SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக - வேட்பாளர்கள் யார், யார்?

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலை முன்னிட்டு ஏற்கெனவே, தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்தது. இந்தச் சூழலில், இந்த இரு தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்த அதிமுகவும் தற்போது வேட்பாளரை அறிவித்துள்ளது.

Written By Sudharsan G
Published: Sep 10, 2026, 20:27 IST | Updated: Sep 10, 2026, 21:06 IST
Image Credit: Madurantakam, Dharapuram by-election TVK, DMK, AIADMK Candidates | AI Generated Images : ChatGPT
Join

Madurantakam, Dharapuram By-election: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று 108 இடங்களை வென்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 

திமுகவின் கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் (5), விசிக (2), சிபிஐ (2), சிபிஎம் (2), ஐயூஎம்எல் (2) உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தது. இதில் சிபிஐ, சிபிஎம் மட்டும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் தனித்து வெற்றி கண்டது.

மேலும் படிக்க | Explained: தமிழக இடைத்தேர்தல் களம்: தாராபுரம் vs மதுராந்தகம்.. திமுக வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தச் சூழலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா, பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, கரூர் எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் தங்களின் பொறுப்பை ராஜினாமா செய்து தவெகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். திருச்சி கிழக்கு தொகுதியை முதலமைச்சர் விஜய்யும் ராஜினாமா செய்ய மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

2 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிப்பு

இந்தச் சூழலில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 5 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் மீது தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த 2 தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டும் தனித் தொகுதிகள் ஆகும். அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.

மும்முனை போட்டி

நேற்று முதல் (செப். 9) வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், வரும் செப். 16ஆம் தேதிதான் கடைசி நாளாகும். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் ஆளும் தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் இந்த 2 தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக களம் இறங்குகின்றன. மும்முனை போட்டி நிலவும் சூழலில், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் - முக்கிய வேட்பாளர்கள்

கட்சி    வேட்பாளர் பெயர்
தவெக     மரகதம் குமரவேல்
திமுக  ஐ. பரந்தாமன்
அதிமுக  கணிதா சம்பத்


தாராபுரம் இடைத்தேர்தல் - முக்கிய வேட்பாளர்கள்'

கட்சி    வேட்பாளர் பெயர்
தவெக    சத்யபாமா
திமுக      சுகன்யா
அதிமுக  கே. பானுமதி

தவெக வேட்பாளர்கள் யார் யார்?

அந்த வகையில், ஏற்கெனவே ஆளும் தவெக மற்றும் திமுக தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. குறிப்பாக அதிமுகவில் வென்று, பின்னர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கே அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது. தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் சத்யபாமா போட்டியிடுகின்றனர்.

மரகதம் குமரவேல்

சத்யபாமா

மேலும் படிக்க | கலைஞர் கருணாநிதி மீது 54 குற்றச்சாட்டுகள்! சர்க்காரியா கமிஷன் உண்மையும், வதந்தியும்.. நடந்தது என்ன? -Explained

முட்டிமோதும் திமுக

திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ. பரந்தாமன் களமிறக்கப்பட்டார். தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஐ. பரந்தாமன்

சுகன்யா

அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்தச் சூழலில், அதிமுகவும் அதன் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

கணிதா சம்பத்

கே. பானுமதி

நாதக களமிறங்குமா...?

வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

தற்போது அதிமுக எம்எல்ஏ எண்ணிக்கை 41 ஆக உள்ள நிலையில், இழந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் அதிமுக உள்ளது. இருப்பினும் இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சிகளே சமீப காலமாக தமிழ்நாட்டில் வெற்றி பெற்று வருகிறார்கள். 

மேலும் மும்முனை போட்டி என்பதால் ஆளும் கட்சி வெல்லவே அதிக வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். தேர்தலில் நிலவிய 'விஜய்யின் விசில் அலை' இன்று குறையவில்லை என்பதால் இந்த 2 தொகுதியும் தவெக வசம் வர வாய்ப்புள்ளது என்றும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

மேலும் படிக்க | இடைத்தேர்தல் புறக்கணிப்பு முடிவை மாற்றிய உதயநிதி? 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES