• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள்.. பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு!

பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள்.. பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு!

Pournami Special Trains, Buses: வார இறுதி நாட்கள், பௌர்ணமியை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள், பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு செல்வோர் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Sep 24, 2026, 01:33 PM IST|Updated: Sep 24, 2026, 01:56 PM IST
joinshare
பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள், ரயில்கள்.. பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு!
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Pournami Special Trains, Buses: ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு திருவண்ணாமலை கிரிவலம் செல்வது பக்தர்களின் வழக்கமாகும். அந்த வகையில், செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி பௌர்ணமி வருகிறது. இந்த நாளில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வார்கள். இதனால், பேருந்துகள், ரயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இதனை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும், தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளையும் இயக்குவதாக அறிவித்துள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 25ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 1,035  பேருந்துகளும், செப்டம்பர் 26ஆம் தேதி அன்று 760 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 25ஆம் தேதி அன்று 210 பேருந்துகளும், செப்டம்பர் 26ஆம் தேதி 180 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து செப்டம்பர் 25,26 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 145 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை.. சிறப்பு வகுப்புகள் நடத்த தடை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் செப்டம்பர் 27ஆம் தேதி 875 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 14224 பயணிகளும் சனிக்கிழமை அன்று 6774 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9881 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். 

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. முகக்கவசம் அணிவது கட்டாயம்.. தமிழக அரசு அதிரடி

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பௌர்ணமியை முன்னிட்டு, விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி காலை 10.10 மணிக்கு விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் ரயில் பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில்  திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில், மறுமார்க்கத்தில் பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடைகிறது.  இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர, அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில நிலையங்களில் நின்று செல்கிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

மேலும் படிக்க: பெண்களுக்கு பணியிடத்தில் மாதவிடாய் விடுப்பு: குழு அமைத்து பரிசீலிக்கும் தமிழக அரசு
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu