SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CM விஜய்க்கு முக்கியமான தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்தில் காலை 8 மணிக்கு கவுன்டிங்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (அக். 9) அறிவிக்கப்பட உள்ளன. இன்று காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

Written By Sudharsan G
Published: Oct 08, 2026, 11:48 PM IST | Updated: Oct 08, 2026, 11:56 PM IST
Join

தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி என மொத்தம் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த அக். 6ஆம் தேதி நடைபெற்றது. அதேபோல், அசாம் மாநிலத்தின் ஒரு மக்களவை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளிலும்; மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜிநகர் தொகுதிகளிலும்; புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. அசாம் மாநிலத்தில் நாகோன் மக்களவை தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

மேலும் படிக்க | 1976 வள்ளுவர் கோட்டம்... 2026 சென்னை மெட்ரோ - மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டிய முக்கிய வரலாறு

இடைத்தேர்தலில் 5 முனை போட்டி

தமிழ்நாட்டை பொருத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள், தங்களின் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பதவியை ராஜினாமா செய்த அவர்கள் தவெகவில் இணைந்து, தற்போது தவெக வேட்பாளர்களாக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சிபிஐ - சிபிஎம் இணைந்து இத்தேர்தலை சந்தித்தனர். இரண்டு தொகுதிகளிலும் ஐந்து முனை போட்டி நிலவியது.

மதுராந்தகத்தில் அதிக வாக்குப்பதிவு

அதேநேரத்தில் இரண்டு தொகுதிகளிலும் அதிகளவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நடைபெற்ற 5 இடைத்தேர்தல்களிலேயே மதுராந்தகம் தொகுதியில்தான் அதிகபட்ச வாக்கு சதவீதம் பதிவானது. மதுராந்தகத்தில் 85.99%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவாகின. புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி இடைதேர்தலில் 80.81% வாக்குகள் பதிவாகியது.

மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் தொகுதிகளிலும் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமின் நாகோன் மக்களவை தொகுதியிலும் 76% வாக்குகள் பதிவாகின. தமிழ்நாட்டை தவிர்த்து மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது.

மேலும் படிக்க | தீபாவளிக்குள் கிலோ ரூ.100-ஐ எட்டும்! உச்சத்தில் அரிசி விலை.. விழிபிதுங்கும் சாமானியர்கள் - காரணம் என்ன?

CM விஜய்க்கு முக்கிய தேர்தல்

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டு அரசியலுக்கு இந்த இடைத்தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் இரண்டிலும் தவெக வெற்றிபெறும்பட்சத்தில் அதன் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 109 ஆக உயரும்.

அதுமட்டுமின்றி இதில் வெற்றிபெற்றால், காலியாக இருக்கும் திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல் தவெகவுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். களத்தில் அதிமுகவும், திமுகவும் கடும் போட்டியை அளித்திருப்பது கவனிக்கத்தக்கது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

முதலமைச்சர் விஜய்க்கு மிக முக்கியமான இந்த இடைத்தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் உற்றுநோக்கப்படும். அப்படியிருக்க அக். 9ஆம் தேதி (வெள்ளி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. நிச்சயம் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதால் தமிழ்நாடு அரசியல் களம் காலை முதலே பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேபோல், மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் மாநிலத்திலும் இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளன.

மேலும் படிக்க | விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.4,000 டெபாசிட்.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES