• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /நாமக்கல் வேலைவாய்ப்பு: ரூ.44,000 வரை மாத ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?

நாமக்கல் வேலைவாய்ப்பு: ரூ.44,000 வரை மாத ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?

Namakkal Jobs : நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு. ரூ.44,000 வரை மாத ஊதியம். விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Aug 22, 2026, 04:30 PM IST|Updated: Aug 22, 2026, 04:38 PM IST
joinshare
நாமக்கல் வேலைவாய்ப்பு: ரூ.44,000 வரை மாத ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit: Namakkal Jobs

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

2

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

3

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

4

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

5

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 33 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், தகுதியுடைய நபர்கள் வரும் 31.08.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானவை என்றும், எக்காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்றும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.  

பணியிடங்கள், கல்வித் தகுதிகள் மற்றும் ஊதிய விவரங்கள்:

இப்பணிகளில் அதிகபட்சமாக 'Multipurpose Health Worker (Male) / Health Inspector Grade II' பிரிவில் 30 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 12-ஆம் வகுப்பில் உயிரியல் (Biology) அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் (Botany and Zoology) பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்திருப்பதோடு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இரண்டாண்டு கால MPHW (Male) / Health Inspector / Sanitary Inspector பயிற்சிப் படிப்பு முடித்திருக்க வேண்டும். 31.07.2026 தேதியின்படி 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.17,500 வழங்கப்படும்.  

'District Quality Consultant' பதவிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது. டென்டல், ஆயுஷ், நர்சிங், சமூக அறிவியல் அல்லது உயிரியல் அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டமும், மருத்துவமனை நிர்வாகம், பொது சுகாதாரம் அல்லது சுகாதார மேலாண்மை பிரிவில் முழுநேர முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் சுகாதார நிர்வாகத்தில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் அவசியம். 45 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் மற்றும் மதிப்பீட்டு அட்டை மூலம் தேர்வு செய்யப்படும் இவருக்கு அதிகபட்சமாக மாதம் ரூ.44,000 ஊதியமாக வழங்கப்படும்.  

'Audiologist cum Speech Therapist (DEIC)' பதவிக்கு 1 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Speech and Language Pathology பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்கு உட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் மற்றும் தகுதி மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.32,000 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

'Special Educator for Behavioural Therapy (DEIC's - One Stop Centre)' பதவிக்கு 1 காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. Special Education பிரிவில் டிப்ளமோ, இளங்கலை அல்லது முதுகலை பட்டம் (D.Ed / B.Ed / M.Ed) முடித்து, இந்திய மறுவாழ்வு கவுன்சிலில் (RCI) பதிவு செய்திருக்க வேண்டும். 40 வயதுக்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் பரிசீலிக்கப்படுவர். இப்பதவிக்கு மாத ஊதியமாக ரூ.20,000 வழங்கப்படும்.  

விண்ணப்ப நடைமுறை மற்றும் சமர்ப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவங்களை நாமக்கல் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது namakkal.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பிறந்த தேதி சான்று (பிறப்பு சான்றிதழ் / 10 அல்லது 12-ஆம் வகுப்பு சான்றிதழ்), கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள், மற்றும் இருப்பிட சான்றாக வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, தொலைபேசி அல்லது மின்கட்டண ரசீது ஆகியவற்றின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ "மாவட்ட சுகாதார அலுவலர் / நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம் – 637003" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 31.08.2026 மாலை 5.00 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. கூடுதல் விவரங்களுக்கு 04286-281424 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu