• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /விக்கெட் கீப்பராகும் ஜெய்ஸ்வால்... இந்திய அணியில் இது ஏன் ரொம்ப முக்கியம்?

விக்கெட் கீப்பராகும் ஜெய்ஸ்வால்... இந்திய அணியில் இது ஏன் ரொம்ப முக்கியம்?

ரஞ்சி கோப்பை 2026 தொடரின் மும்பை அணி ஸ்குவாடில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியும் பெறுகிறார். இதனால் இந்திய அணியின் காம்பினேஷனில் ஏற்படப்போகும் தாக்கத்தை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Oct 09, 2026, 12:42 AM IST|Updated: Oct 09, 2026, 12:51 AM IST
joinshare
விக்கெட் கீப்பராகும் ஜெய்ஸ்வால்... இந்திய அணியில் இது ஏன் ரொம்ப முக்கியம்?
Image Credit: Yashasvi Jaiswal Wicket Keeping Practice | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

2

விக்கெட் கீப்பராகும் ஜெய்ஸ்வால்... இந்திய அணியில் இது ஏன் ரொம்ப முக்கியம்?

3

CM விஜய்க்கு முக்கியமான தேர்தல்: மதுராந்தகம், தாராபுரத்தில் காலை 8 மணிக்கு கவுன்டிங்

4

இந்தியாவின் பாஸ் அம்பானியா? எலான் மஸ்க் மீண்டும் சீண்டல்... முழு பின்னணி

5

21 மனைவிகளுடன் வாழும் பிச்சைக்காரர்... பெண்களே தேடி வருவார்களாம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ரஞ்சி கோப்பை 2026-27 தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 11) நாடு முழுவதும் தொடங்குகிறது. ரஞ்சி கோப்பையை கைப்பற்ற 32 அணிகள் முட்டிமோதுகின்றன. மொத்தம் 4 பிரிவுகள் உள்ள நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.

நடப்பு சாம்பியன் ஜம்மு காஷ்மீர் அணி குரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. கடந்தாண்டு இறுதிப்போட்டி வரை வந்த கர்நாடகா குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. 42 முறை ரஞ்சி கோப்பை தொடரை வென்ற மும்பை அணி குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு அணியும் அதே பிரிவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க | புவனேஷ்வர் குமார் இந்திய அணி கம்பேக்.. RCB-க்கு ஏற்பட்ட சிக்கல்? Explained

38 ஆண்டுகளாக காத்திருக்கும் தமிழ்நாடு

32 அணிகளும் தங்களின் ஸ்குவாடை அறிவித்து தற்போது முதல் சுற்றுப்போட்டிக்கு தயாராகி வருகிறது. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் அதே பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதும். குரூப் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.

அடுத்தாண்டு பிப்ரவரி 27ஆம் தேதி ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி தொடங்கும். ஒவ்வொரு அணிகளும் ரஞ்சி கோப்பையை வெல்ல பெரும் போராட்டத்தை நடத்தும். கடந்த சீசனில் யாருமே எதிர்பார்க்காத வகையில், ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணி பல அணிகளுக்கு ஊக்கம் அளித்திருக்கிறது. தமிழ்நாடு அணி 38 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

மும்பை அணியில் ஸ்டார் வீரர்கள்

இந்நிலையில், மும்பை அணியும் அதே தீவிரத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. கடைசியாக மும்பை அணி 2023-24 சீசனில் ரஞ்சி கோப்பை தொடரை வென்றது. சித்தேஷ் லாட் அணியை வழிநடத்துகிறார், ஆயுஷ் மாத்ரே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | கேப்டன் பதவியில் இருந்து சுப்மன் கில் நீக்கம்? கம்பீர் அதிரடி.. பிசிசிஐ கைகாட்டும் வீரர்!

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், தனுஷ் கோட்டியான், ஷம்ஸ் முலானி, முஷீர் கான், துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் மும்பை அணி ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர். ஸ்குவாடில் ஹர்திக் தமோர் மட்டுமே விக்கெட் கீப்பர் பேட்டராக இடம்பெற்றுள்ளார். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பராக பயிற்சி பெறும் வீடியோவும் வெளியாகியது. மும்பை அணியின் பயிற்சி ஆட்டத்தில் சுமார் 10 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்தார்.

Yashasvi Jaiswal has started training for upcoming Ranji Trophy 🏆 — He is seriously considering his Keeping and Bowling skills 😻 https://t.co/ozqiV01z3j

— Team Yashasvi Jaiswal (@yashasvi_j) October 7, 2026

விக்கெட் கீப்பராக ஜெய்ஸ்வால்

மும்பை அணியின் ஓபனரான ஜெய்ஸ்வால் ஒரு பேக்-அப் ஆப்ஷனாக விக்கெட் கீப்பர் பயிற்சியை பெற்று வருவதாக கேப்டன் சித்தேஷ் லாட் தெரிவித்துள்ளார். வரும் அக். 11ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் சண்டிகர் அணியை மும்பை அணி எதிர்கொள்ள இருக்கிறது. அடுத்து இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ தொடர் நடைபெற இருப்பதால் இரண்டாவது போட்டியில் ஜெய்ஸ்வால் விளையாடப்போவதில்லை.

பேட்டரும், லெக் ஸ்பின்னருமான ஜெய்ஸ்வால் அடுத்து விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்து அவர் விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்கும்பட்சத்தில் இந்திய அணி காம்பினேஷனில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறப்டுகிறது. இவர் விக்கெட் கீப்பிங் செய்யும்பட்சத்தில் வருங்காலத்தில் கூடுதலாக ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்டரை இந்திய அணியால் விளையாட முடியும்.

மேலும் படிக்க | SRH அணியில் கேப்டன்சி மோதல்? வெளியேற துடிக்கும் அபிஷேக் சர்மா – களமிறங்கிய யுவராஜ் சிங்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cricket Team