• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ரேஷன் கடை, கூட்டுறவு வங்கி குறைகளை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் – அரசு புதிய வசதி!

ரேஷன் கடை, கூட்டுறவு வங்கி குறைகளை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் – அரசு புதிய வசதி!

ரேஷன் கடை, கூட்டுறவு வங்கி குறைகளை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என்ற புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 26, 2026, 07:18 AM IST|Updated: Sep 26, 2026, 07:22 AM IST
joinshare
ரேஷன் கடை, கூட்டுறவு வங்கி குறைகளை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் – அரசு புதிய வசதி!
Image Credit: Tamil Nadu ration shop complaint

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் தொடர்பான பொதுமக்கள், விவசாயிகள், நுகர்வோர் மற்றும் துறைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தலைமை அலுவலகத்திற்கு எளிதாகவும் விரைவாகவும் தெரிவிக்கும் வகையில் பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 9884000845 என்ற எண்ணை அதிகாரப்பூர்வ குறைதீர்வு எண்ணாக அறிவித்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் விரிவான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.  

அலுவலகங்களில் தகவல் பலகை வைத்தல்:

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வாட்ஸ்அப் எண் 9884000845 மற்றும் குறைதீர்வு வசதி குறித்த விவரங்களை, அனைத்து மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள், சரக துணைப்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் நியாய விலைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின் தகவல் பலகைகளிலும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் எளிதில் பார்க்கும் வண்ணம் பெரிய எழுத்துகளில் காட்சிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சங்கங்களுக்கு வருகை தரும் விவசாயிகள், உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே இந்த வசதி குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வழிகாட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மனுக்கள் பரிசீலனை மற்றும் தீர்வுக்கான கால அட்டவணை:

இந்த வாட்ஸ்அப் எண் வாயிலாகப் பெறப்படும் புகார்கள் அனைத்தும் மின்னணு அலுவலக தளத்தில் பதிவு செய்யப்பட்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட மண்டலங்கள் அல்லது தொடர்புடைய பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தேக்கமின்றி விரைவாகத் தீர்வு காணும் வகையில் பின்வரும் வாராந்திர கால அட்டவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது:  

முதல் வாரம்: வட்டார அளவில் உள்ள கூட்டுறவு சார்பதிவாளர் அல்லது கள அலுவலர், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று கோரிக்கை மனுக்களைப் பெற்று தகுதியின் அடிப்படையில் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும்.  

இரண்டாம் வாரம்: சார்பதிவாளர் அளவில் தீர்வு காண இயலாத மனுக்கள் மற்றும் துணைப்பதிவாளர்களால் நேரடியாகப் பெறப்படும் மனுக்கள் மீது, மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று சரக துணைப்பதிவாளர்கள் விசாரணை நடத்தித் தீர்வு காண வேண்டும்.  

மூன்றாம் வாரம்: மேற்கண்ட இரு நிலைகளிலும் தீர்வு எட்டப்படாத மனுக்கள் மற்றும் மண்டல அளவில் நேரடியாகப் பெறப்படும் மனுக்கள் மீது, மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று மண்டல இணைப்பதிவாளர்கள் ஆய்வு மேற்கொண்டு தீர்வு வழங்க வேண்டும்.  

நான்காவது வாரம்: மாவட்டத்தில் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவை விவரங்கள் குறித்து நான்காவது வாரத்தில் மாவட்ட மாமண்டல அலுவலர் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  

பதிவாளர் தலைமையில் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம்:

ஒவ்வொரு மாதமும் பெறப்படும் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெறும். இதில் மண்டல அலுவலர்கள் மற்றும் தலைமை அலுவலக கூடுதல் பதிவாளர்களுடன் கூட்டு ஆய்வு நடத்தப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முழுமையான தீர்வு காணப்படுவது உறுதி செய்யப்படும் என அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Ration Card