SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஈனச்செயல்.. அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மனித மிருகங்கள்.. மூடிமறைத்த பள்ளி நிர்வாகம்?

Palani School Incident: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் அரசு தொடக்கப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கழித்து அசுத்தப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் எஸ்பி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Written By Umabarkavi K
Published: Oct 08, 2026, 11:10 AM IST | Updated: Oct 08, 2026, 11:41 AM IST
Join

Palani School Incident: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். காலாண்டு விடுமுறை முடிந்து, அக்டோபர் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறப்பு அன்று காலை, குழந்தைகளுக்கு காலை உணவு சமைப்பதற்காக சமையல் பணியாளர்கள் பள்ளிக்கு வந்திருக்கின்றனர்.

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம்

அப்போது, தண்ணீர் தொட்டி குழாய் சேதமடைந்து, உடைந்து கிடப்பதை கண்டு சந்தேகம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து, வளாகத்தில் வைக்கப்பட்டு இரந்த பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் மூடியை திறந்து, பார்த்துள்ளனர். அப்போது தொட்டியின் உள்ளே மனிதக் கழிவு மிதப்பதை கண்டு ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, இது தொடர்பாக தலைமை ஆசிரியர், மற்ற ஆசிரியர்கள் என யாரும் புகார் தெரிவிக்காமல், குடிநீர் தொட்டியை அவசரமாக கழுவி சுத்தம் செய்திருக்கின்றனர். 

இச்சம்பவம் குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கோ அல்லது கிராம மக்களுக்கோ உடனடியாகத் தெரிவிக்கப்படாமல் 2 நாட்களாக மூடி மறைக்கப்பட்ட நிலையில், நேற்று பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தின்போது இந்த அதிர்ச்சி உண்மை வெளியே கசிந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள், சின்னஞ்சிறு மாணவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் படிக்க: திருப்பதி செல்வோருக்கு குட் நியூஸ்! ஏழுமலையானை ஈஸியா தரிசிக்கலாம்.. தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

2 நாட்கள் மூடி மறைத்த பள்ளி நிர்வாகம்?

இதுகுறித்து விளக்கமளித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், திங்கட்கிழமை காலையில் தொட்டி அசுத்தப்படுத்தப்பட்டிருந்ததைக் கண்டு, மாணவர்கள் யாரும் அத்தண்ணீரை அருந்திவிடக் கூடாது என்பதற்காக உடனடியாக பிளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்து வைத்துவிட்டதாகவும், மாணவர்கள் யாரும் அந்த நீரைக் குடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், இச்சம்பவம் குறித்து மேல் கல்வித்துறை  அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட குடிநீர் தொட்டியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்களிடம் நேரில் விசாரணை நடத்திய அவர், இத்தகாத செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரங்கள்

3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இதனைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் கீரனூர் காவல்துறையினர்  (BNS) சட்டத்தின்கீழ், பொதுக் குடிநீர் ஆதாரத்தை அசுத்தம் செய்தல் (பிரிவு 279), நோய் தொற்றைப் பரப்பும் வகையில் ஆபத்தான முறையில் செயல்படுதல் (பிரிவு 272) மற்றும் அசுத்தமான பொருட்களைக் கலந்து உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் (பிரிவு 123) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் கல்வித்துறை அதிகாரிகள் இன்று பள்ளியை ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் மேலும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருந்த சம்பவம் அந்தப் பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், பள்ளிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குடிநீரில் மலத்தை கலந்த  குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: ஆண்களுக்கு சூப்பர் நியூஸ்! வெற்றிப் பயணம் பஸ்களில் கட்டணம் குறைப்பு? அரசு அதிரடி

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES