• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி விவகாரம்.. திமுக நிர்வாகி கைது!

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி விவகாரம்.. திமுக நிர்வாகி கைது!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக எழுந்த புகாரில், திமுக நிர்வாகி ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

Written ByR Balaji
Published: Oct 01, 2026, 05:23 PM IST|Updated: Oct 01, 2026, 05:27 PM IST
joinshare
ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி விவகாரம்.. திமுக நிர்வாகி கைது!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
‘சிக்மா’ ரிலீஸ்..ஜேசன் சஞ்சய்க்கு ஜோதிகா வாழ்த்து! என்ன கூறியிருக்கிறார்?

‘சிக்மா’ ரிலீஸ்..ஜேசன் சஞ்சய்க்கு ஜோதிகா வாழ்த்து! என்ன கூறியிருக்கிறார்?

2

விஜய் நினைப்பது வேறு, நடப்பது வேறு.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

3

Explained : மரண தண்டனை..2 முறை விஷ ஊசி போட்டும் சாகாத பெண்! என்ன காரணம்?

4

ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி விவகாரம்.. திமுக நிர்வாகி கைது!

5

Explainer: LPG சிலிண்டர் மகிழ்ச்சி செய்தி... தொடரும் மானியம், மத்திய அமைச்சரவை ஒப்புதல்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

திருச்சி ஸ்ரீரங்கம் நங்கநாதர் கோயிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் ரூ. 50 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பான முறைகேடு புகாரில், திமுக நிர்வாகி ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 7,515 சதுர அடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராம்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகே கட்டடத்துடன் அமைந்துள்ள குறிப்பிட்ட நிலம், கோயிலுக்கு சொந்தமான பெரிய நிலப்பரப்பின் ஒரு பகுதியாக இருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 5.87 ஏக்கர் பரப்பிலான இந்த சொத்தில் இருந்து 7,515 சதுர அடி நிலம் தொடர்பாக கடந்த 2022ம் ஆண்டு பத்திரப்பதிவு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கோயில் நிர்வாகத்தின் ஆவணங்களின்படி, அந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானது என்றும், அதை உரிமையில்லாத நபர்கள் போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் ராம்குமார் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

6 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த விவகாரம் தொடர்பாக ராம்குமார், சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்த சிலர் உள்ளிட்ட 6 பேர் மீது மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்களை பயன்படுத்துதல் மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிலத்தில் திமுக அலுவலகம் செயல்பட்டு வருவதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும், ஆவணங்கள் தயாரிப்பதற்கு உதவியதாக கூறப்படும் நபர்களின் பங்கு குறீத்தும் போலீசார் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்ஜாமீன் முயற்சி

வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற சூழலில், ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வழக்கை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ராம்குமார் தரப்பு பின்னர் வாபஸ் பெற்றதை தொடர்ந்து நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. கீழமை நீதிமன்றத்தில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்த பிறகு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அவரது வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் ரமேஷ் கூறியது என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முன்பு பேசியபோது, சம்பந்தப்பட்ட நிலம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமானது என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். கோயில் நிலத்தின் உரிமை தொடர்பாக பழைய ஆவணங்கள் இருப்பதாகவும் அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளதால், 7,515 சதுர அடி நிலம் தொடர்பான பத்திரப்பதிவு மற்றும் ஆவணங்கள் குறித்த போலீஸ் விசாரணை அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu