• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /Explained: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக - வேட்பாளர்கள் யார், யார்?

Explained: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக - வேட்பாளர்கள் யார், யார்?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலை முன்னிட்டு ஏற்கெனவே, தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்தது. இந்தச் சூழலில், இந்த இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்த அதிமுகவும் தற்போது வேட்பாளரை அறிவித்துள்ளது.

Written BySudharsan G
Published: Sep 10, 2026, 20:27 IST|Updated: Sep 10, 2026, 21:06 IST
joinshare
Explained: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக - வேட்பாளர்கள் யார், யார்?
Image Credit: Madurantakam, Dharapuram by-election TVK, DMK, AIADMK Candidates | AI Generated Images : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madurantakam, Dharapuram By-election: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று 108 இடங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 

திமுகவின் கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் (5), விசிக (2), சிபிஐ (2), சிபிஎம் (2), ஐயூஎம்எல் (2) உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தது. இதில் சிபிஐ, சிபிஎம் மட்டும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் தனித்து வெற்றி கண்டது.

மேலும் படிக்க | Explained: தமிழக இடைத்தேர்தல் களம்: தாராபுரம் vs மதுராந்தகம்.. திமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தச் சூழலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, கரூர் எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் தங்களின் பொறுப்பை ராஜினாமா செய்து தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். திருச்சி கிழக்கு தொகுதியை முதலமைச்சர் விஜய்யும் ராஜினாமா செய்ய மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

2 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு

இந்தச் சூழலில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் மீது தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த 2 தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டும் தனித் தொகுதிகள் ஆகும். அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.

மும்முனை போட்டி

நேற்று முதல் (செப். 9) வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், வரும் செப். 16ஆம் தேதிதான் கடைசி நாளாகும். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் இந்த 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக களம் இறங்குகின்றன. மும்முனை போட்டி நிலவும் சூழலில், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் - முக்கிய வேட்பாளர்கள்

கட்சி    வேட்பாளர் பெயர்
தவெக     மரகதம் குமரவேல்
திமுக  ஐ. பரந்தாமன்
அதிமுக  கணிதா சம்பத்


தாராபுரம் இடைத்தேர்தல் - முக்கிய வேட்பாளர்கள்'

கட்சி    வேட்பாளர் பெயர்
தவெக    சத்யபாமா
திமுக      சுகன்யா
அதிமுக  கே. பானுமதி

தவெக வேட்பாளர்கள் யார் யார்?

அந்த வகையில், ஏற்கெனவே ஆளும் தவெக மற்றும் திமுக தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. குறிப்பாக அதிமுகவில் வென்று, பின்னர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கே அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது. தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா போட்டியிடுகின்றனர்.

மரகதம் குமரவேல்

  • அதிமுகவில் இருந்து தற்போது தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் 2006-11 வரை ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர்.
  • 2011-14 வரை ஒன்றிய தலைவராக இருந்தவர், மரகதம் குமரவேல். இவர் 2014ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினராக தேர்வானார்.
  • மரகதம் குமரவேலின் தந்தை, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் ராமாபுரம் தோட்டத்தில் பணியாற்றிவர் ஆவார்.
  • மரகதம் குமரவேல் மாவட்ட மகளிர் அணி செயலாளர், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். தற்போது தவெகவில் துணைப் பொதுச்செயலாளராக உள்ளார்.
  • இவரது கணவர் குமரவேலும் அதிமுகவில் இருந்து தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரும் தவெகவில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளராக செயலாற்றி வருகிறார்.

pic.twitter.com/nEH9s9t231

— TVK Vijay (@TVKVijayHQ) September 10, 2026

சத்யபாமா

  • திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்தவர்.
  • இவரது தந்தையும் அதிமுகவில் நீண்டகாலமாக செயலாற்றி வந்தார். தற்போது அவரும் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மேலும் படிக்க | கலைஞர் கருணாநிதி மீது 54 குற்றச்சாட்டுகள்! சர்க்காரியா கமிஷன் உண்மையும், வதந்தியும்.. நடந்தது என்ன? -Explained

முட்டிமோதும் திமுக

திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ. பரந்தாமன் களமிறக்கப்பட்டார். தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஐ. பரந்தாமன்

  • சென்னை எழும்பூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான பரந்தாமன் மதுராந்தகத்தில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
  • 2016 தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு 92 ஆயிரம் வாக்குகளை பெற்றும் தோல்வியை தழுவினார்.
  • இவர் கட்சியின் சட்டத்துறை மாநில இணைச் செயலாளராக இருந்து வருகிறார்.
  • இவருக்கு கடந்த 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவே வாய்ப்பு கிடைக்கவில்லை, அதற்கு காரணம் சேகர்பாபு என கூறப்பட்டது.
  • இந்நிலையில், திமுகவின் தோல்விக்கு பின்னர் பரந்தாமன் மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கினார். ஏற்கெனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திமுக சார்பாக பங்காற்றி கவனம் ஈர்த்தவர்.
  • தற்போது தவெக ஆட்சி அமைந்த பிறகு பல செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளும் தவெகவை வெளுத்து வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் கழக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட வழக்கறிஞர் இ.பரந்தாமன், வழக்கறிஞர் திருமதி எஸ்.சுகன்யா ஆகியோர் இன்று (10.9.2026), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக… pic.twitter.com/rJEavRasai

— DMK (@arivalayam) September 10, 2026

சுகன்யா

  • வழக்கறிஞர் சுகன்யா, தாராபுரம் தொகுதியில் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு குரல் கொடுத்தவராக அறியப்படுகிறார்.
  • திமுகவில் ஒன்றிய அணி செயலாளராக உள்ளார். கடந்த தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வந்துள்ளது.
  • இவரது கணவர் திமுக ஒன்றிய அணி செயலாளராகவும் உள்ளார்.

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்தச் சூழலில், அதிமுகவும் அதன் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

கணிதா சம்பத்

  • மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 
  • முன்னாள் எம்எல்ஏவான இவர் அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மற்றும் அதிமுக மகளிரணி இணைச் செயலாளர் ஆவார். 
  • இவர் 2001ஆம் ஆண்டு திருப்போரூர் தொகுதியிலும், 2011ஆம் ஆண்டு மதுராந்தகம் தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்-2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு pic.twitter.com/mqappC34a2

— AIADMK (@AIADMKOfficial) September 10, 2026

கே. பானுமதி

  • தாராபுரம் தொகுதிக்கு கே. பானுமதி என்பவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். 
  • இவர் அதிமுகவில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பை வகிக்கிறார். 
  • மேலும் மாவட்ட ஊராட்சிக் குழு 12வது வார்டு முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

நாதக களமிறங்குமா...?

  • மும்முனை போட்டி நிலவும் சூழலில், வழக்கம் போல் தனித்த சக்தியாக நாம் தமிழர் கட்சியும் இந்த இடைத்தேர்தலில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • கடந்த 2026 பொதுத் தேர்தலில் நாதக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் ஜி. ஜானகிராமன் என்பவர் போட்டியிட்டு 4,950 வாக்குகளையும் (2.51%), தாராபுரம் தொகுதியில் திவ்யா 6,026 வாக்குகளையும் (3.03%) மட்டுமே பெற்றனர். 
  • இதனால் மீண்டும் இவர்களுக்கே வாய்ப்பளிக்கப்படுமா அல்லது வழக்கம்போல் புதுமுகங்களுக்கு வாய்ப்பா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

தற்போது அதிமுக எம்எல்ஏ எண்ணிக்கை 41 ஆக உள்ள நிலையில், இழந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் அதிமுக உள்ளது. இருப்பினும் இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சிகளே சமீப காலமாக தமிழ்நாட்டில் வெற்றி பெற்று வருகிறார்கள். 

மேலும் மும்முனை போட்டி என்பதால் ஆளும் கட்சி வெல்லவே அதிக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். தேர்தலில் நிலவிய 'விஜய்யின் விசில் அலை' இன்று குறையவில்லை என்பதால் இந்த 2 தொகுதியும் தவெக வசம் வர வாய்ப்புள்ளது என்றும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

மேலும் படிக்க | இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை மாற்றிய உதயநிதி? 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer