SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடக்கம் முதலே வலுவான முன்னிலை பெற்று வரும் நிலையில், விசிக மற்றும் பாமக ஆதரவு வாக்குகள் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.

Written By R Balaji
Published: Oct 09, 2026, 12:55 PM IST | Updated: Oct 09, 2026, 01:00 PM IST
Join

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார். ஐந்தாவது சுற்று நிலவரப்படி, சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த முன்னிலைக்கு பாமக மற்றும் விசிக ஆதரவாளர்களின் வாக்குகள் காரணமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய ஒரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் பதிவான வக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தாராபுரத்தில் தவெகவிற்கும் அதிமுகவிற்கும் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது தவெகவுடன் திமுக போட்டிப்போட்டு வருகிறது. திமுக மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மதுராந்தகம் தொகுதியை பொருத்தவரையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டத்தில் இருண்ட்தே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.

மதுராந்தகத்தில் திமுக வேட்பாளர் பரந்தாமன் சுமார் 19 ஆயிரம் வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. இதனால், அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த வாக்குகளில் ஒரு பகுதி தவெகவுக்கு மாறியிருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.

மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விசிக தற்போது தவெகவை ஆதரிக்கும் அரசியல் சூழலும் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல், அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என அறிவித்திருந்தது. இதனால் பாமக ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் தவெகவுக்கு வாக்களித்திருக்கலாம் என்ற கணிப்பும் முன்வைக்கப்படுகிறது.

மதுராந்தகம் தொகுதியில் பாமகவுக்கு சுமார் 9 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த வாக்குகள் எந்த கட்சிக்கு சென்றன என்பது இறுதி முடிவுகளுக்கு பிறகே தெளிவாகும். தற்போதைய நிலவரப்படி தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், பாமக மற்றும் விசிக ஆதரவாளர்களின் வாக்குகள் இந்த முன்னிலைக்கு பங்களித்திருக்கலாம் என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES