• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /செப்டம்பர், அக்டோபரில் எந்தெந்த ரயில் சேவைகளில் மாற்றம்...? தெற்கு ரயில்வே அறிவிப்பு

செப்டம்பர், அக்டோபரில் எந்தெந்த ரயில் சேவைகளில் மாற்றம்...? தெற்கு ரயில்வே அறிவிப்பு

Southern Railway : வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எந்தெந்த ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது என்பதை தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த முக்கிய அறிவிப்பை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 06, 2026, 07:16 PM IST|Updated: Sep 06, 2026, 07:29 PM IST
joinshare
செப்டம்பர், அக்டோபரில் எந்தெந்த ரயில் சேவைகளில் மாற்றம்...? தெற்கு ரயில்வே அறிவிப்பு
Image Credit: Southern Railway | AI Generated Image - ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி: மொபைல் போன் மூலம் நொடிகளில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி?

ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி: மொபைல் போன் மூலம் நொடிகளில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது எப்படி?

2

இனி திமுகவால் ஜெயிக்கவே முடியாது... அடித்துச் சொல்லும் அமைச்சர் விஸ்வநாதன்

3

அக்.26ம் தேதி உருவாகிறது 'அர்னாப்' புயல்.. தமிழகத்திற்கு ஆபத்தா? வானிலை மையம் எச்சரிக்கை!

4

'உங்கள் மக்களின் பாதுகாப்பை முதலில் உறுதி செய்யுங்கள்": ஐ.நா-வில் பாகிஸ்தானுக்கு பாடமெடுத்த இந்தியா

5

ஊருக்கு போறீங்களா? இன்று முதல் சிறப்பு பேருந்துகள்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Southern Railway : தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், சில ரயில் சேவைகள் முழுமையாகவும், சில ரயில் சேவைகள் பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சில ரயில்களின் வழித்தடத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | 2029 பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான், இதில் சந்தேகமில்லை: வைத்திலிங்கம் எம்பி

முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகள்

1. நெல்லை - திருச்செந்தூர்

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை (ரயில் எண்: 56003) மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும். இந்த ரயில் செப்டம்பர் 22, 23, 24, 25, 28, 29, 30 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

2. திருச்செந்தூர் - நெல்லை

திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் (ரயில் எண்: 56004) திருச்செந்தூரில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும். இந்த ரயில் வரும் செப்டம்பர் 22, 23, 24, 25, 28, 29, 30  ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

CHANGE IN TRAIN SERVICES !

Due to maintenance work the following changes are made in train services.

Passengers, are requested to plan your travel accordingly.#SouthernRailway #IndianRailways pic.twitter.com/QMfxjKihrI

— DRM MADURAI (@drmmadurai) September 4, 2026

பகுதியளவு ரத்து செய்யப்படும் ரயில் சேவைகள்

  • மதுரை சந்திப்பில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி காலை 7 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (ரயில் எண்: 56711) வரும் செப்டம்பர் 8, 15, 22, 24, 25, 29 ஆகிய நாட்களில் மண்டபம் - ராமேஸ்வரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
  • ராமேஸ்வரத்தில் இருந்து (வழக்கமாக மண்டபத்தில் இருந்து) மதுரைக்கு பகல் 11.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் (ரயில் எண்: 56714) வரும் செப்டம்பர் 8, 15, 22, 24, 25, 29 ஆகிய நாட்களில் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
  • செங்கோட்டையில் இருந்து திரநெல்வேலிக்கு வரும் பயணிகள் ரயில் (ரயில் எண்: 56742) வரும் செப்டம்பர் 22, 23, 24, 25, 28, 29, 30 ஆகிய நாட்களில் சேரன்மகாதேவி - திருநெல்வேலி வரை பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காலை 10 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும். சேரன்மகாதேவி வரை மட்டுமே வரும்.
  • திருநெல்வேலி சந்திப்பில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் ரயில் (ரயில் எண்: 56743) வரும் செப்டம்பர் 22, 23, 24, 25, 28, 29, 30 ஆகிய நாட்களில் திருநெல்வேலி - சேரன்மகாதேவி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. அதாவது இந்த ரயில் சேரன்மகாதேவியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும்.

வழித்தட மாற்றம்

1. செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்

  • செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்: 16848) வரும் செப்டம்பர் 10 மற்றும் 24 ஆகிய நாட்களில் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.
  • எங்கெல்லாம் நிற்காது: கொடை ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை.
  • கூடுதல் நிறுத்தங்கள்: மானாமதுரை, சிவகங்கை, தேவக்கோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர்.

மேலும் படிக்க | கோயில்களில் செல்போன் தடை: பக்தர்கள் கடும் அதிருப்தி - மறுபரிசீலனை செய்யுமா தமிழக அரசு?

2. நாகர்கோவில் - லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ்

  • நாகர்கோவிலில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் வரும் செப்டம்ப் 10 மற்றும் 24 ஆகிய நாட்களில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றிவிடப்படுகிறது.
  • எங்கெல்லாம் நிற்காது: மதுரை, திண்டுக்கல்
  • கூடுதல் நிறுத்தங்கள்: மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை.

3. நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ்

  • நாகர்கோவில் நகரில் காலை 8 மணிக்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்: 16321) வரும் செப்டம்பர் 14, 19, 21, 22 மற்றும் அக்டோபர் 5, 6, 8, 9 ஆகிய நாட்களில் விருதுநகர், காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்கிறது.
  • எங்கெல்லாம் நிற்காது: திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, சோழவந்தான், கொடை ரோடு, அம்பத்துரை, திண்டுக்கல், எரியேடு, பாளையம்.
  • கூடுதல் நிறுத்தங்கள்: மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை.

4. நாகர்கோவில் - காச்சிகுடா எக்ஸ்பிரஸ்

  • நாகர்கோவிலில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்: 16354) செப்டம்பர் 5, 19 ஆகிய நாட்களில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி சந்திப்பு வழியாக இந்த ரயில் செல்லும்.
  • எங்கெல்லாம் நிற்காது: மதுரை சந்திப்பு, திண்டுக்கல்.
  • கூடுதல் நிறுத்தங்கள்: மானாமதுரை, காரைக்குடி

5. நாகர்கோவில் - காச்சிகுடா எக்ஸ்பிரஸ்

  • நாகர்கோவிலில் இருந்து காலை 9.25 மணிக்கு புறப்படும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண்: 16354) வரும் செப்டம்பர் 26 மற்றும அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் திண்டுக்கல், கரூர் வழியாக திருப்பிவிடப்படும்.
  • எங்கு நிற்காது: திருச்சி சந்திப்பு.

இதனால், ரயில் பயணிகள் இதற்கேற்ப தங்களின் பயணங்களை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் படிக்க | தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் இன்று மழை பெய்யுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:
Southern Railway