• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /சாத்தான்குளம் பெயர் பலகை: இந்தி எழுத்துக்கள் அழிப்பு; அதிகாரிகள் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

சாத்தான்குளம் பெயர் பலகை: இந்தி எழுத்துக்கள் அழிப்பு; அதிகாரிகள் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

Sathankulam Sign Board: சாத்தான்குளத்தில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையில் இந்தி பெயர்களும் இடம்பெற்றது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில், இந்தி பெயர்கள் உடனே நீக்கப்பட்டன.

Written BySudharsan G
Published: Oct 02, 2026, 11:43 AM IST|Updated: Oct 02, 2026, 11:51 AM IST
joinshare
சாத்தான்குளம் பெயர் பலகை: இந்தி எழுத்துக்கள் அழிப்பு; அதிகாரிகள் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?
Image Credit: Sathankullam Sign Board Controversy | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்! பெயர் சேர்க்க முக்கிய வாய்ப்பு..

சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்! பெயர் சேர்க்க முக்கிய வாய்ப்பு..

2

Explainer: ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்'.... 8வது ஊதியக் குழுவிடம் முக்கிய கோரிக்கை - OROP என்றால் என்ன?

3

சாத்தான்குளம் பெயர் பலகை: இந்தி எழுத்துக்கள் அழிப்பு; அதிகாரிகள் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

4

டிகிரி இருக்கா? உச்ச நீதிமன்றத்தில் வேலை ரெடியா இருக்கு: எப்படி விண்ணப்பிப்பது?

5

‘சிக்மா’ படம் எப்படியிருக்கு? ரசிகர்கள் கருத்துகள் என்ன? X விமர்சனம்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Sathankulam Sign Board Hindi Words Removed: தூத்துக்குடி சாத்தான்குளத்தில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் ஊரின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்களுடன், இந்தியிலும் பொறிக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது.

தமிழ்நாடு அரசு பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகையில் இந்தி மொழியில் ஊர் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. தமிழ்நாடு அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல்... 3 மாதங்களாக தொடர் சரிவு - கடுமையாக சாடும் திமுக

ஒன்றிய அரசு சார்ந்த அலுவலகங்கள், ரயில் நிலையங்களில்தான் இதுபோல் இந்தி மொழி பயன்பாடுகளை தமிழ்நாட்டில் பார்க்க வேண்டும். அதிலும் பல்வேறு எதிர்ப்புகளை அடுத்து இந்தி மொழி எழுத்துக்கள் பல இடங்களில் அழிக்கப்பட்டிருக்கின்றன.

மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அப்படியிருக்க, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட இந்தி மொழி பெயர் பலகை ஆளும் தவெக அரசின் மீது விமர்சனங்களை எழுப்பியிருந்தது. முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினும் அவரது X தளத்தில் இச்சம்பவத்தை குறிப்பிட்டு ஆளும் தவெக அரசை கடுமையாக விமர்சித்தார்.

இதுதான் மாற்றமா...?

அதில், "இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது. தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல. எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் தவெக அரசின் மற்றுமொரு முயற்சியா இது?" என விமர்சித்தார்.

இருமொழிக் கொள்கையில் விளையாட வேண்டாம்....

வடமாநில சமூக வலைதள பிரபலங்களுக்காக (Influencer) ரீல்ஸ் ஆட்சி நடத்தும் தவெக அரசு இதன் ஆபத்தை உணர்ந்து, உடனடியாகத் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். மேலும்,  இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை என்றும்; அதில் விளையாட வேண்டாம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | இனி டோல் கேட்ல நிற்க வேண்டாம்.. பரனூரில் அமலான புதிய வசதி!

அதிகாரிகள் சஸ்பெண்ட்

இந்நிலையில், மாநில நெடுஞ்சாலையில் இந்தியில் ஊர் பெயர்கள் அமைக்கப்பட்ட விவகாரத்தில், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசின்… pic.twitter.com/6OHMhp3QnV

— TN DIPR (@TNDIPRNEWS) October 2, 2026

உடனடியாக நீக்கப்பட்ட இந்தி எழுத்துக்கள்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் இந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன" என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அரசு எடுத்த நடவடிக்கை

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும்; துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செக் வைத்த தமிழக அரசு, புகார் எண்கள் அறிவிப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu