SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

பிரதமர் மோடி பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தை தொடங்கி வைத்தார். ரூ.13 ஆயிரம் கோடி திட்டங்களைத் தொடங்கிய நிகழ்வில், முதலமைச்சர் விஜய் கோவை - மதுரை மெட்ரோ, நிதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

Written By Sudharsan G
Published: Oct 11, 2026, 03:59 PM IST | Updated: Oct 11, 2026, 04:16 PM IST
Join

கடந்த மே மாதம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் பிரதமர் மோடி முதல்முறையாக அரசு முறை பயணமாக இன்று (அக். 11) தமிழ்நாடு வந்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று காலை 10.50 மணியளவில் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மேலும் படிக்க | வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ தொடக்கம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக போரூர் சென்றடைந்தார். அப்போது வழிநெடுக சாலை ஓரம் இருந்து பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.

பூந்தமல்லி பைபாஸ் - வடபழனி இடையிலான புதிய மெட்ரோ வழித்தடத்தை கொடியசைத்து திறந்துவைத்தார். அந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சென்னை மெட்ரோ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மெட்ரோவை தொடங்கிவைத்து கொடியசைத்த போது பிரதமர் மோடி, விஜய்யின் கைகளையும் சேர்ந்து கொடியசைத்தார்.

ஐஐடிக்குச் சென்ற பிரதமர் மோடி

அங்கிருந்து மொபைலில் யூபிஐ மூலம் டிக்கெட் எடுத்த பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் மற்றும் அதிகாரியுடன் மெட்ரோவில் பயணித்தார். பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் போரூர் முதல் பூந்தமல்லி வரை சென்று, அங்கிருந்து மீண்டும் போரூர் வந்தடைந்தனர். தொடர்ந்து போரூரில் இருந்து சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஐஐடிக்கு சென்றார்.

அப்போதும் சாலை ஓரம் நின்ற பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். தொடர்ந்து, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பிரதமர் மோடி, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் விஜய் ஆகியோர் வழிபாடு மேற்கொண்டனர். அடுத்து, சென்னை ஐஐடியில் அமைந்துள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க | பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கம்.. நேர அட்டவணை, கட்டணம் இதோ

முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து...

மொத்தம் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார். தமிழ்நாட்டில் சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதேபோல், பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யின் கையை பிடித்து, சேர்ந்தே திட்டங்களை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர், முதலமைச்சர் விஜய், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் தொடங்கியது. இரண்டாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடி ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர். அந்த வகையில், பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

முதலமைச்சர் விஜய்யின் கோரிக்கைகள்

மேலும் படிக்க | பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: பயணிகளுக்கு குட் நியூஸ்... இணைப்பு பேருந்துகள் இயக்கம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES