திமுக அரசின் மிகப்பெரிய 'கிரிமினல் வேஸ்ட்...' அமைச்சர் சிடிஆர் சொல்வது என்ன?
உப்பூரில் மின் உற்பத்தி செய்ய 6000 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்த திமுக, அதனை செயல்படுத்தவில்லை என்றும்; திமுக செய்த மிகப்பெரிய கிரிமினல் வேஸ்ட் இந்த உப்பூர் மின் நிலையத்தை அப்படியேவிட்டது என்றும் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், "மின் வாரியத்தில் 2013ஆம் ஆண்டுதான் நீண்டகால ஒப்பந்தமெல்லாம் போடப்பட்டது. 2013ஆம் ஆண்டுக்கு பிறகு நீண்டகால ஒப்பந்தத்தை தொடங்க உள்ளோம்.
33 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை 1,000 மெகாவாட் அளவுக்குத்தான் கொள்முதல் செய்ய உள்ளோம். நாளை (அக். 15) முதல் அக்.31ஆம் தேதிவரை மாலை 6 மணிமுதல் இரவு 12 மணிவரை மட்டுமே மின்சாரம் பயன்படுத்தப்படும்.
பெரும்பாலான மாநிலங்கள் 30 ரூபாய்க்கும் அதிகமாகத்தான் கொள்முதல் செய்கின்றன. மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால் ஊழல் செய்ய வழிவகையில்லை.
மிகப்பெரிய கிரிமினல் வேஸ்ட்
உப்பூரில் மின் உற்பத்தி செய்ய 6000 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்த திமுக, அதனை செயல்படுத்தவில்லை. திமுக செய்த மிகப்பெரிய கிரிமினல் வேஸ்ட் இந்த உப்பூர் மின் நிலையத்தை அப்படியேவிட்டது. தனிப்பட்ட காரணங்களால் அது உப்பூர் பவர் பிளான்டை அப்படியே விட்டுவிட்டார்கள்" என்றார்.
உப்பூர் மின் திட்டம் குறித்து அவர் விவரிக்கையில், "அதன் பிராஜெக்ட் ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன், தனிப்பட்ட முறையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து வந்தேன். அதை திரும்பக் கொண்டு வருவதற்கான வேலைகளிலே பிராஜெக்ட் ரிப்போர்ட் ரெடி பண்ணியிருக்கிறோம். ஏனென்றால் நிலக்கரியை எப்படி கொண்டு வருவது, ரயில் ரூட் வழியாகவா.
உப்பூர் மின் திட்டம் குறித்து...
இல்லையென்றால் கடல் வழியாக கொண்டு வருவதா? கடல் வழியாக உப்பூருக்கு பெரிய கப்பல்கள் வர முடியாது. அதனால், கப்பலில் உடன்குடியில் இருந்து கொண்டுவரலாமா, அதற்கு எவ்வளவு செலவாகும்? ரயில்வே தண்டவாளம் போட்டு சின்ன துறைமுகம் போடணும், அங்கு நீங்கள் ஸ்டார்க யார்ட் போடணும்.
இதெல்லாம் போடும்போது உற்பத்தி செலவு எவ்வளவு ஆகும்? இதையெல்லாம் வைத்து பிராஜெக்ட் பிளான் ரெடி பண்ண சொல்லியிருக்கிறோம். கண்டிப்பாக அதற்கான பிராஜெக்ட் பிளான் முடிவாகி அனுமதி கிடைத்த உடன் அறிவிப்போம்" என்றார்.
அரைவேக்காட்டுத்தனமான பேச்சு
மேலும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து பேசுகையில்,"ஒரு சிலர் 1 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடு என சொல்கிறார்கள், அதெல்லாம் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு. நம்மதான் எவ்வளவு செலவு என்று சொல்கிறோம், எவ்வளவு உற்பத்தி இருக்கிறது என்கிறோம், எவ்வளவு நமது தேவை என்பதை சொல்கிறோம், அதற்கு மட்டுமே மின்சாரத்தை வாங்குகிறோம் சொல்கிறோம்.
ஏனென்றால், முதலாவதாக இதற்கு முன்னாடி நீண்ட கால டெண்டர் போடப்படவில்லை. இது வந்து மணிநேரம் மட்டும்தான். 6 ஹவர்ஸ்க்கு மட்டும்தான். மாலை 6 மணியில் இருந்து நைட் 12 மணி வரைக்கும்தான். மத்த மாநிலங்கள் எல்லாம் பவர்கட் பண்ணியிருக்கிறார்கள். நாம் பவர் கட் பண்ண மாட்டோம் என்று சொல்லிவிட்டோம், மக்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக...
கேஸ் பவரின் உற்பத்தி செலவு
மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் மின்வெட்டு அறிவித்துவிட்டார்கள். தமிழ்நாடு அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.5 கோடி - ரூ.7 கோடி வரைதான் கூடுதல் செலவீனம் ஏற்படும். இதை கணக்கிட்டுதான் மின்சாரம் வாங்குகிறோமம். இனி எந்தெந்த காலகட்டங்களில் தேவைப்படும் என்றும சொல்லியிருக்கோம். இதுக்கான நீண்ட கால பிளான் நாம் செய்ய ஆரம்பித்துள்ளோம்.
மத்தியின் அரசின் NVVN நிறுவனம், அதனிடம் இருந்து மின்சாரம் வாங்குகிறோம், கேஎஸ் பவருடையே எல்லாருக்கும் தெரியும் யார் யாரெல்லாம் அதில் இருக்கிறார்கள் என்பது தெரியும். மற்றவர்களிடமும் நீங்கள் விசாரிக்கலாம். கேஸ் பவரின் உற்பத்தி செலவு எல்லாம் சேர்த்து 30 ரூபாய்க்கு மேல்தான். எந்தெந்த மாநிலங்களில் பவர் கட் செய்யவில்லையோ அவர்களும் இதே மாதிரி வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆந்திரா உட்பட எல்லா மாநிலங்களும் இதை வாங்கிவிட்டுதான் இருக்கிறார்கள்" என்றார்.