• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்

New Ration card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வர இருக்கிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 23, 2026, 05:47 PM IST|Updated: Sep 23, 2026, 05:52 PM IST
joinshare
புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்
Image Credit: New Ration Card

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

New Ration card : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசின் நலத்திட்டங்களைப் பெற ரேஷன் கார்டு அத்தியாவசியம். ரேஷன் கார்டின் வகையைப் பொறுத்தே பயனாளிகள் தேர்வு செய்கிறது தமிழ்நாடு அரசு. அதனால், ஆயிரக்கணக்கானோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, காத்திருக்கிறார்கள். தங்களின் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆன்லைனில் மூலம் நாள்தோறும் செக் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான அப்டேட் ஒன்று இன்று வந்துள்ளது. விரைவில் புதிய ரேஷன் கார்டுகளை விநியோகிக்க அரசு ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது.

உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தலைமையில் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று பொதுவிநியோக திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைந்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், அனைத்து மாவட்ட துணைப்பதிவாளர்கள் (பொது விநியோகத் திட்டம்) குடிமைப்பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வத் துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட கணினி மேளவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளான புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களுக்கு தீர்வு, புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு. நியாய விலைக் கடைகள் தணிக்கை மற்றும் அத்தியாவசியம் பொருட்கள் கைப்பற்றுகை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

மேலும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு பவெங்கடரமணன் அவர்களால் சட்டப்பேரவையில் "துறைசார்ந்த அனைத்து அலுவலர்களும் நியாயவிலைக் கடைகள் மற்றும் கிடங்குகளை தணிக்கை செய்ய ஏதுவாக பொது விநியோகத் திட்ட கைப்பேசி ஆய்வு செயலி உருவளர்கப்படும்' என்ற அறிவிப்பினை செயங்படுத்தும் விதமாக பொது விநியோகத்திட்ட கைப்பேசி ஆய்வு செயலி அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்கூட்டம் புதிய ரேஷன் கார்டு எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இனி பரிசீலனையில் உள்ள புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, ரேஷன் கார்டுக்கு காத்திருப்பவர்களுக்கு விரைவில் குட் நியூஸ் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Ration Card