• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /மதுரையில் 52 ஆயிரம் போதை மாத்திரைகள்... 2 பேர் கைது - சிக்கியது எப்படி?

மதுரையில் 52 ஆயிரம் போதை மாத்திரைகள்... 2 பேர் கைது - சிக்கியது எப்படி?

மதுரையில் 52 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாத்திரைகள் வாங்கப்பட்டது எப்படி, விற்பனை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Written BySudharsan G
Published: Nov 08, 2026, 10:58 AM IST|Updated: Nov 08, 2026, 11:04 AM IST
joinshare
மதுரையில் 52 ஆயிரம் போதை மாத்திரைகள்... 2 பேர் கைது - சிக்கியது எப்படி?
Image Credit: Madurai Drug Seized | Image Source : X/@tnpoliceoffl

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
உயிரிழந்த பிறகு தேர்தலில் வெற்றி... 3 மாத குழந்தையின் தாய் மரணம்

உயிரிழந்த பிறகு தேர்தலில் வெற்றி... 3 மாத குழந்தையின் தாய் மரணம்

2

மதுரையில் 52 ஆயிரம் போதை மாத்திரைகள்... 2 பேர் கைது - சிக்கியது எப்படி?

3

கையில் பிடித்து... வானில் சென்று வெடிக்கும் பட்டாசு... தமிழ்நாடு அரசு முக்கிய அட்வைஸ்

4

CSK ரசிகர்களே... தீபாவளிக்கு வந்த குட் நியூஸ்... அக்சர் படேல் போட்ட இன்ஸ்டா பதிவு வைரல்

5

தீபாவளிக்கு மழை பெய்வது நன்மையா...? டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் விளக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மதுரையில் 52 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்ட காவல்துறை அளித்த தகவலின்படி, மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் பகுதியில் எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும்; அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை நிறுத்தி சோதனையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தீபாவளிக்கு ஊருக்கு போக டிக்கெட் போடலையா... இதோ Unreserved ரயில்கள் அறிவிப்பு

50 ஆயிரத்திற்கும் மேலான போதை மாத்திரை

அதில், அவர்கள் இருசக்கர வாகனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது என்றும்; இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, அவர்களை மதுரை விளாச்சேரி பகுதிக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டதாகவும், அப்போது முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை மீட்டு எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Drive Against Drugs (DAD) மதுரை மாநகரம் : 52,000 போதை மாத்திரைகள் பறிமுதல் – இருவர் கைது! Madurai City: 52,000 Drug Pills Seized – Two Arrested! https://t.co/MRA2qGXvRd

— Tamil Nadu Police (@tnpoliceoffl) November 7, 2026

2 பேர் கைது... ரூ.400-க்கு விற்பனை

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போதை மாத்திரை கடத்தலில் தொடர்புடைய மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த சுகந்த கணேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஜெயபாரதி ராஜா ஆகிய இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் ஒரு மாத்திரை 400 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகத் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. நவம்பர் 9 முதல் தங்க அனுமதியில்லை.. அதிரடி அறிவிப்பு

போதை மாத்திரைகளால் வரும் பாதிப்பு

இதுகுறித்து மதுரை தெற்கு துணை ஆணையாளர் இனிகோ திவ்யன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர்:

  • காவல்துறையின் வழக்கமான வாகனத் தணிக்கையின் போது இந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இக்குற்ற வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்த மாத்திரைகள் அனைத்தும் இணையதளம் வழியாக வாங்கப்பட்டுள்ளது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் இந்த மாத்திரைகளை யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளார்கள் என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து தீவிர விவரங்களைச் சேகரித்து வருகிறோம்.
  • போதை மாத்திரைகளைப் பயன்படுத்துவதும், விற்பனை செய்வதும் மிகக் கடுமையான குற்றமாகும். இந்த மாத்திரங்களைப் பயன்படுத்தும்போது மனிதர்கள் சுயநினைவை இழந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட நேரிடுகிறது.
  • எனவே, யாராக இருந்தாலும் இதுபோன்ற ஆபத்தான மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டாம். இது உடல் நலத்தைப் பாதிப்பதுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் முற்றிலுமாகச் சீரழித்துவிடும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | தீபாவளி: மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த ரூட்டில் செல்ல தடை.. வாகன ஓட்டிகளே அலர்ட்

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime