SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்.. தொடக்க விழா தேதியில் திடீர் மாற்றம்!

TN Govt Breakfast Scheme: காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் லண்டனில் இருக்கும் நிலையில், இத்திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Sep 16, 2026, 10:19 IST | Updated: Sep 16, 2026, 11:09 IST
Join

TN Govt Breakfast Scheme: காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கம் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. கடந்த திமுக ஆட்சியில் அரசுப் பள்ளியில் படிக்கும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் மூலம், மாணவர்களுக்கு காலை உணவாக உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிடவை வழங்கப்படுகிறது.

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தில் மாற்றம்

இத்திட்டம் மூலம் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தவெக அரசு இருக்கும் நிலையில், முதல்வர் விஜய் இத்திட்டத்தை விரிவாக்க செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், இத்திட்டத்தின் பெயரை முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்பதற்கு பதிலாக, காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றினார். 6 முதல் 8ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க: மதுராந்தகம், தாராபுரம்: சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு - 5 முனைப் போட்டி

பெரியாரின் பிறந்தநாளான நாளை (செப்டம்பர் 17) காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்து இருந்தார். ஆனால், இத்திட்டத்தின் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

முதல்வர் விஜய் செப்டம்பர் 10ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றார். முதல்வர் விஜய் லண்டன் பயணத்தை முடித்து, செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரியார் பிறந்தநாளான நாளை (செப்.17) காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், முதல்வர் விஜய் லண்டனில் இருப்பதால், இத்திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல்வர் விஜய் லண்டன் பயணத்தால் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கம் 22ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் விஜய் சென்னையில் செப்டம்பர் 22ஆம் தேதி துவங்கி வைப்பார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: பட்டு புடவை, வேட்டி, சட்டைக்கு 30% தள்ளுபடி.. தமிழக அரசின் குட் நியூஸ்.. எங்கெல்லாம் தெரியுமா?

தங்க மோதிரம் திட்டம் ஒத்திவைப்பு

ஏற்கனவே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்திற்கான தேதியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தால் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவது தள்ளிபோகிறது. செப்டம்பர் 15-ம் தேதி இத்திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது முடியாமல் போனது
திட்டம் தொடங்கும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சமீபத்தில் கூறியிருந்தார். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் அரசுப் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்து இருக்கிறார்.

மேலும் படிக்க: ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20க்கும் மேல்... மின் பிரச்னை தீர்க்க தமிழக அரசின் புதிய பிளான்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES