• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /பவர்கட் பஞ்சாயத்து Explained: மின்சாரம் இருக்கிறது... ஆனாலும் தொடர் மின்வெட்டு ஏன்...?

பவர்கட் பஞ்சாயத்து Explained: மின்சாரம் இருக்கிறது... ஆனாலும் தொடர் மின்வெட்டு ஏன்...?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அம்பாசமுத்திரம், கரூர் போன்ற இடங்களில் மக்கள் வீதிக்கு இறங்கியதையும் பார்த்தோம்.

Written BySudharsan G
Published: Sep 14, 2026, 12:41 AM IST|Updated: Sep 14, 2026, 02:59 PM IST
joinshare
பவர்கட் பஞ்சாயத்து Explained: மின்சாரம் இருக்கிறது... ஆனாலும் தொடர் மின்வெட்டு ஏன்...?
Image Credit: Power Cut Crisis | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தற்போது நிலைமை சீராகிவிட்டதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்திருக்கிறது. அதிலும், தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு என மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

ஆம், உண்மைதான்... தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் சமீப நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுவது   மக்களிடையே கேள்வியை எழுப்பி உள்ளது. மின்தட்டுப்பாடு என பொதுவாக கூறப்படுகிறது. மின்தேவை அதிகரித்திருந்தாலும், அதிகரித்துள்ள மின்தேவையை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதா...? என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கான விடையை இங்கு விரிவாக அலசலாம்.

மின்தேவை ஏன் இவ்வளவு அதிகரித்துள்ளது...?

அக்டோபரில் வடகிழக்கு பருவமழை வழக்கமாக தொடங்கிவிடும் என்பதால் செப்டம்பர் மாதம் பொதுவாக அதிகளவில் வெயில் இருக்காது. அப்படியிருக்க, இந்தாண்டு பல பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் ஏசி, மின்விசிறி போன்றவற்றின் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் மழைப்பற்றாக்குறை காரணமாக விவசாயத்திற்கான நீர்ப்பாசன பம்புகளின் பயன்பாடும் சில மாநிலங்களில் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் மின்தேவை அதிகரித்திருக்கிறது.

மின்சார நெருக்கடி - முக்கிய புள்ளிவிவரங்கள்

இந்தியாவின் உச்ச மின்தேவை   சுமார் 267 GW
இந்தியாவின் ஆகஸ்ட் மின்நுகர்வு  169 பில்லியன் யூனிட்
குறைந்த நிலக்கரி கையிருப்புள்ள மின் நிலையங்கள்59 நிலையங்கள்
இந்திய நீர்மின் உற்பத்தி9% குறைவு
சூரிய மின்சாரம்பகல் நேர தேவையை பெருமளவில் சமாளிக்கிறது.
இரவு நேர சிக்கல்சூரிய உற்பத்தி குறைவு, வீட்டு நுகர்வு அதிகரிப்பு

ஆகஸ்ட் 2026 நிலவரப்படி இந்தியாவின் மின்சார நுகர்வு ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் (ஆகஸ்ட் 2025 விட) 12.8% உயர்ந்துள்ளது. 2026 ஆகஸ்டில் மின் நுகர்வு 169 பில்லியன் யூனிட்டாக உச்சம் தொட்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் உச்ச மின்தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கேரளாவில் என்ன பிரச்னை?

  • கேரளாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் ஆட்சி மீதும், புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள வி.டி. சதீஷன் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. மின்சார ஊழியர்களுடன் சதீஷன் நடனமாடும் வகையில் வைரலான வீடியோக்களும் பவர்கட் பஞ்சாயத்தால்தான். அந்தளவிற்கு கேரளாவில் பிரச்னை அதிகமாக இருந்திக்கிறது.
  • செப்டம்பரில் கேரளாவின் மின்தேவை 5 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் சராசரி அதிகபட்ச தேவை சுமார் 3,600 - 3,700 மெகாவாட்டாக இருந்தது. அதாவது, மிகப்பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது.
  • இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மழைப்பற்றாக்குறை. அணைகளுக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால், நீர்மின் உற்பத்தி குறைந்துள்ளது. அதே நேரத்தில் உச்ச நேர மின்நுகர்வு கடந்த ஆண்டுகளை விட சுமார் 800 முதல் 900 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது என கேரள அரசு தெரிவித்திருந்தது.
  • இதனால் மின்சாரத்தை வெளியில் இருந்து அதிக விலைக்கு வாங்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. கிடைக்கும் மின்சாரம் மற்றும் மின்தேவைக்கு இடையே இடைவெளி ஏற்பட்டதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் கட்டுப்படுத்தப்பட்ட மின்தடைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

பஞ்சாப்பிலும் மின்தடை பிரச்னை

  • பஞ்சாபில் பிரச்னையின் தன்மை சற்று வேறுபட்டது. மழைப்பற்றாக்குறை காரணமாக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் அதிகமாக நிலத்தடி நீர் பம்புகளைப் பயன்படுத்தியதால் மின்தேவை கடுமையாக உயர்ந்தது.
  • செப்டம்பர் 2ஆம் தேதி அன்று அதிகபட்ச மின்தேவை 16,343 மெகாவாட்டை எட்டியது. இது கடந்த ஆண்டின் செப்டம்பர் 2ஆம் தேதி பயன்பாட்டை விட சுமார் 139% அதிகம்.
  • இதோடு நில்லாமல், அங்கு சில அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைவு மற்றும் உற்பத்தி அலகுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளும் மின்வெட்டு பிரச்னையை தீவிரமாக்கின. இதனால், வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் மின்தடை ஏற்பட்டது.
  • பஞ்சாப் மின்தடை விவகாரத்தில் ஒரு முக்கிய விவாதம் எழுந்தது. பஞ்சாப் மாநில அரசின் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு போதுமானதாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதேநேரத்தில் மின் உற்பத்தி குறைந்ததற்கு மின் நிலையங்களின் குறைந்த Plant Load Factor முக்கிய காரணம் எனவும் மத்திய அரசு கூறியிருக்கிறது. இதனால், கடும் விவாதம் அங்கு எழுந்திருக்கிறது.
  • ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் என்ன காரணம்?

  • தமிழ்நாட்டிலும் கேரளா, பஞ்சாப்பை போன்று அதிகரித்த வெப்பநிலை, அதிகளவில் மின்நுகர்வு ஆகியவை மின்வெட்டுக்கு காரணிகளாக உள்ளன. ஆனால், கைவசம் மின்சாரம் இருந்தாலும், மின்சாரத்தை தேவையான இடத்திற்கு, தேவையான நேரத்தில் கொண்டு செல்லும் விநியோக கட்டமைப்பும் வலுவானதாக இருக்க வேண்டும்.
  • மின்தேவை திடீரென அதிகரிக்கும்போது டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்கள், உள்ளூர் மின் வழித்தடங்கள் ஆகியவற்றில் அதிக சுமை ஏற்படலாம். இதனால், Low Voltage போன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது திட்டமிட்ட மின்தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல நகரங்களில் இதுபோன்ற விநியோக கூட்டமைப்பு அழுத்தம் மின்தடைக்கு காரணமாக இருந்துள்ளது.

நாடு முழுவதும் மின் பற்றாக்குறையா...?

இந்தியா முழுவதும் மின் பற்றாக்குறை என பொதுவாக கூறிவிட முடியாது. அதாவது குறிப்பிட்ட நேரத்தில் தேவையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து, வாங்கி, விநியோகித்து சமநிலைப்படுத்துவதில்தான் அதிகமாக உள்ளது.

பகலில் சூரிய மின்சாரம் அதிகமாக கிடைக்கலாம். ஆனால், மாலை சூரிய உற்பத்தி குறையும் நேரத்தில் வீடுகளில் மின்நுகர்வு அதிகரிக்கிறது.  அந்த நேரத்தில் அனல் மின்சாரம், நீர் மின்சாரம் மற்றும் பிற ஆதாரங்கள் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.

மழைப்பற்றாக்குறை என்பது நீர்மின் உற்பத்தியையும் பாதிக்கிறது. நிலக்கரி கையிருப்பு குறைவு அனல் மின் உற்பத்தியையும் பாதிக்கிறது.

இதற்கு தீர்வு தான் என்ன?

நீண்ட கால நோக்கில் பார்த்தோமானால், புதிய மின் உற்பத்தி திறனை உருவாக்குவது முக்கியம். அதோடு, மின் சேமிப்பு பேட்டரிகள், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை சேமித்து தேவையான நேரத்தில் பயன்படுத்துதல், நிலக்கரி விநியோகத்தை சீராக வைத்திருத்தல், பழைய மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் உச்ச நேர மின்நுகர்வை நிர்வகித்தல் ஆகியவை அவசியம்.

எனவே, தற்போதைய பவர்கட் பிரச்னை ஒரு மாநிலத்தின் பிரச்னை மட்டுமல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். காலநிலை மாற்றம், எதிர்பாராத அளவிற்கு உயரும் மின்தேவை, உற்பத்தியிலும் விநியோகத்திலும் ஏற்படும் தடைகள் ஆகியவை சேர்ந்ததே தற்போதைய மின்சார சார்ந்த நெருக்கடியின் முக்கிய காரணம். இந்த நெருக்கடியை தணிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer
India