SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு... அரசின் குறும்படப் போட்டி - சமர்பிக்க கடைசி நாள் நீட்டிப்பு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த மாநில அளவிலான குறும்படப் போட்டியை தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. இந்த குறும்படப் போட்டிக்கான தலைப்புகள், விதிமுறைகள், சமர்பிப்பதற்கான காலக்கெடு, பரிசுத் தொகை, நடுவர் குழு விவரம் உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக காணலாம்.

Written By Sudharsan G
Published: Oct 11, 2026, 02:32 PM IST | Updated: Oct 11, 2026, 03:10 PM IST
Join

Tamil Nadu Police, Short Film Competition: தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்குவது மற்றும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களில் காவல்துறையின் வெளிப்படையான செயல்பாட்டை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்ற தினத்தில் அவரது முதல் மூன்று அறிவிப்புகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குறித்து அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. ஆட்சியமைத்த ஒரு மாதத்திலேயே ஜூன் 9ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யால், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது.

மேலும் ஆபத்து நேரங்களிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பதிவு செய்ய 1901 என்ற கட்டணமில்லா அலைபேசி எண் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த அதிகளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

குறும்படப் போட்டி அறிவிப்பு

அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF), தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக மாநில அளவிலான குறும்படப் போட்டியை நடத்துகிறது.

இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் தங்களது பங்கு மற்றும் பொறுப்பை உணர அவர்களை ஊக்குவிப்பதே இக்குறும்படப் போட்டியின் நோக்கமாகும்.

குறும்படப் போட்டிக்கான தலைப்புகள்

குறும்படங்கள் சில தலைப்புகளை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட வேண்டும். மூன்று ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன, அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து குறும்படமாக தயாரிக்கலாம்.

குறும்படங்களுக்கான விதிமுறைகள்

மேலும் படிக்க | கிலோ வெங்காயம் ரூ.35.. ரேஷன் கடையில் எத்தனை முறை வாங்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு!

குறும்படத்தை சமர்பிப்பது எப்படி?

அதேநேரத்தில், முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட பதிவுக்கான கூகுள் படிவத்தை https://bit.ly/SSF-ShortFilmCompetition என்ற இணைப்பில் சமர்ப்பிக்க வேண்டும்.

காலக்கெடு நீட்டிப்பு

பங்கேற்பாளர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பதிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் அக். 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நடுவர் குழு

குறும்படப் போட்டியில் வெற்றியாளர்களை தேர்வு செய்யும் நடுவர் குழு மற்றும் உறுப்பினர்களை இங்கு காணலாம்.

இயக்குநர்/நடிகர் ரேவதி (தலைமை நடுவர்)

உறுப்பினர்கள்

பரிசுத் தொகை விவரம்

மேலும் படிக்க | TN Shutdown: தமிழகத்தில் நாளை (அக்., 12) மின்தடை.. எங்கெல்லாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES