• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தமிழ்நாட்டில் 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு! 10 பேர் பலி..பகீர் தகவல் சொன்ன அமைச்சர்

தமிழ்நாட்டில் 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு! 10 பேர் பலி..பகீர் தகவல் சொன்ன அமைச்சர்

தமிழ்நாட்டில், தொடர்ந்து டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இதனால் மொத்தம் 10 பேர் உயிரிழந்திருப்படாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 08, 2026, 12:52 PM IST|Updated: Oct 08, 2026, 01:01 PM IST
joinshare
தமிழ்நாட்டில் 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு! 10 பேர் பலி..பகீர் தகவல் சொன்ன அமைச்சர்
Image Credit: Minister Arunraj | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கேப்டன் பதவியில் இருந்து சுப்மன் கில் நீக்கம்? கம்பீர் அதிரடி.. பிசிசிஐ கைகாட்டும் வீரர்!

கேப்டன் பதவியில் இருந்து சுப்மன் கில் நீக்கம்? கம்பீர் அதிரடி.. பிசிசிஐ கைகாட்டும் வீரர்!

2

திரையுலகிலிருந்து தள்ளியே இருக்கும் நானா படேகர் குடும்பம்! காரணம் என்ன?

3

தமிழ்நாட்டில் 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு! 10 பேர் பலி..பகீர் தகவல் சொன்ன அமைச்சர்

4

ஜனநாயகத்தை காக்க இணைந்த இளைஞர்கள்: இந்தியா வந்த துருவ் ராத்தி -புதிய திருப்பம்!

5

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு.. ரூ.1.25 லட்சம் பெறுவது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவது மக்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் தீவிர கொசு ஒழிப்பு பணிகளையும் மருத்துவ முகாம்களையும் நடத்தி வருகிறது.

அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பு:

தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசு சார்பில் டெங்கு பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மாநிலம் முழுவதும் நாள்தோறும் டெங்கு காய்ச்சலுக்கான முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் பரிசோதனை செய்து கொள்கின்றனர் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜனவரி 1 முதல் அக்டோபர் ஏழு வரை மொத்தம் 21,655 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 10 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு.. ரூ.1.25 லட்சம் பெறுவது எப்படி?

சென்னையில் குறையும் பாதிப்பு..!

தற்போது சென்னையில் டெங்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்த அமைச்சர், பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பருவ காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கட்டட பணிகள் நடந்து கொண்ட இடத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தண்ணீர் தேங்கி இருந்தால் முதல்முறையாக ரூ. 10,000 அபராதமும் இரண்டாவது முறை அதைத் தவறு நடந்தால் கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.

ஒரே நாளில் 301 பேருக்கு பாதிப்பு!

தமிழ்நாடு முழுவதும், நேற்று ஒரே நாளில் 301 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது; இதில், அதிகபட்சமாக சென்னையில் 62 பேருக்கும், திருவள்ளூரில் 49 பேருக்கும், விழுப்புரத்தில் 21 பேருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக சுமார் 6414 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

மேலும் படிக்க | TN Shutdown: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 09) மின்தடை.. எங்கெல்லாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu