SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

50 நாட்களுக்கும் மேல் சிகிச்சையில் வி.எஸ்.பாபு! என்னதான் ஆச்சு? சமீபத்திய அப்டேட்..

கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருக்கிறார். இதையடுத்து அவர் உடல்நிலை குறித்த சமீபத்திய அப்டேட் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 30, 2026, 02:46 PM IST | Updated: Oct 30, 2026, 02:52 PM IST
Join

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், அவருக்கு எதிராக தவெக கட்சியில் களம் கண்டு, சுமார் 8,795 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர், வி.எஸ்.பாபு. தற்போது கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கும் இவர், கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ!

2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், வி.எஸ்.பாபு கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் வெற்றி பெற்ற பின் தான் இவர் ஏற்கனவே திமுகவில் இருந்தவர் என்பதும், மு.க.ஸ்டாலினுக்கு திமுகவின் வடசென்னை மாவட்ட செயலாளராக பணியாற்றினார் என்பதும் தெரிய வந்தது. பின்னர் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தவெகவில் இணைந்து பின்னர் கொளத்தூர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ரீல்ஸ்களில் இவர் செய்யும் அக்ஷன்கள் வைரலான நிலையில், அவர் கடந்த செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவுக காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

மேலும் படிக்க | ஆயுஷ் டிப்ளமோ படிப்பில் சேர... கடைசி நாள் நீட்டிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

உடல் நிலை எப்படி உள்ளது?

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, கடந்த செப்டமப்ர் 9ஆம் தேதி சென்னை நெல்சன் மாணிக்கம் ரோடில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாட்களில், அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் தினந்தோறும் அறிக்கையாக வெளியாகி வந்தன. அந்த அறிக்கைகளில், மருத்துவ சிகிச்சைகளுக்கு வி.எஸ்.பாபுவின் உடல்நிலை ஒத்துழைப்பதாகவும் அவர் உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் சமீப சில நாட்களாக அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

மரிய வில்சன் கூறியது என்ன?

சமீபத்தில், நிதி திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையாக இருக்கும் தவெக அமைச்சர் மரிய வில்சன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் கைது நடவடிக்கை, சி.எம் மேஜையில் இருக்கும் 3 கோப்புகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் வி.எஸ்.பாபு குறித்தும் பேசினார்.

வி.எஸ்.பாபு நலமாக இருக்கிறார் என்றும், அவர் மெதுவாக குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து அவருடைய் உடல்நிலை குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் மற்றும் நம்ப வேண்டாம் என்றும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவருடைய உடல்நிலை குரித்த மருத்துவ அறிக்கைகள் ஊடகங்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர்களும் அவரை நேரில் சென்று பார்த்து வருவதாகவும், தானும் அவருடன் தொடர்பில்தான் இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். 

மருத்துவ செலவுகள் குறித்த சர்ச்சை!

வி.எஸ்.பாபுவின் மருத்துவ செலவுகளை, தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட அமைச்சர் அதுவும் முதல்வருடன் மிகவும் நெருக்கமான அமைச்சர் பார்த்துக்கொள்கிறேன் என வாக்குறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி வி.எஸ்.பாபுவின் குடும்பத்தார் அவருடைய மருத்துவ செலவுகளை செலுத்துவதில் அவசரம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், ஹாஸ்பிட்டல் பில் சுமார் ரூ.40 லட்சத்தை நெருங்கிய போது, மருத்துவமனை நிர்வாகம் பணம் செலுத்துமாறு கூறியதாகவும், வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் வெளிநாட்டிலிருந்து ஒரு விலையுயர்ந்த ஊசியை வரவழைத்து செலுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

வி.எஸ்.பாபுவிற்கு தற்போது ECMO கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலையில் மருத்துவ செலவு ஒரு கோடி ரூபாயை தாண்டியதாகவும், அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மேற்குறிப்பிட்ட அமைச்சர் செலுத்தியதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. எது எப்படி இருப்பினும், 75 வயதாகும் வி.எஸ்.பாபு நன்றாக எழுந்து நடமாடும் வரை அவர் உடல்நிலை குறித்த தகவல்களை மக்கள் நம்ப மறுக்கின்றனர்.

மேலும் படிக்க | படிப்பு தகுதி தேவையில்லை! தொழில் தொடங்கும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் மானியம் - தமிழ்நாடு அரசு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES