SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்' சர்ச்சையை கிளப்பிய பேச்சுக்கு... அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்

பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் சரியாக முடிவெட்டிக் கொண்டு வரவில்லை என்றால் மொட்டை அடியுங்கள், அதில் தவறே இல்லை என அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியது சர்ச்சையாக்கப்பட்டது. இந்நிலையில், தனது பேச்சுக்கு ஜெகதீஸ்வரி விளக்கம் அளித்துள்ளார்.

Written By Sudharsan G
Published: Nov 02, 2026, 07:59 PM IST | Updated: Nov 02, 2026, 08:28 PM IST
Join

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அய்யன்ரெட்டியாபட்டி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டடம் கட்டும் பணிக்கு அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி மற்றும் வன்னியரசு ஆகியோர் இன்று (நவ. 2) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

பெற்றோரின் முதல் கடமை

இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, "நம் வீட்டுப் பெண் பிள்ளைகளையும், ஆண் பிள்ளைகளையும் நல்லமுறையில் வளர்க்க வேண்டியது பெற்றோரின் முழுமுதற் கடமையாகும்.

குழந்தைகளுக்கு Good Touch & Bad Touch பற்றிச் சிறு வயதிலேயே தாய்மார்களான நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். யார் எதைக்கொடுத்தாலும் உடனடியாகப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதை குழந்தைகள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

மேலும் படிக்க | "தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் முழு முன்னெச்சரிக்கை!" - அமைச்சர் சொன்ன அப்டேட்!

மாணவர்கள் ரவடியை போல முடி வைக்கிறார்கள்...

இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் நாகரிகம் என்ற பெயரில் தலைமுடியை வித்தியாசமாக வெட்டுவது மற்றும் முறையற்ற ஆடைகளை அணிவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இன்றைய காலகட்டத்தில் பள்ளிக்கு மாணவர்கள் ரவுடியை போல முடிவைத்துக் கொண்டு வருவது பார்ப்பதற்கு வருத்தமாக இருக்கிறது.

மொட்டை அடிப்பதில் தவறில்லை

பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் சரியாக முடிவெட்டிக் கொண்டு வரவில்லை என்றால் மொட்டை அடியுங்கள், அதில் தவறே இல்லை. உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான் இதைச் சொல்லுகிறேன், பெற்றோர்களே ஏன் இதை கேட்க மாட்டேன் என்கிறீர்கள்...?

https://www.zeenewstamil.com/photos/tn-govt-announces-ration-things-door-delivery-on-november-4th-5th-before-diwali-to-many-districts-20395

சீருடையிலும் கவனம் தேவை

அதேபோல் முழங்கால் வரை பேண்டை தூக்கி மடித்து விட்டு அதை ஃபேஷன் என்று சொல்கிறார்கள், இது எல்லாம் தவறு. இது காவல்துறையின் விசாரணையின்போது தவறான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவர்களின் சீருடை, தலைமுடி திருத்தம் குறித்து கடுமையான நெறிமுறைகளைக் கொண்டுவர மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

குழந்தைகளின் கேள்விக்கு பதிலளியுங்கள்

மேலும், குழந்தை வளர்ப்பு குறித்து பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, "குழந்தைகள் நம்மிடம் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டால் கோபப்படாமல், சமையல் பணிகளைச் சற்று ஓரத்தில் வைத்துவிட்டு அவர்களின் சந்தேகங்களுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லுங்கள்.

அப்போதுதான் அவர்கள் சிறந்த சிந்தனையாளர்களாகவும் சமூகத்தில் உயர்ந்தவர்களாகவும் உருவெடுப்பார்கள். முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி, இது மக்களுக்கான ஊழலற்ற ஆட்சியாகத் தொடர்கிறது. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன" என்றார்.

அமைச்சர் ஜெகதீஸ்வரி விளக்கம்

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் இந்த பேச்சு சர்ச்சையாக்கப்பட்டது. இணையத்திலும் அமைச்சரின் பேச்சுக்கு இணையவாசிகள் தரப்பில் அதிருப்திகள் குவிந்தன. இந்நிலையில், அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சுக்கு அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இன்று இரவு 7.34 மணிக்கு போட்ட பதிவில், "இன்று திருச்சுழி, காரியாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அயன் ரெட்டியாபட்டி தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய அமைச்சர், மாணவர்கள் தலைமுடியை ஒழுங்காக வெட்டிக்கொண்டு நேர்த்தியான தோற்றத்துடன் பள்ளிக்கு வர வேண்டும் என்று தாயுள்ளத்தோடு அறிவுறுத்தினார்.

பள்ளிக்கூடம் என்பது கல்வியை மட்டுமல்ல, ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கற்றுத்தரும்
இடமாகும். பள்ளிகளுக்கென வகுக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளை மாணவர்கள் பின்பற்றி, ஒழுக்கத்துடன் வளர்ந்து சிறந்த குடிமக்களாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலேயே அமைச்சர் பேசியுள்ளார்.

அவர்களின் பேச்சு மாணவர்கள் மீதான தாயுள்ளத்தையும், அவர்களின் ஒழுக்கமான வளர்ச்சிக்கான உண்மையான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இதனை உள்நோக்கத்துடன் அணுகாமல், அதன் உண்மையான நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | நள்ளிரவில் கரையை கடக்கும் 'முரசு' புயல்.. சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES