• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கந்த சஷ்டி: திருச்செந்தூர் போறீங்களா? முருக பக்தர்களுக்கு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள்.. மிஸ் பண்ணாதீங்க

கந்த சஷ்டி: திருச்செந்தூர் போறீங்களா? முருக பக்தர்களுக்கு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள்.. மிஸ் பண்ணாதீங்க

Tiruchendur Kandha Sashti: திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 13, 2026, 09:28 AM IST|Updated: Nov 13, 2026, 09:40 AM IST
joinshare
கந்த சஷ்டி: திருச்செந்தூர் போறீங்களா? முருக பக்தர்களுக்கு அரசின் 2 முக்கிய அறிவிப்புகள்.. மிஸ் பண்ணாதீங்க

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tiruchendur Kandha Sashti: ழகத்தில் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நவம்பர் 10ஆம் தேதி கந்த சஷ்டி விரதம் துவங்கியது. தொடர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், நவம்பர் 16ஆம் தேதி முருகன் - தெய்வாணை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. குறிப்பாக, திருச்செந்தூர் முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெறும். சூரசம்ஹாரத்தை பார்க்க ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு, திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள்

இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/11/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 600 பேருந்துகளும், 14/11/2026 (சனிக்கிழமை) அன்று 525 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி. ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13/11/2026 வெள்ளிக்கிழமை அன்று 45 பேருந்துகளும். 14/11/2026 சனிக்கிழமை அன்று 40 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 50 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்! 4 நாட்கள் அறுபடை வீடுகள் டூர்.. கட்டணம், முன்பதிவு விவரம்

மாதவரத்திலிருந்து 13/11/2028 மற்றும் 14/11/2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 55 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 15/11/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 545 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம்

இதுதொடர்பாக தூத்துக்குடி காவல்துறை வெளியிட்ட  அறிவிப்பில், தூத்துக்குடி,  ஆறுமுகநேரி மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரபட்டிணம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் ஆறுமுகநேரி திருநெல்வேலி ரோடு நல்லூர் 'V', ராணிமஹாராஜபுரம், காந்திபுரம்,  காயாமொழி,  பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லவும். அல்லது ஆறுமுகநேரி பஜார், மூலக்கரை, அம்மன்புரம் ராணிமஹாராஜபுரம், காந்திபுரம். காயாமொழி, பரமன்குறிச்சி/உடன்குடி வழியாக செல்லவும். அல்லது சண்முகபுரம் ரயில்வே கேட், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி உடன்குடி வழியாக செல்லவும்.

குரும்பூர் மார்க்கத்திலிருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரபட்டிணம், உவரி வழியாக கன்னிகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் திருநெல்வேலி ரோடு நல்லூர் "V" Jn. ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லவும்.

கன்னியாகுமரி, உவரி, குலசேகரபட்டிணம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் குலசேகரபட்டிணம், உடன்குடி. பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் VJB. வழியாக செல்லவும்.

நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், வழியாக திருச்செந்தூரை கடத்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் V Jn. வழியாக திருநெல்வேலி/தூத்துக்குடி செல்லவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திருச்செந்தூருக்கு ஈஸியா போகலாம்.. 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. நேர அட்டவணை இதோ

பக்தர்கள் வெளியே வரும் வழி

கோவில் வடக்கு பகுதியில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் வடக்கு ஆர்ச், மணி அய்யர் ஹோட்டல் ஜங்ஷன், TB ரோடு வழியாக நகர் பார்க்கிங் அல்லது TB ரோடு மெயின் ஆர்ச் வழியாக தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி ரோடு அல்லது பரமன்குறிச்சி ரோடு அல்லது குலசேகரபட்டிணம் ரோடு மற்றும் மற்றப் பகுதிகளுக்கு செல்லவும்.

கோவில் சன்னதி தெரு கோவில் மத்திய பகுதி) வழியாக வெளியே வரும் பக்தர்கள் தேரடி (கிழக்கு ரதவீதி) வந்து கிழக்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, இரும்பு ஆர்ச். மெயின் ஆர்ச் வந்து தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேவலி ரோடு செல்லலாம். அல்லது தேரடி (கிழக்கு ரதவீதி) கிழக்கு ரதவீதி, அமலிநகர ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்க்ஷன், முருகாமடம் (தெப்பகுளம்) வழியாக பரமன்குறிச்சி ரோடு மற்றும் குலசேகரபட்டிணம் ரோடு செல்லவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu