• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வி.எஸ். பாபு மரணத்தில் மர்மமா...? வழக்கறிஞர் எழுப்பும் சந்தேகம் - என்ன மேட்டர்? Explained

வி.எஸ். பாபு மரணத்தில் மர்மமா...? வழக்கறிஞர் எழுப்பும் சந்தேகம் - என்ன மேட்டர்? Explained

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு 72 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு காலமானார். அவரது உடல்நிலை குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், மறைவுச் செய்தி வெளியானதில் மர்மம் உள்ளதா என வழக்கறிஞர் திலகரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Written BySudharsan G
Published: Nov 19, 2026, 18:44 IST|Updated: Nov 19, 2026, 19:27 IST
joinshare
வி.எஸ். பாபு மரணத்தில் மர்மமா...? வழக்கறிஞர் எழுப்பும் சந்தேகம் - என்ன மேட்டர்? Explained
Image Credit: CM Vijay, Late MLA VS Babu and Advocate Thilagarasan | Image Source : Bureau

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வி.எஸ். பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய்யின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளைய அவரது திருச்சி பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவெக சார்பில் 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், தவெக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன. 

பெரம்பூரில் உள்ள இல்லத்தில் வி.எஸ். பாபுவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் விஜய் வி.எஸ். பாபுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் படிக்க | தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்... எம்ஜிஎம் மருத்துவமனை அறிவிப்பு

வி.எஸ். பாபு உயிரிழந்தது எப்படி?

சென்னை அமைந்தகரை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த செப். 9ஆம் தேதி நீண்ட காலமாக நீடித்த சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சைக்காக வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், 72 நாள்கள் சிகிச்சையில் இருந்த வி.எஸ். பாபுவுக்கு இன்று மதியம் 2.24 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என எம்ஜிஎம் தெரிவித்துள்ளது. 

முழுமையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவின் சிறந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது என்றும் எம்ஜிஎம் மருத்துவமனை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன் வெளியான 3 அறிக்கைகள்

  • இதற்கு முன்னதாக, வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை மூன்று முறை அறிக்கை வெளியிட்டது. செப். 10ஆம் தேதி முதல் அறிக்கை வெளியானது, மூச்சுத் திணறல் காரணமாக செப்டம்பர் 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  • தொடர்ந்து ஒரு வாரம் கழித்து, செப்டம்பர் 17ஆம் தேதி அன்று வெளியான இரண்டாவது அறிக்கையில், வி.எஸ். பாபுவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
  • அடுத்து செப்டம்பர் 22ஆம் தேதி வெளியான 3வது அறிக்கையில், தொடர் சிகிச்சை காரணமாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கு அவர் நன்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
  • 3வது அறிக்கை வெளியான அடுத்த நாள், அதாவது செப்டம்பர் 23ஆம் தேதி அன்று முதலமைச்சர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று வி.எஸ். பாபுவைச் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின் 58 நாட்களுக்கு மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இன்று அவர் மறைவையொட்டி அறிக்கை வெளியிடப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விவரம்

இதைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று (நவ. 18) தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து அலுவல் ரீதியான தகவல்கள் ஏதும் வெளியிப்படவில்லை என்றும் தனிப்பட்ட உரிமை, கண்ணியம், தனி நபரின் ரகசிய மருத்துவ ஆவணங்கள் ஆகியவற்றை வெளியிடும்படி கேட்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட தகவல்களை வெளியிடக் கோரி நவம்பர் 5 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து, சட்டப்படி வெளியிடக்கூடிய தகவல்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும், தொகுதி மக்களின் குறைகள், கோரிக்கைகள் இடையூறின்றி கவனிக்கப்படுவதை உறுதி செய்ய நிர்வாக ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

வழக்கறிஞர் திலகரசன் எழுப்பும் சந்தேகம்

இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட இருந்த நிலையில், இன்று வி.எஸ். பாபு காலமானார். எனவே, நீதிமன்ற விசாரணையை தவிர்க்க இன்று அவரது மறைவுச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளதோ என வழக்கறிஞரான திலகரசன் முதலமைச்சர் விஜய் மீது சந்தேகம் எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் திலகரசன் நமது ஜீ தமிழ் நியூஸ் தளத்திடம் கூறுகையில், "எம்எல்ஏ வி.எஸ். பாபு 72 நாட்கள் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டிருந்தார். எம்.எல்.ஏ என்ற முறையில், ஒரு 5 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனையில் இருந்து ஒரு அறிக்கை கொடுப்பார்கள். உடல்நிலை குறித்தும், என்னென்ன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பதையும் குறிப்பிடுவார்கள்.

வி.எஸ். பாபுவை பொறுத்தவரைக்கும் கொஞ்சம் அப்டேட்ஸ் மட்டும்தான் கொடுத்தார்கள், அதன்பின்னர் வரவில்லை. நேற்றைய தினம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

வழக்கறிஞர் திலகரசனின் பேட்டி ஆடியோ:

 

நேற்று மனு தாக்கல்... இன்று மறைவுச் செய்தி...

நாளையோ (நவ. 20), நாளை மறுநாளோ (நவ. 21) அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது. அப்படி இருக்கும்போது, கண்டிப்பாக ஒரு ஸ்டேட்மெண்ட்டை உயர் நீதிமன்றத்தில் சொல்லியாக வேண்டும். அதற்கு பயந்து ஒருவேளை இன்றைக்கே அவரது மறைவுச் செய்தியை அறிவித்துவிட்டார்களோ என்ற சந்தேகம்தான் மக்கள் மத்தியில் இருக்கிறது என நான் நினைக்கிறேன்.

ஒருவேளை இவ்வளவு நாள் எதுவுமே சொல்லாமல், திடீரென்று நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக மறைவுச் செய்தியை இன்றைக்கு அறிவித்துவிட்டார்களோ என்னவோ... தெரியவில்லை...

விஜய்யும் இதை தொடர்கிறாரா...?

இந்த மாதிரி ஒரு மரண செய்தியை அறிவிக்கிறது என்பது, உண்மையான ஒரு மரண தேதியும், பிற்காலத்தில் ஒன்றை அறிவிப்பதும் தமிழ்நாட்டு அரசியலில் புதிதில்லை என நான் சொல்ல நினைக்கிறேன்.

இது ஜெயலலிதா மரணத்திலும் நடந்தது, அவரது மறைவில் சந்தேகம் எழுந்தது. அதே மாதிரி தான் விஜய்யும் தொடர்கிறாரா என்ற சந்தேகம் மக்கள் மனதில் இருக்கிறது" என்றார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுவாக கூறப்படுகிறதே தவிர அதற்கு ஆதாரம் ஏதும் இதுவரை கிடையாது. எனவே, அதுவும் உறுதிப்படுத்தாத தகவல் மட்டுமே.

சந்தேகம் வர காரணம் என்ன?

வழக்கறிஞரின் பதிலுக்கு உடனே நமது செய்தியாளர் அவரிடம், "ஒருவரின் மரண செய்தியை அப்படி போலியாக, தேதி மாற்றி சொல்ல முடியாது அல்லவா...? அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது, அதன் தொடர்ச்சியாக தீவிர சிகிச்சையில் இருந்தார் என்ற தகவலும் தற்போது மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறதே... எனவே தேதி மாற்றி மரண செய்தியை அறிவிக்கிறார்கள் என எடுத்துக்கொள்ள முடியுமா?" என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், "இதில் சந்தேகப்பட வேண்டிய சூழ்நிலை எப்படி உருவாகிறது என்றால், 72 நாட்களில் பத்து நாட்களாவது அவரின் மருத்துவ அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள் என்றால் சந்தேகம் எதுவுமே வந்திருக்காது. அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. 

ஆதவ் அர்ஜுனா இன்று மருத்துவமனைக்கு செல்கிறார் என முதலில் செய்தி வெளியானது. அந்த செய்தி வெளியாகி சில மணிநேரங்களில் வி.எஸ்.பாபு மறைவுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. ஒருவேளை முன்னாடியே கூட சொல்லி இருந்திருக்கலாமே...

அவர் இறந்துவிட்டார், அதனால் ஆதவ் அர்ஜுனா போகிறார் என்பதையும் சொல்லலாமே. ஒரு சட்டமன்ற உறுப்பினர் உடல்நிலை விவகாரத்தில், ஒவ்வொரு விஷயமும் காலதாமதம் செய்தால் அனைவருக்குமே சந்தேகம் வரவே செய்யும்" என பேசினார்.

சந்தேகங்கள் மட்டுமே... ஆதாரமில்லை...

ஆனால், இவை அனைத்தும் வழக்கறிஞர் திலகரசன் எழுப்பிய கேள்விகளும் சந்தேகங்களும் மட்டுமே. வி.எஸ். பாபுவின் மரணத்தில் முறைகேடு நடந்ததாகவோ, மரண அறிவிப்பு தாமதப்படுத்தப்பட்டதாகவோ உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரம் எதையும் வழக்கறிஞர் குறிப்பிடப்படவில்லை. 

மருத்துவமனை அறிக்கையில் இன்று மதியம் 2.24 மணிக்கு அவர் உயிரிழந்தது என குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் அவர் இன்றுதான் உயிரிழந்தார் என தெரிகிறது. எனவே, நீதிமன்ற மனு மீதான விசாரணை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகள் விளக்கம் அளித்தால் வெளியானால் மட்டுமே, இந்த விவகாரத்தில் முழுமையான தெளிவு கிடைக்கும்.

மேலும் படிக்க | வி.எஸ். பாபு மறைவு: 'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - திருச்சி பயணத்தை ரத்து செய்த CM விஜய்

Add Zee News as a Preferred Source
TAGS:
TVK