Salem Crime News: தமிழகத்தில் சிறுமிகள் கொலை செய்யப்படுவது, மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தமிழக அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுமி மாயமானார். கடந்த அக்டோபர் 11ஆம் தேதி காணாமல் போன சிறுமி இன்று வரை 45 நாட்களுக்கு மேலாகியும் கண்டுபிடிக்கவில்லை. போலீசார் தீவிரமாக சிறுமியை தேடி வரும் நிலையில், மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள குப்பனூர் அருகே கடந்த நவம்பர் 26ஆம் தேதியான நேற்று காலை சாலையோரத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் சுமார் 15 வயது சிறுமியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. அந்த சிறுமியை அடையாளம் காணவும், சிறுமியின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேறகொண்டு வருகின்றனர்.
காவல்துறை வட்டாரங்களின்படி, குப்பனூர் வழியாக ஏற்காடு சென்றுக் கொண்டிருந்த ஆறடி ஆழமுள்ள ஒரு பள்ளத்தில் சிறுமியின் சடலம் கிடப்பதைக் கண்டனர். சிறுமியின் உடல கிடப்பதாக ஏற்காடு காவல் துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். தையடுத்து சம்ப இடம் விரைந்த காவல் துறையினர் தீயணைப்பு துரையினரின் உதவியுடன் 30 அடி பள்ளத்தில் புதர்களுக்குள் வீசப்பட்டிருந்த சிறுமியின் உடலை மீட்டனர்.
ஆரம்பத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காணாமல் போனதாக சிறுமியாக இறந்தவர்கள் இருக்கலாம் என புலனாய்வு அதிகாரிகள் சந்தேகித்தனர். இருப்பிம், உடல் அம்சங்களையும், அடையாள குறிகளையும் ஆய்வு செய்த பின்னர், அது செஞ்சி சிறுமியின் உடல் இல்லை என்பதை உறுதி செய்தனர். வேறொரு சிறுமி என்பதை கண்டுபிடித்தனர்.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சேலம் சரக காவல் துணை ஆய்வாளர் தேவராணி, சேலம் காவல் கண்காணிப்பாளர் குத்தலிங்கம் மற்றும் பிற மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். சிறுமியின் உடல் பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறுமி ஸ்வெட்டர் அணிந்திருந்ததாகவும், ஆனால், அவரது அடையாளம் மற்றும் சொந்த ஊர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
காவல்துறை வட்டாரங்களின்படி, அந்தச் சிறுமிக்கு 12 அல்லது 13 வயது இருக்கலாம் என்று தெரிவித்தன. சிறுமியின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை. இருப்பினும், இது ஒரு கொலை என்பதால், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே மரணத்திற்கான காரணம் கண்டறியப்படும்.
உடல் அதிக அளவில் சிதைவடையாத நிலையில் இருந்ததால், அந்தச் சிறுமி ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தியதுடன், சிசிடிவி காட்சிகளையும் சரிபார்த்து வருகின்றனர். ஏற்காடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சேலம் காவல்துறையினர் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சடலத்தின் அடையாளங்களுடன் பொருந்தக்கூடிய 15 வயது சிறுமி யாரேனும் சமீபத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா. இவர் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி மாயமாகி உள்ளார். அக்டோபர் 11ஆம் தேதி இரவு ஹேமலதாவின் பிறந்தநாளை குடும்பத்தினர் கேக் வெட்டிக் கொண்டிய நிலையில், விடிந்து பார்த்தால் சிறுமி வீட்டில் இல்லை. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
சிறுமி மாயமாக 45 நாட்களை கடந்தும், போலீசார் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை. சிறுமி மாயமான வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சிறுமியை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இவ்வளவு நாட்கள் ஆன நிலையில், சிறுமி உயிருடன் மீட்கப்படுவாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.