SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரூ.7,000 கோடி பட்டாசு விற்பனை... அடுத்தாண்டு ரூ.10 ஆயிரம் கோடி டார்கெட் - மகிழ்ச்சியில் சிவகாசி

நாடு முழுவதும் நடப்பாண்டின் சிவகாசி பட்டாசு வர்த்தகம் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடந்துள்ள நிலையில், சரவெடி பட்டாசு தயாரிப்புக்கு அனுமதி கிடைத்திருப்பதால் அடுத்தாண்டு உற்பத்தி இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written By Sudharsan G
Published: Nov 08, 2026, 01:33 PM IST | Updated: Nov 08, 2026, 01:38 PM IST
Image Credit: Sivakasi Crackers | Image Source : X
Join

முழுவதும் நடப்பாண்டு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 10 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு உயரும் என எதிர்பார்ப்பதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் எதிர்பார்க்கின்றனர்.

இந்தாண்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து சிவகாசி பட்டாசு வர்த்தகர்கள் சங்கத்தின் நிர்வாகி அன்பரசு கூறுகையில், "இந்தியாவின் தேவையில் 90% பட்டாசு உற்பத்தியில் பூர்த்தி செய்யும் சிவகாசியில் நடப்பாண்டு 2026ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பட்டாசு உற்பத்தி தொடங்கப்பட்ட காலகட்டத்தில் மழையின் சீதோசண சூழலினால் பட்டாசு உற்பத்தி மந்தமான நிலையிலேயே நடைபெற்றது.

மேலும் படிக்க | கையில் பிடித்து... வானில் சென்று வெடிக்கும் பட்டாசு... தமிழ்நாடு அரசு முக்கிய அட்வைஸ்

இலக்கும்... பின்னடைவும்...

பட்டாசு தயாரிப்பு வேகம் எடுத்த சமயத்தில், நடைபெற்ற விபத்துக்களைச் சுட்டிக்காட்டி  நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஆய்வினால், தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதின் காரணமாக, பட்டாசு உற்பத்தியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

நடப்பாண்டில் மட்டும் சுமாராக 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு உற்பத்தியாகும் என எதிர்பார்ப்போடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போர்ப் பதற்றத்தினால் மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற பிரச்னைகளால் பட்டாசு உற்பத்தியில் பின்னடைவு கண்டு 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பட்டாசுகள் உற்பத்தியாகி நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்து.

அடுத்தாண்டு உற்பத்தி அதிகரிக்கும்

பட்டாசு வியாபாரம் அனைத்து மாநிலங்களிலும் அமோகமாக நடைபெற்று நாடு முழுவதும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு மழை பெய்வது நன்மையா...? டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் விளக்கம்

நாடு முழுவதும் நடப்பாண்டின் பட்டாசு வர்த்தகம் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடந்துள்ள நிலையில், 8 வருடங்களுக்கும் மேலாக சரவெடிப் பட்டாசு உற்பத்திக்கும், விற்பனைக்கும் உச்ச நீதிமன்றம் தடையாணை விதித்திருந்தது.

தற்போது நிபந்தனையுடன் கூடிய சரவெடி தயாரிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், 2027ஆம் ஆண்டின் பட்டாசு உற்பத்தி அதிகரிக்கும் என்ற உறுதியுடன் பட்டாசு உற்பத்தியாளர் ரூ.10 ஆயிரம் கோடிக்கு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர்" என்றார்.

மேலும் படிக்க | CM Vijay Diwali Wish: “பாதுகாப்பாக கொண்டாடுங்கள்”.. தீபாவளி வாழ்த்து கூறிய முதல்வர் விஜய்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES