SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பெரியார் அறிவுலகத்தில் மகா பெரியவா புக்கை வைங்க... நீதிபதி சுவாமிநாதன் கருத்துக்கு சு.வெ. பதிலடி!

பெரியார் அறிவுலகம் நூலக முறைகேடு பாவம் தீர அங்கு மகா பெரியவா புத்தகங்களை ஒவ்வொரு புத்தக அடுக்குகளிலும் வைக்க வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசியதற்கு, தண்டிப்பதே நீதியரசர்களின் வேலை என மதுரை எம்.பி., சு.வெங்கேடசன் பதிலடி கொடுத்துள்ளார்.

Written By Sudharsan G
Published: Nov 15, 2026, 20:11 IST | Updated: Nov 15, 2026, 20:20 IST
Image Credit: MP Su Venkateshan (Left), Justice GR Swaminathan (Right) | Image Source : X
Join

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள பாரதீய வித்யா பவன் அரங்கில் எழுத்தாளர் பி. சுவாமிநாதன் என்பவர் எழுதிய'மகா பெரியவா' நூல்கள் வெளியீட்டு விழா கடந்த நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்றது.

மகா பெரியவா நூலின் தமிழ் பாகம் 16 மற்றும் ஆங்கிலப் பாகம் 4 நூல்கள் வெளியிடப்பட்டன. இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க | பெரியார் அறிவுலக சர்ச்சை: 8 கேள்விகளுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் திமுக புகார்!

போலி நூல்கள் விவகாரம்...

விழாவில் பேசிய ஜி.ஆர். சுவாமிநாதன் சமீபத்தில் கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்த போலி நூல்கள் கொள்முதல் முறைகேடு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில் 2024ஆம் ஆண்டில் நூலகங்களில் புத்தக கொள்முதல் சார்ந்து தான் அளித்த தீர்ப்பை நினைவுக்கூர்ந்து பேசினார்.

அதில் அவர், "2024ஆம் ஆண்டில் நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வில் நான் தீர்ப்பு ஒன்றை அளித்திருந்தேன். நூலகங்களில் புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் நிறைய முறைகேடு நடப்பதாக ஒருவர் வழக்கு போட்டிருந்தார்.

2024 தீர்ப்பை நினைவுக்கூர்ந்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

2019ஆம் ஆண்டில் அவர் தொடுத்த வழக்கு, 2024ஆம் ஆண்டில் என்னிடம் வந்தது.
அந்த வழக்கில் ஒரு உதாரணத்தையும் மட்டும் இங்கு சொல்கிறேன். 'வீரம் விளைந்த வரலாறு' என்ற புத்தகம் அனைத்து நூலகங்களிலும் இருக்கும். அது ஏதோ இரண்டு, மூன்று லட்சம் செலவு செய்து, அவர்களிடம் கொடுத்து வாங்கியிருப்பார்கள்.

அந்த 'வீரம் விளைந்த வரலாறு' புத்தகம் வேறு ஒன்றும் கிடையாது, கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்' புதினத்தின் அட்டையை மட்டும் மாற்றி போடப்பட்ட புத்தகமாகும். இதுபோல் நிறையே உதாரணங்களை நான் கொடுத்து, இதுபோல் பல முறைகேடு நடக்கிறது.

திங்கட்கிழமை மீண்டும் விசாரணை

இதுபோன்ற முறைகேடு எல்லாம் இனிமேல் செய்யக்கூடா்து, இனி புத்தகங்கள் கொள்முதலை எப்படி செய்ய வேண்டும் என்பதற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தேன். வழிகாட்டுதல்களை 2024ஆம் ஆண்டிலேயே நான் கொடுத்தும், 2025ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒன்று நடந்துள்ளது என்றால் எவ்வளவு கோபம் வந்திருக்கும்...?

மேலும் படிக்க | கோவை பெரியார் அறிவுலக சர்ச்சை.. அகல்விளக்கு பதிப்பாளர் மோகன் விளக்கம்!

அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் அடுத்தடுத்த ஹியரிங் கொடுத்துகிட்டே இருக்கோம். வரும் திங்கட்கிழமை கூட மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளேன். 2024ஆம் ஆண்டில் அப்போதைய ஒரு அரசாணை வெளியிட்டார்கள், இனிமேல் புத்தக கொள்முதலில் வெளிப்படைத்தன்மையா்ன கொள்கையை பின்பற்ற இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.அப்போது எனது தீர்ப்பில் இப்படி எழுதினேன்.

தீர்ப்பை யாரும் பின்பற்றவில்லை

கங்கையில் குளித்தால் பாவம் எல்லாம் போய்விடும் என்பார்கள், அதேபோல் நீங்கள் அரசாணை போட்டால் பாவம் எல்லாம் போயிடாது. என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் நீங்கள் சரிபண்ணியே ஆக வேண்டும். தப்பு செய்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டும் என நிறைய விஷயங்களை சொன்னேன்.

யாரும் அதன்படி நடக்கவில்லை, அது வேறு பிரச்னை. ஆனால் இப்போது எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அந்த பெரியார் அறிவுலகத்தில் எல்லா புத்தக அலமாரிகளிலும் இந்த மாதிரி ஒரு அகல்விளக்கு பதிப்பகத்தின் புத்தகம்தான் இருக்கிறது.

பாவத்தை போக்க இதை செய்யுங்கள்...

அந்த பாவம் எல்லாம் போக வேண்டும் என்றால், சுவாமி மகா பெரியவா புத்தகங்கள் இருக்கிறது அல்லவா... அனைத்து பாகங்களையும் கொண்டுவந்து, பெரியார் அறிவுலகத்தில் அனைத்து புத்தக அடுக்குகளிலும் வைத்தால்தான் பாவம் போகும். அப்படியென்று நான் மனசார நான் நம்புகிறேன்..." என பேசியிருந்தார்.

எம்.பி., சு.வெங்கடேசன் விமர்சனம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேச்சுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சு. வெங்கடேசன் அவரது X பக்கத்தில், "நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை.

நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் 'மகா பெரியவர்கள்'" என பதிலடி கொடுத்து விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க | ரூ.1,700 கோடி முதலீடு... அடையார் ஆனந்த பவனை வாங்கிய உதய் சங்கர், ஜேம்ஸ் முர்டோக்... யார் இவர்கள்? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES