை அல்லது விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்குத் தேவையான உரங்களை மானிய விலையில் பெற்று வந்தனர். ஆனால், தற்போது மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, "உரவிற்பனைக்கான கட்டமைப்பு" (Framework for Fertilizer Sale) என்ற புதிய முறை முறைப்படி அமல்படுத்தப்பட்டுள்ளது.  

பயிரிடும் பரப்புக்கு ஏற்ப மட்டுமே உரம் விநியோகம்:

தமிழகத்தில் மூன்றாம் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் சேலம் மாவட்டமும் ஒன்றாகும். இப்புதிய திட்டத்தின்படி, 'Agri Stack' உழவர் அடையாள எண் அடிப்படையில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே உரங்கள் வழங்கப்படும். மேலும், விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலப்பரப்பு, அதில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் வகை மற்றும் சாகுபடிப் பரப்பளவின் தேவையை அளவீடு செய்து, அதற்கேற்ப மட்டுமே மானிய உரங்கள் துல்லியமாக விநியோகிக்கப்படும்.  

விவசாய பதிவு எண்ணில் சர்வே எண்களை இணைப்பது எப்படி?

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் உடனடியாகத் தங்களின் விவரங்களை 'Farmer Registry'-ல் பதிவு செய்து உழவர் அடையாள எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், தங்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களின் புல எண்கள் மற்றும் உட்பிரிவு எண்களை முழுமையாகப் பதிவு செய்யாதவர்கள் உடனே அதனை இணைக்க வேண்டும்.  

இதற்காக விவசாயிகள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்கள், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது வேளாண் விற்பனை அலுவலகங்களை நேரில் அணுகி விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.  

அனைத்து அரசு நலத்திட்டங்களுக்கும் விவசாய பதிவு எண் அவசியம்:

மானிய விலையில் உரம் வாங்குவதற்கு மட்டுமல்லாமல், மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அனைத்து வேளாண் மானியத் திட்டங்கள், பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகள் மூலம் வழங்கப்படும் தொடக்க வேளாண் பயிர்க்கடன்களைப் பெறுவதற்கும் இந்த உழவர் அடையாள எண் மிகவும் அத்தியாவசியமான ஆவணமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் எவ்வித தாமதமும் இன்றி உடனடியாகத் தங்களின் நில விவரங்களை இணைத்து, உழவர் அடையாள எண்ணைப் பெற்றுப் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க | TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு சூப்பர் செய்தி! பணிச்சான்று வழங்க சிறப்பு முகாம்  

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu