SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

லீவுக்கு ஊருக்கு வந்தவர் கொலை... பிரபல ரவுடியின் கொடூரச் செயல் - குமரியில் நடந்தது என்ன?

Kanyakumari District Crime News: துபாயில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு வந்த இளைஞரை முன் விரோதத்தில் பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி, முன் விரோதத்தின் பின்னணி உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Nov 27, 2026, 11:40 IST | Updated: Nov 27, 2026, 11:57 IST
Image Credit: Kanyakumari Crime News | Image Source : X
Join

Kanyakumari District Crime News Updates: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே திங்கள்சந்தை, காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மகன் சமீம் (28). துபாயில் கார் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்த சமீம், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.

நேற்று (நவ. 26) இரவு சமீம் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதியில் தங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவ்வழியாகச் சென்றிருக்கின்றனர்.

மேலும் படிக்க | கோவையில் கொடூரம்: பெற்ற தாயை கொன்ற மகன்.. மறைக்க முயன்ற மனைவி! என்ன நடந்தது?

நேற்றிரவு நடந்தது என்ன?

அப்போது சமீம் மற்றும் வடமாநில இளைஞர்கள் இடையே திடீர் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வடமாநில இளைஞர்கள் தங்களை அழைத்து வந்த காண்ட்ராக்டரிடம் கூறி உள்ளனர்.

இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ், அகில் ஆகிய இருவரும் சமீமிடம் வந்து தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையேவும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது சமீமின் தாயார் அவர்கள் இரண்டு பேரையும் அங்கிருந்து விரட்டி விட்டுள்ளார்.

இதுகுறித்து முகேஷ் தனது நண்பனிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் பெயரும் முகேஷ் ஆகும், வயது 26. பிரபல ரவுடியான இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். தற்போது இவர்கள் மூவரும் மீண்டும் சமீம் வீட்டுக்கு இரவே சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ரவுடி முகேஷ், சமீமை அரிவாளால் வெட்டினார்.

தப்பிச் சென்ற மூவர்

அவரிடம் இருந்து தப்பிக்க கதவை திறந்து கொண்டு சமீம் ஓடியபோது துரத்தி துரத்தி முகேஷ் வெட்டியதில் நெஞ்சு மற்றும் தோள்பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்து சமீம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அகில் மற்றும் முகேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் குற்றச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சமீமின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | முகத்தில் ரத்த காயம்.. ஏற்காடு மலையில் கிடந்த சிறுமியின் சடலம்.. நடுக்க வைக்கும் பின்னணி

சமீம் - முகேஷ் இடையே முன்விரோதம்

சமீமை கொலை செய்த ரவுடி முகேஷ், அகில் மற்றும் இன்னொரு முகேஷ் ஆகிய மூவரைப் பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ரவுடி முகேஷ் - உயிரிழந்த சமீம் ஆகியோர் மாறி, மாறி பைக்குகளை எரித்தது தொடர்பாக அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த முன் விரோதம் காரணமாகவே முகேஷ், ஷமீமை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் கொலை வழக்கில் வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடூர குற்றக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் சிசிடிவி காட்சிகள் வாசகர்களின் நலன் கருதி இணைக்கப்படவில்லை.

மேலும் படிக்க | 10 சவரன் நகைக்காக தாயை கொன்ற பெண்.. காதலனுடன் போட்ட பகீர் திட்டம்.. சிக்கியது எப்படி?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES